செல்போனாலும் பரவும் நோய்த்தொற்றுகள்

0
194

நாம் உபயோகிக்கும் செல்போனில் E.Coli, Staphylococcus, Streptococcus என விதவிதமான தொற்றுக்கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.

சரி…. இந்தக் கிருமித்தொற்று அண்டாமல், செல்போனை சுத்தமாக வைத்திருக்க என்ன வழி என்கிறீர்களா…

இதோ டிப்ஸ்…

👁‍🗨 பாத்ரூம்/டாய்லெட் சென்று செல்போன் உபயோகிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.

மெசேஜ் அனுப்புவது, போன் பேசுவது, ஃபேஸ்புக் பார்ப்பது என்று எந்த செல்போன் உபயோகமும் பாத்ரூமில் நடக்கக் கூடாது. இல்லாவிட்டால் தொற்றுக்கிருமிகள் போனில் பரவுவதைத் தவிர்க்க முடியாது.

👁‍🗨 ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஆல்கஹால் மற்றும் Distilled water கலந்து நிரப்பிக் கொள்ளுங்கள். அதை மொபைல் ஸ்கிரீனின் வெளிப்புறம் உள்பட எல்லா பக்கமும் ஸ்பிரே செய்து Microfibre cleaning cloth கொண்டு சுத்தம் செய்யுங்கள். மைக்ரோஃபைபர் கிளாத் என்பது வேறு ஒன்றும் இல்லை.

கண் கண்ணாடி துடைப்பதற்காக அதன் பெட்டியில் வைத்திருப்பார்களே… அதுதான். இந்த பிரத்யேக துணியின் மூலம் மொபைலை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் தொற்றுக்கிருமிகள் அழியும்.

👁‍🗨 நோய்த்தொற்று அபாயம் காரணமாக இப்போது Antimicrobial Cover-களும் கிடைக்கின்றன. முடிந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம்.

👁‍🗨 இப்போது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ்டாக தொற்றுக்கிருமிகளைக் கொல்லக் கூடிய Germophobes போன்களும் வந்துவிட்டன.

UV-C ஒளிக்கற்றைகளை வெளிப்படுத்தி பாக்டீரியா தொற்றுகளை அழிக்கும் திறன் கொண்ட Phonesoap 2.0 என்கிற தொழில்நுட்பத்துக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட போன்கள் இவை.

👁‍🗨 Phonesoap 2.0-வைப் பயன்படுத்தி நாம் அடிக்கடி உபயோகிக்கும் டெபிட் கார்டு, கீ செயின், வாலட், வாட்ச் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

-நேசகானம் வி.உமாபதி