தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள்…

0
162

தாய்ப்பாலின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்துவோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாக உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை பிறந்தது முதல் 6 மாத காலம் தாய்ப்பால் மட்டுமே அதாவது எக்ஸ்க்லூசிவ்வா வெறும் தாய்ப்பால் மட்டும் றுபோதுமானது.தண்ணீர் கூட தர வேண்டியதில்லை என்று WHOவின் பரிந்துரை சொல்கிறது.

தாய்ப்பாலின் நன்மைலாம் இப்ப யாருக்கும் தெரியாமல் இல்லை. தாயப்பால் கொடுத்தா நோய் வராது போன்ற பல விஷயங்கள் எல்லோருக்குமே தெரிந்து தான் இருக்கிறது.

ஒவ்வொரு தாய்க்கும் தன் பிள்ளை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்கிற எண்ணமோ விழிப்புணர்வோ இல்லாமல் இல்லை.அதை தாண்டி இந்த ஆறு மாத காலம் பாலூட்ட ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றி அவ்வளவாக யாரும் அக்கறை செலுத்தியது போல தோன்றவில்லை.

தமிழ்நாடு, கேரளா போன்ற கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலங்களில் கூட 18-20% குழந்தைகள் மட்டுமே இந்த ஆறு மாத எக்ஸ்க்லூசிவ் பாலூட்டும் காலம் சரியான விதத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்பது சற்றே அதிர்ச்சிகரமான தகவலாகத் தான் இருக்கிறது.

சரி விழிப்புணர்வு இருந்தும் என்னென்ன காரணங்களால் இதற்கு பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

ஆணுக்கு பெண் சரி நிகராக வேலைக்கு செல்லும் காலம் இது. சம்பளத்துடன் கூடிய மெட்டர்னிட்டி விடுப்பு 3மாதம் (குழந்தை பேறுக்கு முன்) +6மாதம் (குழந்தை பேறுக்கு பின்) சட்டப்படி அளிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் 3+3=6மாதங்கள் தான் தாய்மார்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுக்கப்படுகின்றது.

குழந்தை பிறந்த பின் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும் ஆனால் குழந்தை பேறுக்குப் பின் வெறும் 3 மாத காலம் மட்டுமே விடுப்பு கிடைப்பதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு Milk Substitutes கொடுக்கப்படுகிறது. இந்த செயற்கை பால் பொருட்கள் பற்றி நீங்களே யோசிங்க மேகி போன்ற பொருட்கள் தடைக்கே நாம இப்ப தான் வந்திருக்கோம்.

அடுத்தது விடுப்பு தராத நிலைல குழந்தையை தன்னோடு தாய் அலுவலகத்துக்கு கூட்டுட்டு போற சூழல் எங்கேயாவது உண்டா? அதுவும் இல்ல. ஆறு மாதத்திற்கு பிறகு மேலும் ஒன்றரை வருடத்திற்கு தாய்ப்பால், மற்ற உணவோடு சேர்த்து கொடுத்துட்டே வரனும். அதுக்காவது க்ரச் போன்ற சூழலை கொஞ்சம் கொஞ்சமா துவங்கனும். ஆனா அதுக்கான முன்னெடுப்பு நடக்குறா மாதிரியே தெரியல.

சமீபத்திய ஒரே ஆறுதல் பேருந்து நிலையங்கள்ல தாய்ப்பால் கொடுப்பதற்கு அறைகள் கட்டப்படும்ன்னு அரசு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியது தான்.
இந்த ஆறு மாத காலத்துக்கு Milk Substitues விற்பனைகளை அரசு தடை செய்ய முன் வரனும்.இந்த கருமம் பிடிச்ச Products வாங்கிக்கொடுக்குறது தான் Good Parentingன்னு நம்மளையே நம்ப வைக்க பன்னாட்டு குப்பை நிறுவனங்களின் அநியாய விளம்பர அலப்பறைகள் வேற.

விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்துவது எந்த பலனையும் அளிக்காது என்பதற்கு இந்த விஷயம் பெரிய எடுத்துக்காட்டு. செயல்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை அரசும் தனியார் நிறுவனங்களும் செய்ய துவங்கணும். நம்முடைய சமுகம் குழந்தைகளை முன் வைத்து செல்லக்கூடிய சமுகமாக சிறிதேனும் மாற வேண்டும்.

அடுத்த தலைமுறையை ஆரோக்கியமானதாக கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. அதற்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்வோம். இயன்றவரை தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

ஊடகவியலாளர் –

சோனியா அருண்குமார்