எங்கே என் பாரதிக்கூட்டம்…?

0
284

எழுத்தால் தீ மூட்டு…
எரி தனலெரி- வெந்தீயில்

கருகட்டும் காமுகக்கூட்டம்…!

பச்சிளம் பாலகத்தோலுக்களையும்
ஓநாய்க் கூட்டம் ஒழிக்கும் சிங்கங்களாய்…
சீரியெழு!

என் எழுதுகோல் கூட்டமே…!

ஒவ்வொரு கவிஞனுக்கும்
இனி ரவுத்திரம் பழக கற்றுக்கொடுக்க நேரமில்லை,
ருத்திர தாண்டவதாண்டவத்திற்கு பச்சிளம் தேவதைகளை பழக்கு.,
பாலருந்தும் வாய்க்கு விஷம் கக்கும் வித்தையை கற்றுத்தா…

பாட்டுடெழுதும் ஒற்றை பாரதியாய் படித்தோதியது போதும்.!
பாரதிக்கு பாரதியாகு…
பாய்ந்து அரக்க குரல்வளை நெரி…!

நீதி கேள்
வீதி வா
எல்லோரையும் உன் எழுத்தாணியால் இணை–
வீணர்கூட்டம் வீணென்று எறி.!

என்றும் உன்னுடன் இருப்பேன்…
நீயேற்றும் தீப்பந்தத்திற்கு தீக்குச்சியாய்….!

இயக்குனர்
பாபாஜீ ஆர். குணசேகரன்