ஜென் சொல்லும் நேர்மறை சிந்தனை

0
735

மனதிற்குள் நல்ல மற்றும் நேர்மறை எண்ணங்களை நிரப்புவோம்

_______________________________________
ஒரு ஜென் துறவியிடம் சில சீடர்கள் இருந்தனர்.
அவர்கள் துறவியிடம் நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை எப்படி மாற்றுவது? என்று கேட்டனர்.

குரு ஒரு மண்பானையைக் கொண்டுவருமாறு கூறினார்.
கொண்டுவரப்பட்ட மண்பானையைக் காட்டி, “இதில் என்ன இருக்கிறது?” என்று எல்லோரிடமும் கேட்டார்.
பலரும் இதில் ஒன்றுமில்லை என்றே பதில் கூறினர்.

ஒரு மாணவன் மட்டும், “இதில் காற்று நிரம்பியுள்ளது” என்றான்
குரு “இந்தப் பானைக்குள் இருக்கும் காற்றை வெளியே எடுக்கவேண்டும். உங்களால் முடியுமா?” என்று கேட்டார்
எல்லோரும் அமைதியாக இருந்தபோது,
அந்த மாணவன் மட்டும் “என்னால் முடியும்!” என்றுக்கூறி பானை முழுவதும் தண்ணீரால் நிரப்பினான்.

“இதுவே என் பதில்!” என்று ஜென் துறவி கூறினார்.
சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
துறவி சீடர்களை நோக்கி,
“நம் மனது இந்தப் பானையைப் போன்றது.
உள்ளே இருக்கும் காற்றை எப்படி நம் கண்ணால் காண முடியாதோ!
அதுபோலவே மனதிற்குள் இருக்கும் தீமை எவர் கண்களுக்கும் தெரியாது!
நம் மனதிற்குள் இருக்கும் தீமைகளை வெளியே கொண்டுவர சுலபமான வழி!
பானையைத் தண்ணீரால் நிரப்பியது போல் மனதிற்குள் நல்ல மற்றும் நேர்மறை எண்ணங்களை நிரப்பவேண்டும்!.
ஆம்! வெளிச்சம் உள்ளே போனால் இருட்டு வெளியே வருவது போல் நல்ல எண்ணங்கள் உள்ளே போனால் தீய எண்ணங்கள் வெளியேறிவிடும்!