நட்பு – கவிதை | சு .சித்ரா

0
5965

நட்பு உலகிலே உன்னதமானது
நாம் சுவாசிக்கும்
காற்று போல்
நம்மை சூழ்ந்திருக்கும்
முகம் பார்க்கும்
கண்ணாடி போல்
நாம் சிரித்தால்
அதுவும் சிரிக்கும்
நாம்அழுதால் அதுவும்
அழும்
அப்பழுக்கற்ற
ஆளுமைத்திறன் கொண்டது நட்பு

நல்ல நண்பனின்
அன்பு தாய்மடியின்
சுகம் தரும்…

முதல் காதல்என்றாலும்
முதல் ஏமாற்றம் என்றாலும்
நாம் பகிரத்தேடுவது
நட்பைதான்!

சகோதரிகள் திருமணங்களுக்கு
சீர்செய்ய
அண்ணனுக்கெல்லாம்
அண்ணனாக
தோள் கொடுக்கும் நட்பு…

திருநீரும் ,பிறையும் ,சிலுவையும் ஒன்று கூடும் ஒரே இடம் நட்பு
மதங்களைத் தாண்டி ஜெயித்து நிற்பது நட்பு!

நல்லதோழமை

நம் வாழ்க்கையின் வழிகாட்டி..

நாட்டின் எல்லைகள் கடந்தும்
ஆட்சிசெய்யும் நட்பு
தலைமுறைகள் கடந்தும்
தலைநிமிர்ந்து நிற்கும் நட்பு

பணிமாறுதல் காரணங்களாக

வேறு மாவட்டங்கள்
வரும்போது
வெற்றிடமான குடும்பஉறவுகளின் அனைத்து அன்பையும் எதிர்பார்பின்றி ஒருசேர தருவது
நம் நட்புமட்டுமே

பள்ளி நட்பில் தொடங்கி
நரைமுடி நட்பு வரை
தன் பேரன் பேத்தியிடம்
கூறும் அளவிற்கு

குழந்தை தனம் கொண்டது நட்பு

தனக்கு கிடைக்காத
காதல்
தன் நண்பனுக்கு கிடைத்தாலும்
தூது போகும்மனம்

கொண்டது நட்பு

ஐந்து வயதாயினும்
அறுபது வயதாயினும்
காணத்துடிக்கும்
ஒரே உறவு நட்பு

எத்தனை வயதானாலும்
காதல் குறையாதது நட்பு

தான் சிந்தும் கண்ணீர்துளிகள் தலையணைகளுக்கு
வருவதற்க்கு முன்பே
ஆறுதல் தேடும் ஒரே தோள்

நண்பனின் தோள்
அப்பப்பா எத்தனை

உருவமடா நட்புக்கு

தன் துணையுடன்
நின்றாலும்
நண்பர்களை கண்டால்
குழந்தைபோல மாற்றம் நட்புக்கே உள்ள ஓர் அணிகலன்

எத்தனையோ உயிர்கள் தூக்குகயிற்றையும்
விபரீத மரணங்களையும்
நாடாமல்

விழிநீர் துடைத்து

விழித்தெழசெய்யும் சக்தி

உடையது நட்பு

நட்பு மலர் நீர் நாட்டம் போல் இருக்கும் இடம்பெறுத்தே அமையும்

நல்ல நண்பன் இருந்தால்
நல்ல குடும்பம்
அமையும்

நல்ல நட்பு கிடைத்தால்

வானுயர வளரலாம்
நம் நல்ல நட்பே
நம் வாழ்வின் முகவரி
அனைவருக்கும் நட்புதின வாழ்த்துக்கள்

சு.சித்ரா

கோமல் – மயிலாடுதுறை.