காற்றலைகளின் கவிதை…

0
417

இந்த வானொலி கலைஞனின் கலாப பதிவு……

வானொலி காற்றலைகளின் கவிதை…

திசைகளில் விழும் மழைச்சாரல்

இன்று உலகம் முழுதும் வானொலி ஒலிப்பரப்புகளும், அதன் சேவைகளும் நாளுக்கு நாள் கூடி அதிகமாகி கொண்டே இருக்கிறது…

நேற்றைய வானொலிகள் நமக்காக பேசியது . 
இன்றைய வானொலிகள் நம்மை பற்றி பேசிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக வானொலி கேட்பது ஒரு சுகமான அனுபவம் ….
ஒரு புல்லாங்குழலுக்குள் காற்று நுழைவது போல், கரை தொட்டு திரும்பும் அலை போல மனம் தொட்டு திரும்பும் அதன் ஈரமும் அது உண்டாக்கும் லேசான அதிர்வும் ஏராளம்.
பாடல்கள் கேட்டு பயணப்பட்ட வானொலிகள் நம்முடன் கலாச்சாரத்தை சுமந்துகொண்டும் பண்பாட்டை பழக்க வழக்கங்களை
சொல்லிக்கொண்டும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இசைத்தட்டுக்கள், ஒலிநாடாக்கள், இணைய வசதிகள் இப்படி இன்றைய விஞ்ஞானம் தொட்டு செல்லும் எல்லா புள்ளிகளில் இருந்தும் அதன் நிகழ்தகவு இன்று கொஞ்சம் கூடுதல் ….
மத்திய அலைவரிசை, சிற்றலை , பண்பலை என்று வானொலிகளின் ஒலிப்பரப்புகளும் , அதன் நிகழ்ச்சிகளும் இன்று வரை செல்வாக்கு மிக்கதாகவே இருக்கிறது.
வால்வு வானொலி பெட்டிகளில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த வானொலிக்காலம் இன்று அலைபேசிகளில் பதிவிறக்கும் செய்து கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஒலிப்பாரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க வைத்திருக்கிறது.
ஒரு வானொலியின் ஒலிப்பரப்பு அதன் நேயர்களை முன் வைத்தே கட்டமைக்கப்படுகிறது.
இன்று பல வானொலி சேவைகள் உலகம் முழுதும் தங்கள் ஒலிப்பரப்புகளை செய்து வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் , நாடு விட்டு நாடு இன்று உலகம் தாண்டி வானொலி நிகழ்சிகளை இணையம் வழியாக கேட்டு ரசிக்க கூடிய இயல்பு தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு வானொலி ஒலிபரப்புகளும் , வெளிநாட்டு வானொலி ஒலிப்பரப்புகளும் தங்கள் நிகழ்ச்சிகளில் வழங்கும் முறைகளில் , வெளிப்படுத்தும் கருத்து பகர்வுகளில் தனித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் இன்று ஏற்ப்பட்டு இருக்கிறது இது காலத்தின் தேவை.
காலநிலைகளை கடந்து அதன் சேவைகள் இன்று பலராலும் வரவேற்கப்படுகின்றன. வானொலிகளில் இருந்து பயனுள்ள தகவல்களை பெற நேயர்கள் உலகம் முழுதும் காத்திருக்கிறார்கள் என்பதை வானொலி ஒலிப்பரப்பாளர்களும் இன்று புரிந்து வைத்திருக்கின்றனர்.
வானொலி ஒலிக்காத காலம் என்றும் இருக்காது….
உலகம் தாண்டி நேசம் விதைக்கும் இத்தகைய செயல்களுக்கும் ஓய்வு என்றுமே இருக்காது.
சாளரம் திறப்போம்….ஒரு நேச அலைவரிசை நம்மை ஒலிப்பரப்பலாம்.

ராமன் நாகப்பன்

raman nagappan