தரங்கம்பாடி அடையாளம்

0
233

டேனியக் கோட்டை
தரங்கம்பாடி என்றால் அலைகள் பாடிக்கொண்டே இருக்கும் ஊர். 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வணிகம் செய்ய வந்த டென்மார்க் பிரதிநிதிகள் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரிடம் 70 ரூபாய்க்கு 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடமும், அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் வரி வசூல் செய்துகொள்ள உரிமையும் பெற்றனர்.

1620 கட்டி முடிக்கப்பட்ட கோட்டை மற்றும் கப்பல் தளத்தில் தற்போது கோட்டை மட்டும் எஞ்சியுள்ளது. கோட்டை மதில் சுவர், கப்பல் தளம் எல்லாம் அழிந்து சிதிலமாகிவிட்டது.

சுமார் 200 ஆண்டுகள் பெரிய ஏற்றுமதித் தளமாக விளங்கிய இக் கோட்டை 1845ல் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டதும் அதன் முக்கியத்துவத்தை இழந்தது.

2001ல் டென்மார்க் அரசகுடும்பத்தின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஐரோப்பியர் கோட்டை தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப் படுகிறது. சுமார் கிபி1305ல் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட சிவாலயம் நமக்கு தொல்லியல் அடையாளமாக தெரியவில்லை.