தெய்வ மலர்கள்

0
241

தெய்வங்களுக்கு உண்டான

மலர் மாலைகள்

சூரியபகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும்;

சந்திரபகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;

செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;

ராகு பகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;

புதபகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;

சுக்கிரபகவானுக்கு மல்லிகைப்பூமாலையை அணிவிக்க வேண்டும்;

கேதுபகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;

சனிபகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்கவேண்டும்;

குருபகவானுக்கு செவ்வந்தி மாலையை அணிவிக்க வேண்டும்;

எந்த கடவுளுக்கும்
பூமாலையை வாங்கும்போது முடிந்தவரை பேரம் பேசாமல் வாங்க வேண்டும்;

தோஷநிவர்த்திக்கு என்று நவக்கிரகக் கோவிலுக்கோ அல்லது பைரவ சன்னதிக்கோ செல்லும் போது கைப்பட உரிய பூக்களை வாங்கி,தோஷமுள்ளவர் மாலையாக தங்கள் கைகளால் கோர்த்து தெய்வத்திற்கு வழங்குவது மிகவும் விஷேசம்.

முழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்;(ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)

தனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்.

வள்ளிதெய்வானை சமேத முருகக் கடவுளுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கோர்த்த மாலையை அணிவிக்க வேண்டும்;

சப்தகன்னியர்களுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் கொண்ட மாலையை அணிவிக்க வேண்டும்.

வைத்தியக் கடவுளான தன்வந்திரிக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்.

நரசிம்மருக்கு மல்லிகைப் பூ மாலையை(செவ்வரளிபூவை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;

விஷ்ணு துர்கைக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;

மஹாவிஷ்ணுவுக்கும்,ஹயக்ரீவருக்கும் துளசிமாலையை அணிவிக்க வேண்டும்;ரோஜாமாலையை(துளசியை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;

குலதெய்வம் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்;
ஜீவசமாதிகளுக்கு மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;

அம்பாளுக்கு ரோஜாமாலை அல்லது செவ்வரளி மாலையை(குஞ்சம் வைக்காமல்) அணிவிக்க வேண்டும்;

சிவபெருமானுக்கும்,சிவலிங்கத்திற்கும் மல்லிகை மாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அல்லது ரோஜாமாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அணிவிக்க வேண்டும்;

காளியம்மாள்,மாரியம்மாள்,பத்திரகாளியம்மாள்,அங்காளபரமேஸ்வரி, பூமாரி,பரமேஸ்வரியம்மாள்,முனியாத்தாள்,முனீஸ்வரி(அம்பாளின் பெயர்களில் ஒன்று),துர்கையம்மன்,பட்டத்தரசியம்மாள்,பெரியமாரி,சின்னமாரி, முத்துமாரி,மகேஸ்வரி,ஜெயமாரி,செல்லியம்மன்,செவ்வாடைக்காரி, பூவாடைக்காரி,கருமாரி,தேவி கருமாரி போன்ற உக்கிரமான பெண்தெய்வங்களுக்கு 27 அல்லது 58 அல்லது 108 எலுமிச்சைம்பழங்களால் மாலையை கட்டி அணிவிக்க வேண்டும்;

அதேசமயம்,இந்த உக்கிரமான பெண் தெய்வங்களுக்கு ஒரு போதும் ரோஜா மாலையை அணிவிக்கக் கூடாது;

ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீயோக பைரவர்,ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு ரோஜாமாலை(குஞ்சமாக அருகம்புல் வைத்து) அல்லது செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;

மிளகுவடை மாலையை செய்தும் அணிவிக்கலாம்;மிளகுவடையை எட்டின் மடங்குகளில் செய்தமாலையாகக் கோர்த்து அணிவிக்கலாம்.

தொகுப்பு :

ராமன்சேகர் மதுரை வெங்கட்