மேற்கு தொடர்ச்சி மலைகள் – பார்த்தவர் கருத்து

0
162

90களின் தொடக்கத்தில் ஏற்பட்ட உலகமயமாக்கல் இந்திய மக்களின் வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடு பிடிங்கி எறிந்த வரலாற்றை அர்த்தங்களுடன் பதிவு செய்துள்ள லெனின் பாரதிக்கு வாழ்த்துக்கள்!

தன்னை அடையாளம் கண்டு கொண்ட தமிழ்ச் சினிமாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இப்படியொரு சினிமா தயாரித்த விஜயசேதுபதிக்கு நன்றிகள்…

இசை என்பது ஆர்பாட்டமல்ல அமைதி காப்பதும்தான் என்பதை மீண்டுமொரு முறை உலகிற்குக் காட்டியுள்ள இசைஞானிக்கு வணக்கங்கள்…

எளிய மக்களின் வாழ்க்கையை ஒழிந்திருந்து படம்பிடித்தது போல் யதார்த்தம் குலையாமல் படம் பிடித்த தேனி ஈஸ்வருக்கும் எம் வாழ்த்துக்கள்…

இந்தியாவின் அகதிகளாக வாழ்ந்துக் காட்டிய மக்கள் நடிகர்கள் அனைவருக்கும் எம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்…

நண்பர்கள் அன்பர்கள் கண்டிப்பாகத் திரையரங்கம் போய் படத்த பாருங்க..

பெருமையோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ரசிங்க

நன்றி
நெல்லை பாலா…