ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி..?

0
368

தற்போது நிறைய அன்பர்களுக்கு தேவை… அடுத்தக்கட்ட பயணத்திற்கான மிகப் பெரிய முயற்சி. அதன் முதல் பகுதியிலேயே அக்குவேறாக ஆனிவேராக பிரித்து மேய்ந்திருப்பது சிறப்பு. கதையின் மொத்த வார்த்தைகள் 140 என்ற செய்தி மிக முக்கியமானது. உதவி ஆசிரியர்கள் நேரம் குறைவான நேரத்தில் 140 வார்த்தைகளுக்குள் எழுதப்படும் கதை தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக குமுதம் குங்குமம்.

கதை எழுதும் போது அதன் போக்கிலேயே எழுதி கதை சுருக்காமல் சிறுகதையாக எழுதினாலும் தப்பில்லை என்பது உண்மை. மிக அருமையான தொடக்கமாக ஆரம்பித்து முழுயான தொடராக வெளிவர இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. ஆர்வம் இருப்பவர்கள் இத்தொடரை முழுதும் படித்தால் இதில் சொன்ன குமுதம், குங்குமம், விகடன், கல்கி, ராணி, பாக்யா ஆகிய இதழ்களில் நிச்சயம் கதைகள் வெளிவருவது நிச்சயம்…

இத்தொடரை எழுதும் ஐரேனிபுரம் திரு பால்ராசய்யா அவர்களுக்கு மிக்க நன்றி… மிக சிறந்த மிக பிரபலமான ஒரு எழுத்தாளர் ஒரு பக்க கதை எழுதும் எழுத்தாளர் ஆகிய பால்ராசய்யா அவர்கள் எழுதும் போது, நிறைய அனுபவ விசயங்களும், அதிகமான நுட்பமான சூத்திரங்களும் வரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

எந்த ஒரு விசயமும் தொடங்குவதில்லை தொடர்வதில் இருக்கிறது. எனவே இத்தொடரை மிக சரியாக பயன்படுத்த வேண்டுகிறேன்.

ஐரேனிபுரம் திரு பால்ராசய்யா அவர்களுக்கு மிக்க நன்றியும்… பாராட்டுக்களும்…

என்றும் அன்புடன்
க.கமலகண்ணன்

நன்றி : தமிழக எழுத்தாளர்கள் குழுமம்