உலகத்தமிழர்களின் கலைமேடை 24/7
SMART APPLICATION
download download (2) aap

நேசத்தை பற்றி

எங்களைப் பற்றி

நேசகானத்தின் நேற்று இன்று நாளை
நேசகானத்தின் நேற்று:

640 - 427 pix frame 11 12

நேசகான துவக்கவிழா காட்சிகள்


815161720231813
நேசகான இணைய வானொலி
நேசகானம் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இணைய வானொலி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஊடகங்களால் அடையாளம் காணாப்படாமல் இருக்கும் பல்லாயிரம் இளம் கலைஞர்களை உலகம் அறிந்திட நேசகானம் உலகத் தமிழர்களின் கலை மேடை என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகிறது. “நாங்க பேசுறோம் !நீங்க கேளுங்க!” என்ற வாசகத்தை மாற்றி நீங்களும் எங்களோடு பேசுங்க உலகம் உங்களை உற்று நோக்கட்டும் என்ற அடிப்படையில் நேசகான இணைய வானொலி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக தமிழர்கள் ஒன்று சேர ஊடகங்கள் பல அறிந்திட நேசகான இணைய வானொலிக்கான துவக்கவிழா நடத்தப்பட்டு நேசகானம் உலக அளவில் வலம் வருகிறது.
வானொலி என்றால் திரைப்பாடல்களும், பொழுதுப்போக்கு அம்ச நிகழ்ச்சிகளும் மட்டும் தான் என்ற நிலையை மாற்றி பல்வேறு வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் நேசகான இணைய வானொலியின் வழியாக உலக தமிழ் நெஞ்சங்களை தஞ்சம் அடைகிறது. தென்னிந்திய மொழிப்பாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பலதுறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக பேட்டி கண்டு நிகழ்ச்சியாக்குதல். முகநூல் நெஞ்சங்களை நேசகானத்தில் பங்கு கொள்ள செய்து நிகழ்ச்சிகளாக்குதல் நேசகானத்திற்காக பிரத்யேகமாக உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் மாவட்ட வாரியாகவும் நிருபர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நேசகான இணைய வானொலி பயனுள்ள புதுமுயற்சியிலான பல்வேறு நிகழ்ச்சிகளை உலகிற்கு வழங்கி வருகிறது.

22914

நேசகானத்தின் – நேசக்கரங்கள்:
நேசகானத்தின் நேசக்கரங்கள் என்ற சேவை அமைப்பு இயங்கி வருகிறது. நேசக்கரங்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து மாவட்ட வாரியாக சேவைப்பணிகளை செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண உதவிகளை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நிவாரண உதவிகளை செய்தது. இந்த வெள்ள நிவாரண உதவிகளை செய்ததால் நேசகானம் உள்ளம் நெகிழ்ந்தது. இந்த அரிய பணியை செய்ய உலக அளவில் உள்ள நேசகான நெஞ்சங்கள் பலர் நேசத்தோடு கை கோர்த்தனர்.
நேசகானத்தின் நாளை :

ஒலி உலகில் புதிய சாதனைகள் படைக்க
நேசகானம் தீட்டியிருக்கும் திட்டங்கள் :
உலகெங்கும் உள்ள ஆர்வலர்களை கொண்டு ஒலி புத்தகங்களை நேசகானம் வெளியிட உள்ளது.
தமிழ் மொழியில் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்புகள் நேசகானத்தின் மூலமாக ஒலி ஆவணங்களாக உருவாக்கப்பட இருக்கின்றன.
இளம் கலைஞர்களுக்கு அவர்களின் கலைப்பயணத்தின் நுழைவாயிலாக நேசகானம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இளம் தொழில் முனைவோர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
உலகெங்கிலும் இருக்கிற தமிழ் மக்களின் பல்வேறு அமைப்புகள் நேசகானத்தில் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளன.
உலகெங்கும் உள்ள தன்னார்வ சேவை நிறுவனங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை நேசகானம் அமைக்கும்.
குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக, இல்லத்தரசிகளுக்காக என அனைத்து தரப்பினர்களுக்காகவும் நேசகானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகெங்கும் ஒலி உலா வரும்.
விளம்பர ஒலி ஒளி தயாரிப்புகளை நேசகானம் பிரத்யேகமாக மிகக்குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் செய்து வழங்கும்.
பார்வையற்றோர்களுக்காக ஒலி ஆக்கங்களை நேசகானம் தயாரிக்கும்.
வாழ்த்து செய்திகள் உலகின் கவனத்தை கவரும் வண்ணமாக நேசகானத்தின் மூலமாக வழங்கப்படும்.
நாடகங்கள், பட்டிமன்றங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவை ஒலி குறுந்தகடுகளாக தயாரித்து வழங்கப்படும்.
கலை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் குடும்பத்தலைவிகள் அனைவரின் ஆக்கங்களையும் நேசகானம் வரவேற்கிறது. உங்கள் கலைத்திறனுக்கு ஏற்றதொரு மேடையாக உங்கள் ஆக்கங்களை வரவேற்று ஊக்கப்படுத்த நேசத்துடன் காத்திருக்கிறோம்.
இணைய வானொலி நிகழ்ச்சிகள் ஒலிப்புத்தங்கள், புத்தகங்கள், ஓவியங்கள் என அனைத்து கலைப்படைப்புகளையும் நேர்த்தியுடன் உலகத்தமிழர்களுக்கு அளிக்க நாம் திட்டமிட்டு செயல்படுவோம்.
கூடுகள் தாண்டி எல்லைக்கோடுகள் தாண்டி நேசவானில் சிறகடிப்போம்.

நேசமுடன்
கே. பிரபாகரன்
நேசகானம்
மின்னஞ்சல் :admin@nesaganam.com,
prabak78@gmail.com 

nesammedia@gmail.com

செல் : 9488992571
வாட்ஸ்அப் : 9488992571

படைப்பாளிகள் தொடர்புக்கு :
கே. பிரபாகரன்
11, அரசு மருத்துவமனை தெரு,
நெடுங்காடு 609 603.
காரைக்கால் மாவட்டம்.
IMG-20160114-WA0014