நமிநந்தியடிகள்

0
149

63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.

இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள இறைவன் #அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்வதும் வழக்கம். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார் நமிநந்தியடிகள்.

கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டிருந்தது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா எனப் பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வந்தோமானால் நன்றாக இருட்டிவிடும்.
அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்குச் சென்று சிறிது நெய் கேட்டார்.

அந்தக்காலத்தில் கோயிலைச்சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள்,

“கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா?
தீயின் ஒளியே போதுமே.
ஒருவேளை,
அப்படியும் நீர் விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து விள்க்கை ஏற்றுவது தானே?’என இழித்துப்பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,

“இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்கச் சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர்.
இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?’
என அழுது புலம்பினார்.

அப்போது இறைவன் அசரீரியாக,

“அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது கருவறைமுன் விளக்கேற்று’
எனக் குரல் கேட்டது.

இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த மனமகிழ்ச்சி ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி விளக்கினைத் தூண்டிவிட்டார். விள்க்கு முன்பை விடப் பலமடங்கு பேரொளியோடு எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி விளக்கை ஏற்றினார்.

கோயில் முழுவதும் கதிரொளி போல் ஒளிர்ந்தது. இதைக் கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலைக் கண்டு வியப்படைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் இறைப்பற்றை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான்.

63 நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்பட இந்நிகழ்வு ஏதுவாயிற்று.

#தஞ்சாவூருக்குமுன்னோடி.

அரநெறியப்பர் (அசலேஸ்வரர்)

இங்கு இறைவன் மேற்கு நோக்கிய தான்தோன்றியாக அருள்புரிகிறார்.
#கோயில்_கருவறைமாடத்தின்நிழல்_கிழக்குத்திசையில்_மட்டும்விழும். மற்ற திசைகளில் விழாது.

Sankaran Nsk