காலா – படம் எப்படி இருக்கு?

0
323

வன்னியரசு

‘காலா’
சிறப்புக்காட்சி
இப்போது தான் போட்டு காட்டினார்கள்.

கடந்த கால்நூற்றாண்டு காலம்
விடுதலைச்சிறுத்தைகள் பேசி வந்த
மண்ணுரிமை அரசியலை முழுக்க முழுக்க ரஜினியை வைத்து பேசி இருக்கிறார் இயக்குநர்.

மண்ணின் மைந்தர்களான தலித்துகள்
நிலமற்றவர்களாக- பொறம்போக்காக
மாற்றிய அதிகார வர்க்கத்தை
திருப்பி அடிக்கும்
கதைக்களம்.

மீண்டும்
ராமன்- ராவண யுத்தம்.
இந்த யுத்தத்தில்
ராமன் கொல்லப்படுகிறான்.
ராவணன் வெற்றி பெறுகிறான்.
தலித்துகள் வெற்றி பெறுகிறார்கள்.

சேரி வாழ்மக்களின்
குடியிறுப்புகளை
அகற்றும்
இந்துத்துவக்கும்பலுக்கு
எதிராக போராடும்
சேரி மக்களின்
வீரஞ்செரிந்த போராட்டக்களமாக
தகிக்கிறது தாராவி.

தலித்துகளை- பவுத்தர்களை
இந்துத்துவம் எப்படியெல்லாம்
நயவஞ்சகமாக
அழிக்கத்துடிக்கிறது
என்பதை
‘காலா’ அம்பலப்படுத்திகிறது.

மோடியின் ‘தூய்மை இந்தியா’
இப்படித்தான் இருக்கும்…
அவ்வளவு நயவஞ்சகமாக இருக்கும்…
சேரிக்குறுதி வழியத்தான்
‘தூய்மை இந்தியா’ இருக்கும் என்பதை ‘காலா’
எச்சரித்துள்ளது.

முழுக்க முழுக்க
தலித்களின்
விடுதலை அரசியலை
பேசுகிறது
காலா…

படத்தின்
இறுதிக்காட்சி
தூத்துக்குடி
துப்பாக்கிச்சூடு,
போலீசே கலவரம் பண்ணுவது
என்று தூத்துக்குடி
நினைவுக்கு வருகிறது…

இன்று ரஜினி பேசும் அரசியலுக்கு
நேர் எதிரானது இந்த ‘காலா’!

தலித் வாழ்வியலை,
தலித் அரசியலை
துணிச்சலாக
எடுத்த
இயக்குனர்
பா.ரஞ்சித் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்…

தலித்துகளின்
விடுதலை அரசியலை
முன்னெடுத்து
போராடி வரும்
விடுதலைச்சிறுத்தைகளின்
அரசியல்
ஒரு படமாக வந்துள்ளது…

இன்னும் இது போல
படைப்புகளை படைக்க
இன்னும் பல இயக்குநர்கள்
வரவேண்டும்!