நேசகான இணைய வானொலி

0
340

நேசகான இணைய வானொலி
நேசகானம் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இணைய வானொலி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஊடகங்களால் அடையாளம் காணாப்படாமல் இருக்கும் பல்லாயிரம் இளம் கலைஞர்களை உலகம் அறிந்திட நேசகானம் உலகத் தமிழர்களின் கலை மேடை என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகிறது. “நாங்க பேசுறோம் !நீங்க கேளுங்க!” என்ற வாசகத்தை மாற்றி நீங்களும் எங்களோடு பேசுங்க உலகம் உங்களை உற்று நோக்கட்டும் என்ற அடிப்படையில் நேசகான இணைய வானொலி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக தமிழர்கள் ஒன்று சேர ஊடகங்கள் பல அறிந்திட நேசகான இணைய வானொலிக்கான துவக்கவிழா நடத்தப்பட்டு நேசகானம் உலக அளவில் வலம் வருகிறது.
வானொலி என்றால் திரைப்பாடல்களும், பொழுதுப்போக்கு அம்ச நிகழ்ச்சிகளும் மட்டும் தான் என்ற நிலையை மாற்றி பல்வேறு வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் நேசகான இணைய வானொலியின் வழியாக உலக தமிழ் நெஞ்சங்களை தஞ்சம் அடைகிறது. தென்னிந்திய மொழிப்பாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பலதுறை சார்ந்த வல்லுநர்களை நேரடியாக பேட்டி கண்டு நிகழ்ச்சியாக்குதல். முகநூல் நெஞ்சங்களை நேசகானத்தில் பங்கு கொள்ள செய்து நிகழ்ச்சிகளாக்குதல் நேசகானத்திற்காக பிரத்யேகமாக உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் மாவட்ட வாரியாகவும் நிருபர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நேசகான இணைய வானொலி பயனுள்ள புதுமுயற்சியிலான பல்வேறு நிகழ்ச்சிகளை உலகிற்கு வழங்கி வருகிறது.