சாஸ்திரமும்… அர்த்தமும்…

0
260

“இரவில் ஏன் ஊசி நூலால் துணி தைக்க கூடாது என்றால் மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்பு
சொன்ன சாஸ்திரம் .வெளிச்சம் பற்றாத நேரத்தில் கையில் ஊசி குத்திவிடும் என்பதற்காக சொன்னது.

*இடி இடித்தால் காது அடைபட்டு விடும், அர்ஜூனா, அர்ஜூனா என்று கத்தினால் காது
திரும்ப திறந்துவிடும் அதற்காக சொல்வார்கள்.

*வீட்டு வாசலில் மஞ்சள் தெளிப்பது. வெளியில் சென்று வரும் நமது காலில் கிருமிகள்
ஒட்டிக் கொண்டு வரும் அது வீட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக தெளிப்பார்கள்.

*வீட்டில் செவ்வாய் வெள்ளி கிழமை களில் சாம்பிராணி போடுதல் பூச்சிகள் வராமல் தடுப்பதிற்காக..

*வாசலில் முருங்கை மரம் வைக்க கூடாது என்பது முறிந்து விழும் என்பதிற்காக..

*புளிய மரத்திற்கு கீழ் படுக்க கூடாது என்பது, அது கார்பன்டை ஆக்சைடு வெளியிடுவதால்…

*வீட்டுக்குள் நகம் வெட்டினால் காலில் குத்திவிடும், உணவில் கலந்துவிடும் என்பதற்காக…

*நகம் கடித்தால் அழுக்கு வயிற்றுக்குள் சென்று விடும் என்பதற்காக
என்பதற்காக…

*இரவில் குப்பையை வெளியில் கொட்டினால் ஏதாவது சிறு பொருள்கள் சேர்ந்து போய் விடும்.

*வீட்டில் புறா வளர்த்தால் விஷ பாம்புகள் வரும் என்பதற்காக வளர்க்க கூடாது எனபார்கள்.

நன்றி : சுடும் நிலவு

பல்சுவை வார இதழ்