ஆடிப்பெருக்கு

0
185

ஆடி மாதம் அம்மனுக்குதான்
காவேரியே உன் பிறப்பு
கர்நாடாகவில் உள்ள மாண்டியா என்னும்
குடகு மாவட்டத்தில் உள்ள தலைகாவேரியில் 44000 அடி உயரத்தில் …

உன் பிறப்பு அதிசயமே

மெல்ல மெல்ல கர்நாடாகாவிலுள்ள ஏழு மாவட்டத்திலும் மெதுவாக வளைந்துநெளிந்து சிறு குழந்தையாக உன் பருவத்தை கழித்துவிட்டு,
தமிழத்தில் தர்மபுரியில்
எழில் மிகு பருவ மங்கையாய் காண்பவர்
மயங்கும் வளம்கொண்ட பசுமை வரவை பதிவுசெய்துவிட்டு
சேலம்,ஈரோடு,
நாமக்கல்,கரூர் வழியாக தஞ்சை வந்தடைந்து பின் நாகை மாவட்டம் பூம்புகார் என்னும் வரலாற்று சிறப்பு மிக்க இடத்திலுள்ள வங்காளவிரிகுடா கடலில் கலந்து தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் தாய் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நீ பதிவு செய்து விட்டாய் அச்சாரமாய்
ஆணித்தரமாக..

உன் பிறப்பால் வந்ததே ஆடிப்பெருக்கு!

அடி பதின் பருவபெண்ணே…

பல ஆண்டுகாலமாய் ஆடிமாத ஆடிப்பெருக்கு 18 ன்போது எங்கே சென்றாய்

உன் புகுந்தவீடாம் தமிழகம் வராமல்
உன்னை வராமல் இயற்க்கை தடுக்கவில்லை
உன் உறவினர்களான நாங்கள் தடுக்கவில்லை
எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
கரைபடிந்தகைகளுக்கு சொந்தமான அரசுதான்
உன் பசுமை கலந்த மஞ்சள் முகம் பார்க்க வரம் தராமல் தடுத்துநிறுத்தியது…

நீதிதேவதையும் வழிகாட்டவில்லை

நீ தமிழகம் வருவதற்கு

இப்படி பலகொடுமைகளுக்கு நடுவே எங்கள் மனம்குளிர
இந்த ஆண்டு ஆடிபெருக்கு 2018 முன்பே நீ தமிழகம் வந்துள்ளாய்…
எம்குலப்பெண்கள் ஆண்கள் மனமெல்லாம்
அளப்பரிய காதலடி உன்மேல்…

ஏன் தெரியுமா?

எம் குலப்பெண்கள் வம்ச விருத்திக்காக உன்னிடம் வழிபடவும்
தம்பதியர் இல்லம் நல்லறமாக அமைய அம்மனை வேண்டி மஞ்சள்கயறு அணிந்து மகிழவே…

தமிழகத்தில் நீ தவழ்ந்து வரும் கரையோரம் உள்ள ஊர்களில் எல்லாம் உனக்கு ஆடி மாத திருவிழா.

பெண்களுக்கெல்லாம் பெருவிழா.

ஆடி18 இன்று ஸ்ரீரங்கம்
படித்துறையில் உனக்கு புகுந்தவீட்டு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி பல ஆண்டுகளுக்குபிறகு 2018 ம் ஆண்டில்..

எது எப்படியோ

காவேரியே

நீ பெண்ணாகபிறந்து புகுந்து வீடாம் தமிழகம் வர எத்தனை கலர்கொடிகளும்
கருப்புமேல்சட்டைகளும்

போர்கொடி பிடித்தாலும்
அரசுசாசன சட்டத்திலே
பெண்ணுக்கு புகுந்தவீட்டில்

பெருமை சேர்க்கும்

வரவையும்
வாழ்வுமுடியும் உண்மையை பல ஆண்டுகள் கழித்து
தமிழகத்தில் உன் ஆடிப்பெருக்கு வருகைமூலம் மெய்பித்துள்ளாய் தாயே…
யார்தடுத்தாலும் இயற்க்கையின் வரமாம்
பசுமைதரும் தாயாம் உன்

வருகையின் வேகம்

எல்லா சட்ட தடைளையும் கடந்து தமிழகம் வந்தே தீரும்

பல ஆண்டுகள் கழித்து ஆடிப்பெருக்கன்று
ஆறுககளில் எல்லாம்

உன் வருகை ஆனந்தமே

ஆர்ப்பரிப்பே
தாயே நீ வா தடைகடந்து
மடைதிறந்துவா!

எம் விவசாயிகள் உயிர் காக்க…

உலக மக்கள் பசி போக்க…

எங்கள் சத்ததியினருக்கு ஆடிப்பெருக்கையும்
நீ சீர்பெற்று

செல்லும்

அழகு நாணமதையும்

ஆறுகளில் காண்பிக்கவே ஆசைபடுகிறோம்..

தாயே உன் 2018 ஆடி பெருக்கு வருகைக்கு தமிழர்களாய் தலைவணங்குகிறோம்…

சு.சித்ரா -நூலகர்,

கோமல் -மயிலாடுதுறை.