கள்ளக்காதல் – உளவியல்

0
303

அரசி மன்னை ஜீவிதா

மிளிர்ந்து வரும் கள்ளத் தொடர்புகளும் மிகையாகும் கொலைகளும்… ஏனென்று..
என்_பார்வையில்…

பேப்பைரைத் திறந்தால் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஓரிரு கொலை செய்திகள் அதிலும் முக்கியமாக கள்ளத் தொடர்பால் நடக்கும் கொலைகளே.. அதிகம்.. ..

இதுநாள்வரை கணவன்.. மனைவியை.. அல்லது மனைவி கணவனைக் கொன்ற நிலை மாறி .. அழகுக் குழந்தைகளை..
பாலில் விஷம் தந்து பெற்றவளே கொலை செய்த கொடிய சம்பவம் வேதனையின் உச்சம்…!!

முகத்தில் உமிழும் அளவிற்கு என் பதிவில் திட்டித் தீர்த்து விட்டேன் ஆனாலும் என் மனது அமைதியின்றி அந்த பெண்ணின் முகநூல் பகுதியில் ஆராய்ந்த போது அதற்கான விடையும் கிடைத்தது… ஆம் அந்தப் பெண்ணிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தவறான வழியில் செல்லும் பெண்களுக்குமே யான..
எனது தேடலின் பதில் அது… !!

#அந்தத்_தேடல்… ஒவ்வொரு பெண்ணும் கூறுவதற்கு அச்சப்படும் சொல்தான்… ஆம்

#sex ..காமம் …தாம்பத்யம் ..

(இந்த வார்த்தை கூறவதற்கு எனக்கும் அச்சமே என் உறவுகள் என்ன நினைப்பார்களோ இதைப்பற்றி இவள் போய் பேசுகிறாளே என்று தவறாக எண்ணக் கூடும் .. ஆனால் சில விசயங்கள் மனம் விட்டுப் பேசத்தான் வேண்டும் மற்றவர்களுக்கு தெளிவாக புரிய.. ஆகையால் என் வீட்டில் உள்ளோர் அனைவரும் மன்னிக்கவும் இது உங்கள் வீட்டுப் பெண்ணின் பதிவு அல்ல.. ஓர் எழுத்தாளரின் பதிவு .. )

தற்போது #தாம்பத்யம் என்ற வார்த்தை காணாமலே போய் வெறும் #காமம் மட்டுமே தேடலாகிறது அதுவும் இந்த இணைய உலகத்தில் அதன் தேடல்கள் அதிகமே
அதுதான்.

#sex_காமம் இந்த வார்த்தை கேட்டதும் முகம் சுளிக்காத பெண்கள் இருக்க இயலாது
ஆனால் மனதினில் அதற்கானத் தேடல் உண்டு என்பது கடந்த இரண்டு வருடங்களாக நான் ஆய்ந்து கண்ட உண்மை..!!

வெளியில் கூற அஞ்சும் இந்த வார்த்தைக்கானத் தேடல் பெண்களிடம் அதிகம் ஆகி அதேநேரம் வெளியில் கூறினால் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சி அஞ்சியே… அந்த எண்ணம்
ஆழப் புதைந்து புதைந்து அதை வெளிகாட்ட இயலாத நிலையில் அந்த தேடல் அடுத்த எல்லைச் சென்று… அடுத்த ஆண்களோடு பழகி …. அதையும் தாண்டி .. இப்படி… கொலைகளில் முடிகிறது….!!

*சில சமயங்களில் மனம் பாதிக்கப்பட்டு கோபம் வெறுப்பு என்ற மனநோயாகவும் மாறுகிறது.

* திருமணம் ஆகும் வரை அல்லது திருமணம் ஆன ஓர் சில மாதங்கள்.. குறிப்பாக குழந்தை உண்டாகும் வரை…

ஓர் ஆண் தனது காதலி/வருங்கால மனைவியிடம் நடக்கும் முறையே வேறு ஆங்காங்கே அழைத்துச் செல்வது.. அவ்வப்போது

*சின்னச் சின்ன சீண்டல்கள்..
*கிள்ளல்கள். அவ்வப்போது
*தொட்டு பேசுவது
* விளையாடுவது
*முத்தம் கொடுப்பது …
நினைத்த நேரத்தில் மனைவியுடன் மகிழ்வது என்று…

ஓரிரு மாதங்கள் நகர்வதே தெரியாது ஆனால் அவள் உடனே தாய்மை யடைந்ததும் நிலைமை அப்படியே தலைகீழாகும்…

தாய்மை அடையாவிட்டால் குழந்தை இல்லை என்ற கவலை மட்டுமே மிஞ்சும் அதற்காகவே இன்னும் அந்நியோண்யமாக வாழ முயற்சிப்பார்கள்…

மேலும்.. வீட்டுச் சூழல்கள் பிரச்சினைகளைத் தந்தாலும்
கணவன் மனைவிக்குள் புரிதல் வளர ஆரம்பிக்கும்..

அவை படிப்படியாக மாறி தன் குடும்பம் என்ற நிலையில் குழந்தைகளுக்காக வாழும் சூழல் உருவாகும்..

அதுவும் கூட்டுக் குடும்பம் என்றால் எவ்வாறாயினும் பிரச்சினைகளை தாண்டி விடலாம் .. ஆனால் தற்போது மிளிர்ந்து வரும் தனிக்குடும்பங்கள் தான் சரிவை சந்திக்கின்றன..

* ஆம் குழந்தை பிறந்த ஓரிரு வருடங்கள் வரை அவர்கள் வளர்ப்பில் நேரம் போவது தெரியாது..

ஆனால் நாட்கள் ஆக ஆக மனதில் ஏக்கங்கள் எட்டிப் பார்க்கும்

ஆண்கள் 80 வயதிலே கூட பெண் சுகம் தேடும் போது பெண்களின் 40 … 50 வரையிலும் தேடல்கள் இருக்கும் என எத்தனை ஆண்கள் உணர்ந்திர்ப்பார்கள் தெரியவில்லை..!!

குழந்தைகள் வளர வளர தங்களை தங்கள் மனத் தேவைகளை ஆணும் சரி பெண்ணும் சரி சுருக்க ஆரம்பித்து விடுகிறார்கள்…

கணவனோ அலுவலகத்தின் பணிகளில் வீட்டிற்கு வந்ததும்.. சிறிது நேரம் முகநூல் வாட்ஸ்ஆப்பில் ஒன்றி விட்டு உறங்க சென்று விடுகிறான் ..

மனைவிகளோ குழந்தை கணவன் அலுவல் என ஓய்ந்து உறங்கினாலும்.. அவளுக்குள்ளும் தேவைகள் இருக்கும் என்பதை பல ஆண்கள் உணர்வதில்லை…

#முகநூல்_வாட்ஸ்ஆப்பில் மூழ்கி விடிய விடிய அடுத்த வீட்டுப் பெண்களோடு அளவளாவதை விட்டு… கிடைக்கும் நேரம் ஓர் அரைமணிநேரமோ ஒரு மணி நேரமோ குடும்பமாக அமர்ந்து..

மனைவியையும் அமரச் செய்து அவளை தாங்கள் தினம் மகிழச் செய்யா விட்டால் கூட

*நெருக்கமாக அமர்வது
*அடிக்கடி தொட்டு பேசுவது
* முத்தம் கொடுப்பது

* வாரமோர் முறை மாதமோர் முறை தாம்பத்யம் பகிர்ந்தால்
கண்டிப்பாக மண்மதனே எதிரில் நின்றாலும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் நம் பெண்கள் என நம்புகிறேன்..

(இவற்றை குழந்தைகள் சிறுவயது முதலே பெற்றோர்கள் கடைப்பிடித்தால்
அவர்களுக்கு அது sex ஆகத் தெரியாது அன்பு பாசமாக மட்டுமே தெரியும்)

* அதேநேரம் தற்போது எங்கும் தனிமை நிலை.. இதனைப் போக்க முகநூல்லயே மூழ்கும் நிலை…

யார் பாசமாக பேசினாலும் உடனே அனைத்தையும் ஒப்புவிக்கும் போது.. அவர்கள் எளிதாக மற்றவர்கள் வலையில் வீழும் நிலை…

” குளமென்றால் #மீனும்
காடென்றால் #மானும்
இரண்டும் இருந்தால் வேட்டைக்கு
#கொக்கும் #புலிகளும்”
இருப்பது சகஜமே…!!

ஆனால் அந்த மீன் நலுவ வும்
மான் ஓடவும் கற்றுக் கொண்டால்… கண்டிப்பாக தற்காத்திடலாம்… வேட்டையாடத் துடிக்கும் நிலையிலிருந்து…

விசயத்திற்கு வருவோம்…
பிரியாணியை தினம் அதிகமாகத் தந்து இனிக்க இனிக்க பேசியதால்…
தடமாறிய நிலையில் இந்தக் கொலைகள் செய்துள்ளால் எனும்போது…

கட்டிய கணவன் இன்னும் கொஞ்சம் இனிமையாக பேசி அவளுக்கான நேரத்தை ஒதுக்கி..

வாரமொருயாவது கடமைக்கு #கலவியல் செய்யாது .. அன்பாக பாசமாக உனக்கு என்னத் தோன்றுகிறது நாம் எப்படி மகிழலாம் என மனம் விட்டு பேசி ..

அன்றைய தினம் சின்னச் சின்ன சீண்டல்கள் மூலம் காலை முதல் அவர்களைத் தயார்படுத்தி இல்லறத்தில் ஈடுபட்டால் அங்கு பாசம் மட்டுமே அதிகமாகும்

(இது ஓர் மனநல மருத்துவர் கூறியது அதையே உங்களிடம் கூறுகிறேன்)..

மனைவிகளும் தங்களுக்கு தேவையான பொழுது இதைக் கூறினால் கணவன் என்ன நினைப்பானோ.. அடுத்தவர் என்ன நினைப்பார்களோ குழந்தைகள் என்ன நினைப்பார்களோ என பயப்படாமல்..

தங்கள் உடல் மனத் தேவைகளை தயங்காது கணவரிடம் பகிர்ந்திடுங்கள்….
எவனிடமோ பகிர்ந்து அந்த ஆசை மேலிட #கொலை செய்யும் அளவிற்கு செல்வதை விட…

உங்கள் ஆசாபாசங்களை கணவரிடம் பகிர்வதில் தவறேயில்லை…

கணவர் #வெளியூரில் இருக்கிறாரா… எவனோடோ பேசி அளவளவி மன இச்சைகளை தீர்க்காமல் உங்கள் கணவரோடு உரையாடுங்கள்.. (இதற்காக போலி கணக்கு துவங்கி கணவனோடு உரையாடினால் கூட தவறில்லை கண்டவனோடு உரையாடுதலே தவறு)

#வெளிநாட்டு_வாழ்_கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணர்ந்திடுங்கள்.. தங்களின் சின்ன சின்ன உரையாடல் சீண்டல்கள் கண்டிப்பாக அவர்களுக்கு தேவை ஆனால் அதை வெளியில் கூற மாட்டார்கள்…

தாங்கள் என்ன நினைப்பீர்களோ என்று அஞ்சுவார்கள்…
நீங்கள் அவர்கள் கேட்கும் முன் கொடுத்திடுங்கள் வாழ்க்கை இன்பமாகும்…

சரி கணவரற்று… #விவாகரத்து_விதவைப்_பெண்கள??

தாராளமாக மறுமணம் செய்து கொள்ளுங்கள்.. ஆனால் இன்னொரு பெண்ணின் கணவனை தேர்வு செய்யாமல்.. வாழ்க்கை தர முன் வருபவர்களை தேடுங்கள் கண்டிப்பாக இருப்பார்கள் அவர்களை #மறுமணம் செய்திடுங்கள்..
பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள்
..
பிள்ளைகளைக் கொல்லாமல்..

அதை விடுத்து group chat போட்டு அடுத்த பெண்களை கோர்த்து விட்டு மகிழாதீர்கள் (இது உண்மை சம்பவம்)

வாழ்க்கை நம் கையில் வாழப் பழகுங்கள் ஆனால் வாழ்க்கையை தொலைக்காதீர்கள்..

கண்மூடியக் காமம் கழுவிலேற்றும் இந்த அபிராமி வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொண்டு.. அவரவர் தேவைகளை அவரவர் கணவர்களிடம் மட்டும் கூறிடுங்கள்..
கணவன்மார்களும் தன் மனைவியிடம் மட்டும் சுகந்தேடுங்கள் அடுத்த பெண்கள் வாழ்க்கையில் தேடாமல் ..!!

*படுப்பதும்
*ஓடுவதும்
*கொலை செய்வதும்
அல்ல #பெண்ணியம் …

#அன்புக்காக வாழ்வதும்
#அன்புக்காக நம்மை
இழப்பதும் …இழந்தும்
…..வாழ்வதே #பெண்ணியம்…!!!..

கள்ளத்தொடர்பை விட்டு வாழுங்கள் அதுவே #கண்ணியம் …!!

இனியொரு அபிராமி உருவாகாமல் தடுத்திடுங்கள் அதுவே நம் #மண்ணியம்…!!

அன்புடன்…. இவளும் ஓர் பெண்ணாய்…!!

-#மன்னை ஜீவி