இலுப்பை மரம் வளர்க்கலாம்…

0
1035

“விதைப்பித்தன்”தம்பி K M A Dhana Pal வழங்கிய இலுப்பை விதைகள் முளைத்து வர தொடங்கியது.இன்று உறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
#இலுப்பை_மரம் (Bassia longifolia)
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்தில் அதிகம் அகற்றப்பட்ட மரங்களுள் இம்மரமும் ஒன்று.

“ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை” என்னும் பழமொழி நம் முன்னோர்களால் இதன் வாசனை மிக்க உலர்ந்த பூக்கள் சர்க்கரையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும்.
விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தி பலகாரங்கள் செய்து சாப்பிட்டு இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

தேர் செய்ய பயன்படும் மரம்.

இதன்பூவில் “கில்கட்டி” எனும் உருண்டை செய்வார்கள்.

இதன் புண்ணாக்கில் நீர் விட்டு அரைத்து எண்ணைக்குளியலுக்கு பயன்படுத்துவர்.

பணப்பயிர்கள் வந்ததால் அழிந்து போன மரம்.

சிறுவயதில் பாக்கெட் மணி இதன் விதைகள்.

மழையை ஈர்க்கும் மரம்.

கடந்த ஆண்டில் 1000 க்கும் மேற்பட்ட கன்றுகளை உருவாக்கி வழங்கி இருக்கிறேன்.

மரங்கள் அழிந்து போக.. போக..
எல்லாம் நம் கண்முன்னே அழிந்து வருகிறது!
#மீட்டெடுப்போம்!

வனம் கலைமணி

திருவாரூர்.

Cell : 9842467821