96 திரை விமர்சனம்

0
202

காரைக்கால் கே.பிரபாகரன்

#96

யாருப்பா அது ச.பிரேம் குமார்

படம் எடுக்க சொன்னா ஒவ்வொரு சீன்லயும் மனசை அடுப்புல, சூடான சட்டியில போட்ட வெண்ணையாட்டம் உருக வச்சது?

எதுவும் எங்க கடந்த கால நினைவுகள் குறித்த காலக்கணக்கிலும் படம் சரியாக பொருந்திவிட்டது…

ஆரம்பத்தில் நன்றி டைட்டில் கார்டில் இயற்கைக்கு நன்றி என்று சொல்லப்பட்டது ஏன் என்று முதல் பாடலிலேயே புரிந்து விட்டது.

கோவிந்த் வசந்தா இசை
நவீன இசைக்கருவிகளின் ஆர்ப்பாட்டமில்லாமல் மெல்லிசையாய் மனம் வருடி இதயத்தை கடந்த காலங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

இளையராஜா ஜானகி கூட்டணியில் உருவான பாடல்கள் பாடப் படும்போது
நம் ரசனையின் உச்சகட்ட நிலையில் சொக்கி விடுகிறோம்…

வினோத் ராஜ்குமாரின் கலை வண்ணம் எண்ணத்தை கவர்ந்திழுத்து ரசிக்க வைக்கிறது.

டைட் குளோசப்ல இந்த நடிப்பு நடிக்கிறதுக்கு தமிழ் சினிமாவுல முதல் சாய்ஸ் இப்ப விஜய் சேதுபதி தான்…

வாழ்ந்திருக்காரு மனுஷன்.

த்ரிஷா காதல் தேவதை,அழகோவியம்,
அழுது அழவைத்து கண்ணீர் காவியமே படைத்துவிட்டார்,

ஆனா அழ அழ மனசு லேசாகும்!

உடன் நடித்த ஒவ்வொருவருமே நமக்கு மிக நெருக்கமானவர்களாக தோன்றுகிறார்கள்…

ஒளி ஒலி எல்லாமே டாப்பு!

அழகிக்குப் பிறகு லவ் சப்ஜக்ட்ல எல்லோரையும் திரையரங்கில் உறைய வைத்த படம் இதுதான்.

எல்லா படத்துலயும் நல்ல காட்சி வந்தா கைதட்டுவாங்க,
சத்தம் போடுவாங்க!

ஆனா இந்த படத்துல எல்லோரும் ஓன்னு அழறாங்க!

இந்த கண்ணீர்
காதலாகி கசிந்து வர
96 க்கு

100 மார்க் அல்ல

1000 மார்க்!

நான் சொன்னதுக்காக DVD கடைக்கு போயிடாதிங்க…

தியேட்டருக்கு போங்க!

– கே.பிரபாகரன்