ஆப்பியம்

0
164

காலையில் எழுப்பிட அப்பா
வேண்டாம் – Alarm app -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் – step counter இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம் – zomato, swiggy app இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் – Uber,OLA app இருக்கு!

விலாசம் அறிய டீ – கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் – Big Basket இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் –
Amazon , Flipkart app இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் –
What’s up, facebook இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை – Paytm app இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு…..
App என்னும் ஆப்பு!!!

உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க !
விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!
விழித்தெழந்து விடை கொடு..!

செல்லின அடிமைகயாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து ஓர்
வலை பின்னுவோம்…..!

வாசித்து நேசித்தது!