ஜோக் எழுதுவது எப்படி? தே.ராஜாசிங் ஜெயக்குமார்

0
387

அத்தியாயம்-2

நகைச்சுவை இதழ்களால் மூடப்பட்ட சொர்க்கம்.
மனம் ஒரு கண்ணாடி.கவலை அதில் படியும் அழுக்கு.நகைச்சுவை அந்த அழுக்கைப் போக்கும் திரவம்.

இலக்கியத்தில் நகைச்சுவை
*********************************
இலக்கிகிய காலம் தொட்டே நகைச்சுவை இருந்துள்ளது.தொல்காப்பியர் தனது பாடல்களில் நகைச்சுவையை கையாண்டுள்ளார்.கம்பராமாயாணத்தில் நகைச்சுவை இருக்கிறது.
வள்ளுவர் ,
நகல்வல்லல் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
என்ற குறளில் நகைச்சுவை உணர்வு இல்லாதவனுக்கு பகலும் இரவாக தோன்றும் என்று கூறுகிறார்.கவி காளமேகம், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, பாரதிதாசன் , ஔவை போன்றவர்கள் தங்கள் பாடல்களில் நகைச்சுவையை கையாண்டிருக்கிறார்கள்.

மருத்துவத்தில் நகைச்சுவை
*******************************
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்வது மருத்துவத்தில் தேவையானதே. சிரிப்பு கலந்த வைத்தியத்தில் பலன் உண்டு என்கிறார்கள்.அமெரிக்காவில் நகைப்புடன் கூடிய சிகிச்சையில் அற்புதக்கிரியை இருக்கிறது என்கிறார்கள்..ஜப்பானில் சிரிப்பு புத்தர் என்று ஒருவர் இருந்தார்.மக்களைக்கூட்டி அருளுரை கூறுவதோ, உபதேசம் கூறுவதோ இல்லை. தனியே போய் சிரிக்க ஆரம்பித்து விடுவாராம்.மக்களும் சேர்ந்து சிரிப்பார்களாம். “ஹோட்டே ” என்பது அவர் பெயர்.
சிரிப்பதால் கண்களில் ஒளி தோன்றும்.முகத்தில் பொலிவு ஏற்படும். நுரையீரல் இருதய செயல்பாடுகள் அதிகரிக்கும்.சிறுநீரகம் வலுப்பெறும்.மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீரடைவதால் மூளை சுறு சுறுப்படையும்.

கிளவுன் தெரபி
******************
மருத்துவத்தின் முக்கிய அம்சமாக “கிளவுன் தெரபி” பேசப்படுகிறது.இதனை தொடங்கியவர் ” பாட்ஜ் ஆடம்ஸ்” என்ற ஒரு அமெரிக்கர். இவர் டாக்டர், நகைச்சுவை எழுத்தாளர், சமூகச்சிந்தனையாளர் என்ற பலமுகம் கொண்டவர்.சர்க்கஸில் கிளவுன் வேடமிட்டு இடையிடையே நகைச்சுவை செய்வார்களே அதுபோல கோமாளி வேஷத்தில், ஆபரேஷன் பண்ணியவர்கள், குழந்தை நோயாளிகள், வயதான நோயாளிகள் இவர்களிடம் போய் நகைச்சுவை செய்து அவர்களின் மனஅழுத்தம் போக்கி சிரிக்க வைப்பது.இவ்வாறு செய்வதால், ” “என்டார்பின்,” “டோபமைன் ” போன்ற ஹார்மோன்கள் சுரந்து வலி குறைப்பதும் ,குணமடைவதை விரைவாக்கவும் செய்கின்றன. இம்முறை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியநாடுகள் மட்டுமல்ல இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

அரசவையில் நகைச்சுவை
*******************************

அரசவையில் மன்னர்கள் விகடகவி களை வைத்திருந்தனர்.அக்பர் பீர்பால் என்கிற விகடகவியை அரசவையில் வைத்து போற்றியது மட்டுமன்றி ஆலோசனையும் கேட்டுக்கொண்டார்.மன்னர்களின் மன அழுத்தத்தைபோக்குவது இவர்கள் வேலை.சிரிப்பு, உற்சாகம் , மலர்ச்சி , மகிழ்ச்சி உடையவனே சிறந்தஆளுமை உடையவனாக திகழ முடியும்.அலுவலகங்களில் கூட சிடு சிடு மேனேஜரை விட கலகலப்பாக இருப்பவர்களைத்தான் ஊழியர்கள் விரும்புகிறார்கள்.அவர்கள் தான் சிறந்த முறையில் அலுவலகத்தையும் நடத்துகிறார்கள். ஆங்கில இலக்கியத்தில் 18 ம் நூற்றாண்டில் டிரைடன், போய், பீசாக் போன்றவர்கள் புதினங்களில் நகைச்சுவையைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அங்கதம்
***********

நையாண்டி, பகடி, கேலி என பல வகைகளில் அழைக்கப்படுகிறது. தீயவைகளையும் , அறிவின்மையையும் ,கண்டனம் செய்யும் பாட்டு அல்லது துணுக்கு.தனிப்பட்டவரையோ , சமூகத்தையோ, அரசியலையோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ நையாண்டி செய்வதே அங்கதம். இலக்கிய காலம் தொட்டே இது இருந்து வருகிறது.காளமேகப்புவர் பாடல்கள் இதற்கு சிறந்த உதாரணம். “” வசை பாடக் காளமேகம் ” என்று இவருக்கு தனி அடைமொழியே உண்டு. அப்துல் ரகுமான் கவிதைகள் நவீன காலத்தில் அங்கதத்துகக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

பத்திரிகைகளில் அங்கதம்
******************************
கலைஞர் அண்ணா போன்றவர்கள் டைமிங் காக நகைச்சுவை சொல்லாடல்களைப் பயன்படுத்தியவர்கள். ” சோ ” தனது பத்திரிகையான துக்ளக்கில் கேலிச்சித்திரங்கள் மற்று கேள்விபதில் மூலமாகவும் அங்கதம் கையாண்டார். சோ, எஸ்.வி.சேகர், போன்றவர்கள் நாடகங்களில் நகைச்சுவை கொண்டுவந்தவர்கள்.சோ தனது கேள்விபதில்களிலும் நகைச்சுவை யாக பதில் கொடுப்பார்.

சுமைதாங்கிசாய்ந்தால் சுமை என்ன ஆகும் ? என்பது கேள்வி.

அதுவும் கொஞ்சம் சாயும் என்பது இவர் பதில்.
கேலிச்சித்திரம் ஒன்றில்
ஜெயலலிதா, சசிகலா சாமி கும்பிடுவார்கள்.அருகில் முடி அடர்த்தியாக வளர்ந்த நிலையில் சிறுவன் ஒருவன்.( சிறுவன்தான் தமிழ்நாடு)

ஜெயலலிலிதா கடவுளிடம் வேண்டுகிறார்.

” எனக்கு இன்னொரு முறை முதல்வராகும் வாய்ப்பு தந்தால் பையனுக்கு ( தமிழ்நாட்டுக்கு) மொட்டை போடுகிறேன் “.
பெரியாரும் குடி அரசு பத்திரிகையில் சித்திர புத்ரன் என்ற பெயரில் நையாண்டி உரையாடல் எழுதியுள்ளார்.

இன்றைய பத்திரிகைகளில் அரசியல் அங்கதங்கள் நிறைய உள்ளன.காமதேனு பத்திரிகையில் வரும் ” கடுப்புக்கவி ” , தமிழ் இந்து பத்திரிகையில் கருத்துச்சித்திரம், அரசியல்வாதிகளின் பேச்சுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலளிக்கும் பஞ்ச்சோந்திபராக் பகுதி, விகடன் மற்றும் வார இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகள் இதழியல் அரசியல் , சமூக அங்கதத்தின் சிறப்பு அம்சங்கள்.
” தமிழக எழுத்தாளர் குழுமம் ” உறுப்பினர்கள் இவற்றில் கலக்கி ,தமிழகத்தின் அரசியல் அங்கதத்திற்கு சேவையாற்றி வருவது சிறப்பு.

சில அரசியல் அங்கதங்கள்
*******************************
” ஆஸ்திரேலியா போயிட்டு வந்ததில் இருந்து தலைவர் ரொம்ப மாறிட்டாரா…எப்படி? ”

” எப்பவு குட்டியோடதான் சுத்திட்டு இருக்கார்! ”

**********************************************

” தலைவர் பேச்சை மொழிபெயர்க்க ரெண்டுபேரா… ஏன்? !”

” அவர் டபுள் மீனிங்ல பேசுவாரே! ”

**************************************************

இன்னும் அரசியல் அங்கதங்கள் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

************************************************
அடுத்த அத்தியாயத்தில் சிரிப்போம்.

ஜோக் எழுதுவது எப்படி? தே.ராஜாசிங்

ஜெயக்குமார்.