nesaganam 24 * 7

சிலம்பம் பயிற்சி

தன்னம்பிக்கை தரும் சிலம்பம்!
தமிழ் வீரம்

சிலம்பம்… தமிழர்களின் வீர விளையாட்டு… பாரம்பரியப் பெருமை மிக்கது… முக்கியமாக மிகச்சிறந்த தற்காப்புக்கலை. சிலம்பம் அறிந்தவர் கையில் ஒற்றைக் கம்பு இருந்தாலே போதும்… எத்தனை பேர் தாக்க வந்தாலும் தப்பித்துவிடலாம். இது காலம்காலமாக மக்கள் மனதில் ஊறிப் போயிருக்கும் நம்பிக்கை… உண்மையும் கூட. தமிழர் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் கையில் எடுத்தது கம்பு என்கிறது வரலாறு. அதுதான் ‘சிலம்பக்கலை’யாக வளர்ந்தது. காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம்!

5 ஆயிரம் ஆண்டு பழம்பெருமை வாய்ந்தது சிலம்பக்கலை. தமிழக அரசு இதை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்திருக்கிறது. இன்றைக்கு ஆண்களோடு பெண்களும் இக்கலையை ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறார்கள்.
இன்றைய சமூதாயத்தில் சிலம்பம் யாரும் கற்று கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை, எல்லாரும் தங்களுடைய குழந்தைகளை செஸ்,கேரம் உள்ளிட்ட உள் அரங்கு விளையாட்டுகளியே கவனம் செலுத்துகின்றனர்.

இந்த சிலம்பாட்டம் என்பது பாராம்பரிய விளையாட்டுகளில் ஒன்று.இந்த சிலம்பாட்ட விளையாட்டின் மூலம் மன ரீதியகவும் ,உடல் ரீதியாகவும் குழந்தைகள் வலிமை பெறுகின்றனர்.