தந்தையின் பெருமை

0
1458

🍑 *இன்று 17.06.2018 தந்தையர் தினம்*

🍅 *தந்தையின் அருமையை..!! நேசிப்போம் மனதில் வைப்போம்*

*5 வயது :*

என் தந்தையால் செய்ய #முடியாதது ஒன்றும் இல்லை

*7 வயது :*

என் தந்தைக்கு பல விஷயங்களைப் பற்றி நன்கு தெரியும்

*10 வயது :*

என் தந்தைக்கு எல்லா விஷயங்களும் தெரியாது

*12 வயது :*

என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது

*14 வயது :*

காலம் மாறியது… அவருக்கு எங்கே புரிய போகுது?

*21 வயது :*

அவரிடம் எல்லாம் யோசனை கேட்க வேண்டாம்

*35 வயது :*

அப்பாவுக்கு ஏதோ கொஞ்சம் தெரியும்

*40 வயது :*

அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில் தப்பில்லையே

*45 வயது :*

அவரின் யோசனையை கேட்டு பின்னர் #முடிவு எடுக்கலாமே!

*50 வயது :*

என் தந்தை இதுபோன்ற விஷயங்களில் எவ்வளவு சிறப்பாக தீர்மானம் எடுப்பார் தெரியுமா?

*55 வயது :*

அவர் இல்லாதது உண்மையிலே பெரிய கஷ்டமாக இருக்கிறது.

அவரின் ஆலோசனையை கேட்க முடியாமல் போனது பெரிய நஷ்டம் .

*60 வயது :*

அவருடைய அறிவும், அனுபவமும் எங்கே? நான் எங்கே?

*அப்பாக்களை போற்றுவோம் வணங்குவோம்*