DIGITAL MEDIA – படைப்பாளர்கள் வளர்ச்சியில் டிஜிடல் மீடியா

0
177

‘தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ நான்காம் சந்திப்பு; விழாத் துளிகள்!

தமிழில் வரக்கூடிய வார – மாத இதழ்களில், தினசரி பத்திரிகைகளின் இணைப்பிதழ்களில் வாசகர் கடிதம், நகைச்சுவை, கவிதை, சிறுகதை, நாவல் என எழுதிவருகிற படைப்பாளர்கள் தங்களுக்குள் கலந்து பழகுவதற்காக, பேனா நட்பை பலப்படுத்திக் கொள்வதற்காக ‘தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்கள். படைப்பாளர்கள் தங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு டிஜிடல் மீடியாக்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி வழிகாட்டினார் காரைக்கால் படைப்பாளர், வானொலி அறிவிப்பாளர் பிரபாகர்!