மாசற்ற தேசத் தலைவனுக்கு…நேச அஞ்சலி

0
212

காவியல்ல நீ
கவி

மனிதனை மதம்
கடந்து
நேசித்தவன் நீ

தேசத்தின்
ரத்த ஓட்டம்
சாலைகள் தான்
என்று
யோசித்தவன் நீ

பகை கொண்டு
வந்தாலும்
பண்பை
போதித்தவன்
நீ

உன்னை
வெறுத்தவன்
யாருமில்லை

நாடாண்ட
நல்லவனே

பொக்காரனில்
அணுவை சோதித்த
வல்லவனே

மக்களுக்கு
தொல்லை தரும்
பார்வைகள்
நீ பார்த்ததில்லை

நீ
கண்டதெல்லாம்
தொலைநோக்குப் பார்வை

கார்கில் எல்லையிலும்
காலம் உன்
வெற்றியை பேசும்…

நாற்கர சாலையெங்கும்
உன் தங்க மன
வாசம் வீசும்!

உன்னைப் போல்
ஒரு தலைவன்
இந்தியாவில் யாருமில்லை…

வானவர் நாட்டை நீ
சரி செய்யப் போனாயா?
மாணவர் ஏட்டில் தான்
இனி உன் பாடம்
படிப்போமா?

மத்திய பிரதேசம்
தந்த
மாசற்ற மன்னவனே
எம்
மனசின்
மத்தியப் பிரதேசமெல்லாம்
உன் நினைப்பு
மண்டி இருக்குதய்யா!

களங்கமில்லா உன்
சிரிப்பை
காணமல்
தேசமும்தான்
கருப்பு தினத்தில் இன்று
கலங்கிக் கிடக்குதய்யா!

காரைக்கால் கே.பிரபாகரன்