பொதுவாக குக்கரில் சமையல் செய்து சாப்பிடுவது பொதுவான ஒன்று தான். அதனால் உடல்பருன் சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவு சத்து குறைந்து விடும். மேலும் இரத்த சர்க்கரையின் அளவை அது உடனடியாக கூட்டாது.

ஆனால் குக்கரில் சமைக்கும் போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும். மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்க படவில்லை. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதானால் தீடிரென இரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அதேபோன்று சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. மேலும் நார் சத்து நிறைந்த கஞ்சி நீக்கபட்ட சாதமே சர்க்கரை நோயாலிகளின் இரத்த சர்க்கரையை அளவை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்.

அது மட்டுமல்லாமல் அரிசி வேக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது. மேலும் குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்சினை தான்.

அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே அது மிகவும் நல்லது தான்.பொதுவாக வேகமாக தயாரான சாப்பாட்டை இரண்டு மடங்கு எடுத்து கொண்டால் மட்டுமே வயிறு நிரம்பும்.

இப்படி வயிற்றுக்குள் உணவை தினிக்க தினிக்க பிரச்சினைகளும் அதிகமாகும் எனவே கூடுமானவரை குக்கர் சாதம் சாப்பிடாமல் கஞ்சி வடித்த சாப்பாட்டை சாப்பிடுவதால் பல நோய்கள் நம்மை நெருங்க விடாமல் வைத்து இருக்கும்.