animated-bird-image-0057

Winamp, iTunes Windows Media Player Real Player QuickTime

animated-music-image-0350

animated-bird-image-0074

SMART APPLICATION

நேசகானம் வானொலி

மாலை 4 மணிக்கு ... செமாவின் நேயர் விருப்பம் மாலை 5 மணிக்கு ... நேசம் பாடும் ராகம் மாலை 6 மணிக்கு ... ஏஞ்சலின் இசை ஊஞ்சல் இரவு 7 மணிக்கு... ஏஞ்சலின் Dreams Express இரவு 8 மணிக்கு...கோவை பத்மாவின் சாரல் பாடும் சங்கீதம் இரவு 9 மணிக்கு...ஜெர்மனி கவிதைக்குயில் பா.ராகினியின் நெஞ்சில் நின்ற ராகம் இரவு 10 மணிக்கு...ஈரோடு வி.உமாபதியின் காற்றினிலே வரும் கீதம் இரவு 11 மணிக்கு...சவுதி கோ.அய்யப்பனின் நிலாச்சாரல் Android Apps : nesaganam www.nesaganam.com

நேசகானம் வானொலி

android apps new6

மாலை 4 மணிக்கு ... செமாவின் நேயர் விருப்பம்

மாலை 5 மணிக்கு ... நேசம் பாடும் ராகம்

மாலை 6 மணிக்கு ... ஏஞ்சலின் இசை ஊஞ்சல்

இரவு 7 மணிக்கு...சேலம் ஐரினின் தேடி வரும் தென்றல்

இரவு 8 மணிக்கு...கோவை பத்மாவின் சாரல் பாடும் சங்கீதம்

இரவு 9 மணிக்கு...ஜெர்மனி கவிதைக்குயில் பா.ராகினியின் நெஞ்சில் நின்ற ராகம்

இரவு 10 மணிக்கு...ஈரோடு வி.உமாபதியின் காற்றினிலே வரும் கீதம்

இரவு 11 மணிக்கு...சவுதி கோ.அய்யப்பனின் நிலாச்சாரல்

Android Apps : nesaganam

www.nesaganam.com

தாடி மாமா!

தாடி மாமா!
************
தாய் மாமன் கதா பாத்திரம் பெற்றோரைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னலமற்ற பாசத்தின் வடிவானது. தாய்ப்பாலைப் போலவே பரிசுத்தமானது. சுருட்டு மணத்தோடு, முண்டாசுத்தலை முகத்தில் உரச மாமா கொடுத்த முத்தத்தில் இதை அனுபவித்திருக்கிறேன்.
தங்கையின் பிள்ளைகளை வளர்ப்பதற்காக சிங்கப்பூர் அத்தையின் காதலை கையெடுத்துக் கும்பிட்டு நிராகரித்தார். அன்றுமுதல் அவர் சட்டை அணியவில்லை. நீண்ட தாடி வளர்த்தார். அதனால் கிராமத்தில் அவர் தாடி மாமாவாகிப் போனார். லௌகீக சுகத்துக்காக லட்சணங்களை துறந்த மகான் அவர்.
தனிப்பட்ட ஆசைகள் ஏதுமின்றி வாழ்ந்த அவருக்கு உணவில் அதீத விருப்பம்! இன்னொன்று பழனிக்கு கால்நடையாகவே யாத்திரை செல்வது. குடும்பத்துக்காக கூலிவேலைக்குப் போவார். சம்பாதித்ததை தங்கையிடம் தருவார். பிள்ளைகளுக்கு தீனி வாங்கிவந்து கொடுப்பார். மாடு குளிப்பாட்டி, வைக்கோல் வைத்து, பால் கறந்து கடைகளுக்கு கொடுப்பார்.
பார வண்டி, சாகுபடி நிலம், மாடுகளை வாங்கித்தருவதில் மாமாவுக்கு உபரி வருமானம் இருக்கும். அதையும், தங்கை பிள்ளைகளுக்காக செலவழித்து மகிழ்வார். ஆனால் கோபம் என்று வந்து விட்டால் வீட்டை விட்டுப் போய் விடுவார். அவரைப்பற்றி யாருமே கவலைப் படமாட்டார்கள்.தேடவும் மாட்டார்கள். இரு நாட்கள் கழித்து அவராகவே வந்து மாடுகளை அவிழ்த்து, மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவார். மதிய உணவு கடந்து வருவார். மாடுகளை கொட்டகைக்குள் கட்டி, வைக்கோலைப் போட்டுவிட்டு கிளம்பிவிடுவார். அவரை சாப்பிடச் சொல்ல வேண்டும் என்கிற உணர்வு யாருக்குமே வராது.
அன்றிரவு வழக்கம்போல தீனிகளுடன் வந்து தங்கையின் பிள்ளைகளை எழுப்புவார். ஒவ்வொரு பிள்ளைக்கும் எந்த பண்டம் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். அனைவரது கைகளிலும் திணிப்பார். தூக்கக் கலக்கத்தில் இருக்கிற பிள்ளைகளின் முகத்தை ஈரக் கைகளால் துடைப்பார். பண்டங்களைத் தின்னும் வரை உட்கார்ந்திருந்து, அனைவரையும் வாய் கொப்பளிக்க வைத்து விட்டுப் போய் விடுவார். கோபம் சரியாகிறவரை பள்ளிக்கூடக் கட்டிடத்தில்தான் உறங்குவார்.
உடம்புக்கு ஏதாவது ஒன்று என்றால் தர்மாஸ்பத்திரிக்கு அவரேதான் போயாக வேண்டும். பழைய ரலே சைக்கிளில் ஒண்டியாகத்தான் போவார். கோயில்பத்து ஆஸ்பத்திரியில் குப்புசாமி கம்பவுண்டர் “பொசியம்” தருவார். ஒரே அவுன்ஸுதான்! காய்ச்சல் பறந்துவிடும். மாமா இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுவார். மாமாவுடன் திருவிழா, சைக்கிள் பயணம், நெல் வண்டி ஊர்வலம் என்று விடுமுறை கழியும். எனக்கு பாதுகாவலர், பராமரிப்பாளர், பரிவாளர் அனைத்துமே மாமாதான்.
அப்பா கோபத்தில் எங்களை அடித்து விட்டால், துடித்து விடுவார். கொல்லைப்புறத்தில் நின்று கோபமாய் சத்தமிடுவார். அந்த நேரத்தில் மாமாவுக்கு நூறு யானை பலம் வந்துவிடும். கட்டுப்பட மாட்டார். அப்பாவை அவரால் எதிர்க்க இயலாது. தங்கையின் பிள்ளைகளுக்காக சகித்துக் கொள்வார். சத்தம் முணுமுணுப்பாகி அவருக்குள் கரைந்து மறைந்து விடும்.
“உழைப்பாளி வந்திருக்கார்…மொதல்ல சோத்தைப் போடு..!” அம்மாவிடம் அப்பா குரல் தருவார். கொல்லைப்புறத்தில் கை கழுவிக் கொண்டிருக்கிற மாமா ஈரத்தை துடைத்துக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் விடுவார். அன்று அப்பாவின் பகல் சாப்பாட்டில் உப்பு சற்று அதிகமாகவே இருக்கும். காரணம் அம்மாவின் கண்ணீர்! அப்பா மீதும் தப்பு சொல்ல முடியாது. அவரும் சகோதரிகளுக்காகவே வாழ்ந்தவர். மாமாவுக்கு நேர்கிற அதே அனுபவத்தை ‘மூத்த சகோதரியின் கணவரிடமிருந்து’ அப்பா பெற்றதாக அம்மா என்னிடம் சொல்வார்.
பெற்றோரில்லாமல் கூட இருந்து விடுவோம். மாமா இல்லாத பொழுதுகள் எங்களனைவருக்கும் பொருளற்றதாகவே கழியும். அம்மா ஏழு பிள்ளைகளை பெற்றபோதும், அனைவரையும் ‘வாளா ஒசந்த ஆளாக்கியது’ என்னவோ மாமாவின் தியாகம்தான்! நாங்கள் வளர்ந்து ஆளாகி, வலுவான வாழ்க்கையில் காலடி வைக்கிற தருணத்தில் மாமாவின் பிரிவு!
ஒரு அடைமழைக்காலம். பள்ளிவாசல் அருகில் ரிக்ஷாவில் மாமா உட்கார்ந்திருக்க, உடன் அம்மா இருந்தார். கம்பளிப் போர்வை போர்த்திஇருந்த மாமாவைத் தொட்டுப் பார்த்தேன். உடல் அனலில் ‘பாராசிட்டமால்’ வாடை முகத்திலறைந்தது. “தங்கம்…மழையில நனையாதடி!” -காய்ச்சலிலும் மாமா முணுமுணுத்தார்.
கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் மாமா தூங்கி கொண்டிருக்க அம்மா சொன்னார்.
” அதுக்கு காய்ச்சலைவிட சின்னதோட கல்யாணம்தான் பெரிய கவலையா இருக்கு!”
“நாத்தங்கால வெலைக்குக் கொடுத்துட்டேன். அதை மாமாகிட்ட சொல்ல வேணாம். பணம் ரெடி பண்ணிட்டேன்னு மட்டும் மாமாட்ட சொல்லிடுங்க!”
முதுகுக்கு கையைக் கொடுத்து மாமாவை எழுப்பினேன். “சின்னதுக்கு…தேவைக்கு…காசு?…” -சைகையால் கேட்டார். மஞ்சள் பையிலிருந்த ரூபாய் கட்டுகளை கையில் கொடுத்தேன். கண்ணில் ஒற்றிக் கொடுத்தார். விழியோரம் நீர்த்துளி குமிழ்ந்தது.
புதுத்துணியில் வந்த தங்கையின் கையைப் பற்றி என்னவோ சொல்ல எத்தனித்தார். மாமாவின் விரலில் அம்மா கோயில் விபூதியை தடவினார். அந்தக் கையைப் பிடித்து தங்கையின் நெற்றியில் பூச வைத்தார். தங்கை, தாயை அனுப்பிவிட்டு அன்றிரவை மாமாவுடன் கழிக்க முற்பட்டேன். ஸ்டூலில் உட்கார்ந்தபடி மாமாவின் படுக்கையில் தலைவைத்து சாய்ந்தேன். அதிகாலை மாமாவின் உடலில் சூடு குறைந்திருந்தது. டூட்டி டாக்டர் வந்தார். நகர்ந்து நின்று கொண்டேன். மாமாவை எழுப்பினார். எவ்வித சலனமும் இல்லை.
“குஞ்சிதபாதத்துக்கு நீங்க என்ன வேணும்?”
“தங்கச்சி மகன் சார்!”
“நைட்டே எறந்திருப்பாரு போல.” என்றவர், செவிலியரிடம் திரும்பி “சிஸ்டர் கேஷ் சீட் பார்மாலிட்டியை எல்லாம் கம்ப்ளீட் பண்ணிடுங்க. இவர்தான் ரிலேட்டிவ்…இவர் கிட்டயே பாடிய
ஒப்படைச்சுடலாம்” -பக்கத்து படுக்கையை நோக்கி நகர்ந்தார்.
என் கால்களுக்கு கீழ் பாதாளமும் சேர்ந்து நகர்ந்தது.

nesaganam channel on YouTube
ytnc

 

 

 

 

  
நேசமலர்களுக்கு…
பாசத்துடன் ஒரு வேண்டுகோள்.
நமது நேசகானம் வலைதள வானொலியின் YouTube
சேனல் *nesaganam channel* புதுப்பொலிவுடன் பலநூறு

கலைகளுக்கு மேடையமைக்க காத்திருக்கிறது.
உடனே நமது சேனலை Subscribe செய்து நேச வட்டத்தின்

அட்டகாச பதிவுகளை ரசித்திடுங்கள்.

*இப்பவே இப்பவே*
*பார்க்கணும் இப்பவே*

கே.பிரபாகரன்
Online Tamil Radio

https://www.youtube.com/channel/UCcjZE3dOZkpSHp4wqSRTorw

புரட்சிக்கவி பாரதிதாசன்

 

xyz

புரட்சிக்கவி பாரதிதாசன்

வாழ்க்கைக் குறிப்பு

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் “கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

திரை இசை

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 23 ] : T.சௌந்தர்

இனியொரு…

கலைவடிவங்கள் ஒவ்வொன்றும் அதை உருவாக்கும் மக்களின் கலாச்சாரத்திலும் ,வரலாற்றிலும் நிலைபெறுகிறது.அவை தாம் உருவான சமூகத்தின் பெருமையையும் நிலைநாட்டிக் கொள்கின்றன.

தலைமுறை, தலைமுறையாக உயிர்பெறும் கலைகள் வாழ்வில் இரண்டறக் கலந்து , அதை உருவாக்கியவர்களது உயரிய சிந்தனைகளையும் ,அவர்களது உயர் நாகரீகத்தையும் காட்டுவதுடன் பிறரையும் சென்றடைகிறது.

தென்னகத்தின் பழங்குடி மக்களான தமிழ் மக்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக பழகி , செழுமைப்படுத்திய இசை வடிவங்களில் கிடைத்த உன்னதமான வடிவம் ராகங்கள் ஆகும்,

பழந் தமிழர்களின் ஐந்து நிலத்திணைகளில் மலையும் மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி நிலம் என அழைத்தனர் .குறிஞ்சி நிலத்திற்குரிய பண்னையும் வகுத்தனர்.அவர்கள் அதனை குறிஞ்சிப்பண் என்றும் அழைத்தனர்.

” குறிஞ்சிப்பண்ணை ,மதுமாதவி, செருந்தி , துருத்தி , செந்துருதி,செந்துருத்தி , செந்திருதி, , , செருந்து, , செந்தி, செந்து, செந்திசை, குறிஞ்சிப்பாணி, மத்யமாவதி என பல்வேறு பெயர்களால் அழைத்தனர் ” என சிலப்பதிகாரம் தொடங்கி பல்வேறு பழந் தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுக்களை ஆதாரமாகக் கூறுவார் இசை அறிஞர் நா.மம்மது.

பழந் தமிழர்கள் தங்கள் குறிஞ்சி நிலத் தெய்வமான சேயோனை இந்த குறிஞ்சிப்பண்ணில் பாடி மகிழ்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை எனலாம்.

குறிஞ்சிப்பண் என பழந் தமிழர் போற்றிய ராகத்தின் இன்றைய பெயர் மத்யமாவதி.

ஐந்து சுரங்களைக் கொண்ட [ Pentatonic Scale Ragas] இனிமையான ஐந்து ராகங்களான மோகனம் , ஹிந்தோளம் ,சுத்ததன்யாசி ,சுத்தசாவேரி போன்றவற்றுடன் மத்யமாவதியும் அடங்கும்.

எல்லையற்ற இன்பமும் , புத்துணர்வும் ,உத்வேகமும் தந்து உள்ளத்தை பரவசப்படுத்தும் ராகங்களில் தனிச் சுவை தருவது மத்யமாவதி ராகம்.

உள்ளத்தில் பேருணர்ச்சிகளை பெருக்கெடுக்க வைத்து , உள்ளார்ந்த இன்பத்தை சுரக்கவைத்து இனிய ரசங்களை பெருக வைக்கும் ராகங்களில் முதன்மையானது மத்யமாவதி ராகம்.

உச்சஉணர்ச்சி [ Exuberance ],திடீர் எழுச்சி ,உணர்ச்சிப் பெருக்கு ,களிப்பு , கிளர்ச்சி போன்ற பல அர்த்தங்களை இசையில் இன்பரசமாகத் தருவதில் மத்யமாவதிக்கு இணையான ராகம் இல்லை எனலாம் .

குறிஞ்சிப்பண் என பழந் தமிழர் போற்றிய ராகத்தின் இன்றைய பெயர் மத்யமாவதி.

ஐந்து சுரங்களைக் கொண்ட [ Pentatonic Scale Ragas] இனிமையான ஐந்து ராகங்களான மோகனம் , ஹிந்தோளம் ,சுத்ததன்யாசி ,சுத்தசாவேரி போன்றவற்றுடன் மத்யமாவதியும் அடங்கும்.

உலகெங்கும் ஒலிக்கக்கூடிய ஐந்து சுரராகங்களில் ஒன்றான மத்தியமாவதியின் சாயல்களை உலகின் பல பாகங்களிலும் நாம் கேட்டு இன்புறலாம் .குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலும் , ஆபிரிக்க நாடுகளிலும் , தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதிகமாகவும் , தென்அமெரிக்க பழங்குடி மலைவாழ் செவ்விந்தியமக்களின் வாய்மொழிப்பாடல்களிலும் கேட்கலாம் .

ஆபிரிக்க நாடான சூடான் மக்களிசையில் , மக்களின் தன்னெழுச்சியான ஆட்டத்துடன் ஆரப்பரிக்கும் இந்த ராகத்தின் இதயத் துடிப்பை தாராளமாக கேட்கலாம்.

செவ்வியலிசையான கர்நாடக இசையுலகில் தொடர் பயன்பாட்டில் உள்ள இந்த ராகம் ,பெரும்பாலும் கச்சேரியின் முடிவில் பாடப்படும் ராகமாவும் விளங்குகிறது.மத்யமாவதி ராகத்தைப் பாடி மங்களமாக கச்சேரியை முடிப்பது என்பது கர்நாடக இசையுலகில் சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது .

கர்னாடக இசையில் 22 வது தாய் ராகமான கரகரப்ப்ரியா ராகத்தின் ஜன்ய ராகம் இது .இந்த ராகத்தை கிரகபேதம் செய்தால் ஹிந்தோளம் , சுத்ததன்யாசி , மோகனம் போன்ற ராகங்கள் பிறக்கும்.ஐந்து சுரங்களைக் கொண்ட [ pentatonic scale ] ராகங்களுக்கே உரிய இனிமை இந்த ராகத்திலும் நிறைந்திருக்கிறது .

ஆரோகணம் : ச ரி2 ம1 ப நி2 ச
அவரோகணம் : ச நி1 ப ம1 ரி2 ச

கர்னாடக இசையில் அனேக பாடல்கள் இந்த ராகத்தில் உள்ளன :

இன்னமும் பிறவாமலே – முத்துத்தாண்டவர்
தர்மசம்வர்த்தினி – முத்துசுவாமி தீட்சிதர்
நளின லோசனா நின் – தியாகராஜர்
நகுமோ நீ கலவானி – தியாகராஜர்
ஆடாது அசங்காது வா – ஊத்தக்காடு
கற்பகமே கண் பாராய் – பாபநாசம் சிவன்
பாலிம்சு காமாட்சி – சியாமா சாஸ்திரி

கர்னாடக இசையில் மட்டுமல்ல இசைநாடகங்களிலும் ,நாட்டியங்களிலும் அதிகம் பயன்படும் ராகங்களில் இதுவும் ஒன்று.

வட இந்திய இசையான ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் இதனை மதுமத் சாரங் அல்லது மத்யமாவதி சாரங் என அழைக்கின்றனர் .ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் மிக விரிவாக ஆலாபனை செய்யப்படும் ராகங்களில் மத்யமாவதியும் ஒன்று.

மேக் மல்கர் ராகமும் மத்யமாவதி ராகத்திற்கு நெருக்கமான ராகமாகக் கருதப்படுகிறது.
பிருந்தாவனசாரங்கா , பிருந்தாவனி போன்ற ராகங்கள் மத்யமாவதிக்கு மிக நெருக்கமானவையாக கருதப்படுகின்றன.

குறிப்பாக பிருந்தாவனசாரங்கா மிக நெருக்கமான ராகமாக இருப்பதால் சில குழப்பங்களும் உண்டு என்பர்.

வயலும் ,வயல்சார்ந்த இடத்து மக்களான மருதநிலத்து மக்களின் வாழ்வை ,அவர்களது பாடல்களை சிலப்பதிகாரத்தில் சிறப்பித்து கூறும் இளங்கோவடிகள் நாடுகாண் காதையில் உழவர்கள் பாடல்கள் என ” ஏர்மங்கலம் ” , ” முகவைப்பாட்டு ” என்பவற்றை உழவர் பாடல்கள் எனக் கூறுவார்.

முதன்முதலாக ஏர் பூட்டி உழுவதை “பொன்னேர் ” என்று ஏரை வாழ்த்தி பாடும் பாடலே ஏர்மங்கலம் என்றும் ,நெல் அறுவடையாகி ,நெல் சுமக்கும் போதும் ,பின் ” போர் ” அடிக்கும் போதும் பாடும் பாடல்கள் முகவைப்பாடல்கள் என அழைக்கப்பட்டன என்பர்.இவ்விதம் உழவர்களும் , உழத்திகளும் ஆடியும் பாடியும் மகிழ்ந்த கூத்து வகைகளும் , பாடல்வகைகளும் பள்ளு இலக்கியமாகின.

உழவர்களின் வாழ்வைப் பிரதிபலித்த , அதில் முகிழ்த்த பள்ளு இலக்கியத்தின் முதல் இலக்கியமான முக்கூடற்பள்ளு பாடல்கள் பாடப்பட்ட ராகங்களில் மத்யமாவதி ராகமும் முதன்மையானது.

உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் களைதீரவும் , தமது துன்பம் துயரத்தைப் போக்கவுமே பாடினர்.அந்தப்பாடல்களின் சந்தக்குழிப்புகளிலிருந்து மெருகேற்றப்பட்டு ராகங்களாகின என்பது இசை வரலாறாகும்.

இசையின் கதை என்பது ஓசை , ஒலியின் கதை ஆகும். இன்பமும் ஈர்ப்பும் இயைந்து தரும் இசையின் உட்கிடையாக இறுகப்பற்றியிருக்கும் ராகங்களில் அறிந்தும் அறியாமலும் மக்கள் காலங்காலமாக லயித்திருக்கின்றார்கள்.

ராகங்களில் வேர்பிடித்து , மக்கள் இதயபீடங்களில் அமர்ந்த ராகங்களில் , ஈர்ப்புத் தன்மைமிக்க பாடல்களை மரபு சார்ந்தும் திரைப்படகாட்சிகளுக்கு இசைந்த மெல்லிசை கானங்களாகவும் , தாம் அனுபவித்த விதங்களிலெல்லாம் சுதந்திரமாகவும் தந்து மக்களைக் கவர்ந்த திரையிசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பயன்படுத்தி வெற்றி கண்ட அற்புதமான ராகங்களில் ஒன்று அருமை மத்யமாவதி !

ஊற்றிலிருந்து சுரக்கும் நீர் போல நினைவுகளை சுரக்க வைக்கும் தேன்வண்டல் பாடல்கள் தான் எத்தனை , எத்தனை ! மெல்லிசையில் ராகரசங்களால் நெஞ்சில் நிழல் பரப்பிய பாடல்கள் எத்தனை எத்தனை !

மெல்லிசை என்ற இனிமை விளக்கேற்றி திரையை ஒளிவீசச் செய்த மேதைகளின் ரசவாதம் நம்மை வியக்க வைக்கிறது.

மலரிலும் மெல்லிய , தேனினும் இனிய உணர்ச்சி ததும்பும் இந்த ராகத்தை ,அதில் உட்புதைந்த இனபத்தை துழாவி துழாவி எடுத்து அதில் இன்பங்களை இழைத்து இழைத்து அதன் பெருமையை தூக்கி நிறுத்தியவர்கள் திரையிசைமைப்பாளர்களே என்பது மிகையான கூற்றல்ல!

தமிழ் திரையில் வெளிவந்த மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடல்கள் சில :

எம் .கே .தியாகராஜபாகவதர்

01 அங்கும் இங்கும் எங்கும் இன்பமே – படம் : ராஜமுக்தி [1948] – பாடியவர்கள்: எம் .கே .தியாகராஜபாகவதர் + எம் எல் வசந்தகுமாரி – இசை:சி ஆர் சுப்பராமன் -இயற்றியவர் : பாபநாசம் சிவன்
மத்யமாவதி ராக அலையில் மிதக்கும் இன்பத்தை அள்ளி வீசும் பாடல்.தியாகராஜபாகவதரும் , எம் எல் வசந்தகுமாரியும் இணைந்து சுருதி சுத்தமாகப் பாடிய பாடல்.இளம் இசையமைப்பாளரான சி.ஆர். சுப்பராமன் இசையமைத்த செவ்வியல் இசை தழுவிய பாடல்.எம் . எல் .வசந்தகுமாரி பாடிய முதல் பாடலும் இதுவே.
1940 களின் இறுதியில் மெல்லிசையின் வீச்சுக்களை தர ஆரம்பித்த சி.ஆர். சுப்பராமன் ,எம் கே.தியாகராஜபாகவதருடன் இணைந்து தனது இசைக்கனவுகளில் ஒன்றை நிறைவு செய்தார்.செவ்வியல் இசைப்பாங்கிலும் தான் மேதை என்பதை சி.ஆர். சுப்பராமன் நிறுவிய பாடல்களில் ஒன்று.
பாண்டுரங்கன் அருள் இருந்தால் இங்கும் அங்கும் எங்கும் இன்பமே என்று மத்யமாவதியில் ஈசனைத் துதிக்கும் அருமையான பாடல்.

02 அற்புத லீலைகளை யார் அறிவார் – படம் : சிவகாமி [1960] – பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர் – இசை : K.V.மகாதேவன் – இயற்றியவர் : பாபநாசம் சிவன் சிவகாமி தமிழ் திரைப்படம் 1960 இல் வெளிவந்த தியாகராஜபாகவதரின் படமாகும்.மிக அரிதாக கே.வீ.மகாதேவன் தியாகராஜபாகவதரின் படத்திற்கு இசையமைத்த படமுமாகும்.
மத்யமாவதி ராகத்தை இசைத்த முன்னோடிகளில் இசைமேதை கே.வீ .மகாதேவனும் ஒருவர் என்பது அவதானத்திற்க்குரியது.எளிமையான இடையிசையில் மத்தியமாவதி ராகத்தின் சுகம் தரும் இன்பத்தை இதமாக அமைத்துள்ளார் இசையமைப்பாளர்.பாடலைப் பாடி , அதைத் தனதாக்கி வெற்றி கண்டவர் பாகவதர்

கே வீ மகாதேவன்

03 ஆனந்தமாய் வாழ வேணுமே – படம் : கூண்டுக்கிளி [ 1954 ] – பாடியவர் :T.V. ரத்தினம் – இசை : கே வீ மகாதேவன்
ஆனந்தமாய் வாழ வேணுமே – நாட்டில்
அமைதி பொங்கி பசியும் பிணியும் நீங்கியே
ஆனந்தமாய் வாழ வேணுமே …..
என்று முற்போக்குக் கவிஞன் விந்தன் எழுதிய பாடலுக்கு இன்ப லாஹிரியை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் மத்யமாவதி ராகத்தில் , கிராமத்து பெண் ஒருத்தியின் எண்ண எதிரொலியாக
இசைமேதை கே.வீ .மகாதேவன் அமைத்த ரீங்காரப்பாடல்.
குரலில் கம்பீரமும் , விறுவிறுப்பும் , கமகங்களை அனாயாசமாக வெளிப்படுத்தும் தனித்தன்மையும் கொண்ட T.V.ரத்தினம் பாடி அசத்திய பாடல்.
பாடல் அமைப்பிலும் , பாடும் விதத்திலும் பரவச மின்னலை நெஞ்சில் பாய்ச்சும் பாடல் என்றால் மிகையில்லை.படத்தில் கதாநாயகி அறிமுகமாகும் பாடல் இது.

04 ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா – படம் :மஞ்சள் மகிமை – பாடியவர் : கண்டசாலா + சுசீலா – இசை : மாஸ்டர் வேணு
மனதை வருடும் ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் அழகான பாடல்.மத்யமாவதி ராகத்தை கௌரவப்படுத்திய மாஸ்டர் வேணு என்ற இசையமைப்பாளரின் ஒப்பற்ற கற்பனை ஆற்றலைப் பறை சாற்றும் பாடல்களில் ஒன்று.எப்படிப்பட்ட உணர்வு அந்த இசைமேதைக்கு இருந்திருக்கிறது என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கின்ற இசையமுதம்!
இலங்கை வானொலியில் நெஞ்சில் நிறைந்தவை நிகழ்ச்சிக்கென்றெ அமைக்கப்பட்ட பாடலோ என்ற எண்ணம் எழ வைக்கின்ற பாடல்.பட்டுப்போன்ற இந்தப்பாடல் எத்தனை தடவை காற்றலலையில் மிதந்திருக்கும் !!
மாங்கல்ய பாக்கியம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் வடிவமான இப்படத்திற்கு மஞ்சள் மகிமை என பெயர் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி என்பதும் அதற்காக அவர் பெற்ற ஊதியம் 5,000 ரூபாய் என்பது கொசுறு செய்தி.

05 பார்த்தீரா இவர் சரசம் – படம் : மாங்கல்யம் – பாடியவர் : கண்டசாலா + பி .லீலா – இசை : எஸ் .ராஜேஸ்வரராவ்
மல்லிகையின் தேனை அருந்தி கிறங்கும் பொன் வண்டுகளை போல நம்மை மத்யமாவதி ராகத்தேனில் திளைக்க வைக்கும் மதுரமான பாடல். இதுவும் தெலுங்கு சினிமாவில் வீசிய மெல்லிசைக் குளிர்ச்சியில் விளைந்த தேனமுதம். அருமையான இசையில் நம்மை குழைத்தெடுத்தவர் இசைமேதை எஸ்.ராஜேஸ்வரராவ்.

06 மலரோடு விளையாடும் தென்றலே வாராய் – படம் : தெய்வபலம் [1959 ] – பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் – இசை : அஸ்வத்தாமா
இதயங்களை பிசையும் அதே வேளையில் மனகிழ்ச்சியையும் தந்து அதீதக் கற்பனைகளைக் கிளர வைக்கும் பாடல்கள் பல தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன.ஒரு இசைக்கலைஞன் அதிக படங்களுக்கு இசையமைக்காவிடினும் , இசையமைக்கும் ஒரு சில படங்களிலேயே அவர்களது அடியாழக்கற்பனைகளை உந்தி தள்ளி அமரத்துவமிக்க பாடல்களைத் தந்து விடுகிறார்கள். அவை இசை ரசிகர்கள் மனதில் என்றைக்கும் நிலைபெற்று இசைப்பொக்கிசங்களாகியும் விடுகின்றன.
அந்தப் பாடல்களின் பல்லவியை பாடும் பொழுதோ கேட்கும் பொழுதோ மனதில் ஒரு வித லாஹிரி உண்டாகிவிடும்.இசையின் திளைப்பில் நம்மைக் கட்டி வைக்கும் மந்திரப் பண்பு கொண்ட மத்யமாவதி ராகம் தரும் சுகத்தை நாம் பாரதிதாசனின் கவிதையிலும் [அழகின் சிரிப்பு ] நாம் தரிசிக்கலாம்.

,,,,,,வெள்ளம்
எழில் வீணை , அவ்வீணை மேல்
அடிக்கின்ற காற்றே , வீணை
நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன் !

பாரதிதாசன் விரிந்த கற்பனையில் தோன்றும் காற்றுப்புலவன் மீட்டும் வீணை இசை போன்ற மென்மையை இந்த விரகதாபப் பாடலில் தந்து சிறப்பித்தவர் இசையமைப்பாளர் அஸ்வத்தாமா.இவர் வீணை காயத்ரியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடலைப் பாடியவர்களும் [ பி .பி.ஸ்ரீநிவாஸ் + எஸ் .ஜானகி ] நெஞ்சம் நெகிழும் வண்ணம் பாடிச் சிறப்பித்திருக்கிறார்கள்.தென்றல் பற்றிய பாடலாசிரியரின் வர்ணனையும் சுவையின்பத்தை கூட்டிச் செல்கிறது.

07 தங்கச்சி சின்ன பொண்ணு – படம் : கருப்புப்பணம் [1963 ]- பாடியவர் : சீர்காழி + எல்.ஆர் .ஈஸ்வரி + குழுவினர் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவாலி இசையை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட மெட்டில் மத்யமாவதியை அமைத்து இனிமையின் உச்சங்களை தொட்டு பூரிக்க வைக்கின்ற பாடல்.கைதட்டலும் , ஹம்மிங்கும் உள்ளங்களைக் குதூகலிக்க வைக்கிற அற்புதமான பாடல்.சீர்காழியாரின் ஹம்மிங்கும் , ஹோரசில் காஷ்யமும் ஒன்று கலந்து மெல்லிசையில் புதுத் தடம் பதித்த மெல்லிசைமன்னர்களின் பரிசோதனைப் பாடல்களில் ஒன்று.
08 எல்லோரும் உன்னை நல்லவன் என்றே கொண்டாட வேண்டுமடா – படம் : பாக்யவதி – பாடியவர் :ஆர் பாலசரஸ்வதி தேவி – இசை :எஸ்.தட்சிணாமூர்த்தி
எந்த ராகத்திலும் ,எந்தவிதமான உணர்வுகளையும் தரும் வல்லமைமிக்க திரை இசையமைப்பாளர்கள் இனிமையும் , குழைவும் , மென்மையும் தரும் மத்தியமாவதி ராகத்தை விட்டு வைப்பார்களா ..?

தாய்மையின் அன்பையும் , இனிமையையும் , கனிவையும் தனது குரலில் கொண்ட பாடகி ஆர் பாலசரஸ்வதிதேவி. அவர் பாடிய இனிய தாலாட்டுப் பாடல்களில் ஒன்று இந்த இனிய பாடல்.
இந்த பாடலுக்கு இசையமைத்தவர் இசைமேதை எஸ்.தட்சிணாமூர்த்தி.” சின்ன அரும்பு மலரும் ,சிரிப்பைச் சிந்தி வளரும் ” என்று சிறந்த தாலாட்டுப்பாடலை ஆபேரி ராகத்தில் தந்த மேதை அவர்.

09 இனிதாய் நாமே இணைந்திருப்போமே – படம் : காலம் மாறிப்போச்சு – பாடியவர் :திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை : மாஸ்டர் வேணு
இசைமேதை மாஸ்டர் வேணு இசையமைத்த புத்தெழுச்சி நிறைந்த பாடல்கள் கொண்ட “காலம் மாறிப்போச்சு “படத்தில் வெளிவந்த அற்புதமான மத்யமாவதி ராகப் பாடல்.காதலின் ஆனத்தத்தை என்றென்றும் கேட்டனுபவிக்கும் வண்ணம் இசையின் இன்ப ஓட்டங்களில் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும் அருமைப்பாடல்.
திருச்சி லோகநாதன் – ஜிக்கி இணை பாடலின் உத்வேகத்திற்கு மெருகுணர்ச்சியூட்டும் வண்ணம் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர்.

10 கண்ணுடன் கலந்திடும் சுப தினமே – படம் : பாடியவர் : கண்டசாலா + பி லீலா – இசை :
தெலுங்கிலும் தமிழிலும் வெளியான திரைப்படத்தில் வெளியான இந்தப்பாடல் மெல்லிசையின் முன்னோக்கிய இசைவார்ப்பு என்று துணிந்து கூறலாம்.மெல்லிசையின் உயிர்ப்புக்கு அடிகோலிய அந்தக் காலங்களில் வெளிவந்த இனிமையான பாடல்களில் ஒன்று.தெலுங்கு சினிமாவில் வீசிய மெல்லிசைத் தென்றலில் மிதந்து வந்த நறுமணங்களில் ஒன்று.
மத்யமாவதி ராகத்தின் மென்மையை காதலின் ஏகாந்த உணர்வாக அமைத்து சிறப்பித்த தெலுங்கு சினிமா இசையமைப்பாளர்கள் அதன் மேன்மையையும் காட்டியவர்கள் என்று துணிந்து கூறலாம்.
செனாய் வாத்தியத்தின் பிரயோகமும் ,அனுபல்லவியில் “காவில் குலாவிடும் கோகிலமே” என்ற வரிகளை கண்டசாலா பாடும் பாங்கும் , சரணத்தில் பி.லீலா ” மலர்க்காவினிலே வீர விகாரமோ ” என்ற வரிகளை பாடும் போதும் நெஞ்சம் கனிந்து விடுகிறது.
மத்யமாவதியின் எழில் காட்டும் பாடல்.

12 எங்கிருந்தோ வந்தான் இடை சாதி நானென்றான் – படம்: படிக்காத மேதை [1954 ] – பாடசீர்காழி கோவிந்தராஜன் – இசை :கே வீ மகாதேவன்.
பாரதியார் எழுதிய பாடல்களுக்கு மிக அரிதாக திரை இசைத்திலகம் கே.வீ . மகாதேவன் இசையமைத்த உணர்ச்சி ததும்பும் பாடல்.
மத்யமாவதியின் ஜீவனை திரைக்குப் பொருத்தமாக உணர்வுக்குத் தகுந்தார்ப் போல் வடித்தெடுத்த இசை அற்ப்புதம்.
மரபு ராக பொக்கிசத்திலிருந்து கதையின் கதாபாத்திரம் துயர நனவோடையில் மிதக்கும் வகையில் அமைந்த பாடலை பல்வேறு உணர்வுகளை நம்மில் எழ வைக்கும் வண்ணம் பாடி மெய்சிலிர்க்க வைக்கும் சீர்காழி கோவிந்தராஜனை பாட வைத்த இசைமேத மகாதேவனை என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவது!!?
முக பாவத்தில் ரங்கராவ் நிகழ்த்திக்காட்டியுள்ள நுண் அசைவுகள் அவரை கலா மேதையாக நிலைநிறுத்தியுள்ளது.அந்தப் படத்தின் நாயகரே அவர் தான்!!

13 கலை எழில் வீசியே கண் ஜாடை – படம் :சபாஷ் ராமு – பாடியவர்கள் : ஏ .எம் .ராஜா + பி சுசீலா
கண்ணுடன் கலந்திடும் சுப தினமே ” என்ற பாடலின் மறுவடிவமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு அந்தப் பாடலின் தாக்கம் அதிகம் உள்ள பாடல்.

14 மக்களைப் பெற்ற மகராசி மகாலக்ஸ்மி போல் விளங்கும் முகராசி – படம் : மக்களைப் பெற்ற மகராசி 1958 – பாடியவர் :ஜிக்கி – இசை : கே. வீ . மகாதேவன்
படத்தின் இறுதி நிமிடங்களில் ஒலிக்கும் பாடல் இது . கதையின் நாயகியான தாய் இறந்ததும் ஒலிக்கும் இந்தப் பாடலில் சோகத்தையும் , கனிவையும் இழைத்து படத்தையும் மங்களமாக நிறைவு செய்வதுடன் மனதை நெகிழவும் வைக்கின்ற மகாதேவனின் அபாரத் திறன் வியக்க வைக்கும்.

15 திருமால் பெருமைக்கு நிகரேது – படம்: திருமால் பெருமை [1965 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் – இசை :கே வீ மகாதேவன்
செவ்வியல் இசைப்பாங்கில் , மத்யமாவதி ராகத்தில் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் பின் ராகமாலிகையாகி முடிகிறது.

16 உலகின் முதலிசை தமிழிசையே – படம் : தவப்புதல்வன் [ 1972 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
யுகல்பந்தி என்ற இரு வேறுபட்ட இசைகள் சங்கமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடலில் வடக்கும் , தெற்கும் மோதிக் கொள்ளும் போட்டி பாடலாகும்.பாடலின் பல்லவி மத்யமாவதி ராகத்திலும் , தொடரும் ஹிந்தி பாடல் வரிகள் பகாடி ராகத்திலும் அமைக்கப்பட்ட ஹிந்திப் பாடல் வரிகளை எழுதியவர் பி. பி.ஸ்ரீநிவாஸ்.

17 ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா – படம் : பொன்னூஞ்சல் [ 1972 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
காதலர்களின் மன மகிழ்ச்சி ஆரவாரத்தை ஹம்மிங்கில் அமைத்து மத்யமாவதியை புது தினுசாகக் காட்டிய மெல்லிசைமன்னரின் முத்திரைப் பாடல்.செனாய் வாத்தியத்தை கம்பீரத்துடனும், மகிழ்ச்சியுடனும் பயன்படுத்தி உணர்வுகளை கிளற வைக்கின்ற பாடல்.ராகத்தின் உள்ளோசைகளில் லயித்து சிறகடிக்க வைக்கும் பாடலில் மத்யமாவதி ராகம் ஒளிந்து கொண்டு ஜாலம் காட்டுகிறது.

18 மதனமாளிகையில் மந்திரமாலைகளாம் – படம் : ராஜபார்ட் ரங்கதுரை [ 1974 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநா
கூத்து , நாடக நடிகரின் வாழ்வை சித்தரிக்கும் படம் ராஜபார்ட் ரங்கதுரை.

ரங்கதுரை [சிவாஜி ] கம்பீரமாகப் பாடும் பாடலாக அமைக்கப்பட்ட பல்லவியைக் கொண்ட பாடல்.
ஓங்கிக் குரல் எடுத்துப் பாடும் கிட்டப்பாவின் சாயலில் அமைந்த பல்லவியை டி.எம்.சௌந்தரராஜன் மிக அழகாக பாடியிருப்பார்.மத்யமாவதியில் அமைந்த இந்தப் பல்லவி மெய்சிலிர்க்க வைக்கும் இசையமைப்பு என்றால் வெறும் புகழ்ச்சியல்ல.
பல்லவியிலேயே ராகத்தின் மாண்பை நாடகமரபு சார்ந்து இசையமைத்து பெருமைப்படுத்தி விடுகிறார் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.பல்லவி ஆரம்பித்து முடியும் இடத்தில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகியின் எண்ண ஓட்டங்கள் மத்யமாவதி ராகத்தின் மெல்லிசையாகி பரவச நிலைக்குக் கொண்டு செல்கிறது.
பாடி நடித்த பரம்பரையில் மெல்லிசைமன்னர் வந்ததால் அவருக்கு இது வாலாயமாகி விட்டது எனலாம். தமிழ் சினிமாவில் மத்யமாவதி ராகத்திற்கு கிடைத்த உன்னத இது.

19 வேலாலே விழிகள் – படம் : என்னைப்போல் ஒருவன் [ 1975 ] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
மத்யமாவதியின் இனியசஞ்சாரங்களில் மெல்லிசைமன்னரின் தன்னெளுச்சியும் , உத்வேகப் பெருக்கும் கொண்டு தங்குதடையின்றி பாயும் மெல்லிசை நதி.

20 கங்கை ஜமுனை இங்கு தான் சங்கமம் – படம் : இமையம் [ 1976 ] – பாடியவர் :கே ஜே ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை :எம் எஸ் விஸ்வநாதன
ராகத்தில் தடம் புரண்டு விடாத , மெல்லிசைப் பிரவாகத்தில் கரைபுரண்டோடும் இனிய பாடல். ஜேசுதாஸ் – வாணி ஜெயராம் இணை தந்த பல நல்ல பாடல்களில் ஒன்று.பாடலின் முடிவில் ஒன்றுக்குள் ஒன்றாகி குழைந்து செல்லும் உத்தி பயன்படுத்தப்பட்டு சுகத்தில் மிதத்தும் பாடல்.

21 சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து – படம் : பிராப்தம் [ 1972] – பாடியவர் :டி எம் சௌந்தரராஜன் + பி சுசீலா – இசை :எம் எஸ் விஸ்வநாதன்
திரையின் கதைக்கும் , உணர்வுக்கும் தகுந்தாற்ப் போல பாடல்களை தன்னெழுச்சியாக , எளிமையாகவும் , ராகங்களில் இருக்கும் இனிமையை ஒர்ந்தறிந்து தருவதில் மேதமையுமிக்க , மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் தனது இசை வளத்தைக் காட்டிய பாடல்களில் ஒன்று.பாடலின் வரிகளும் இசையும் ஒன்று கலந்து நம் நெஞ்சங்களை அள்ளிச் செல்லும் பாடல்.
தனது இசையால் ஒரு இசைமண்டலத்தை உருவாக்கி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசைமன்னரின் நம் நெஞ்சங்களில் எதிரொலிக்கும் பாடல்.

22 ஹரிவராசனம் விஸ்வ மோகனம் – படம் : சுவாமி ஐயப்பன் 1976 – பாடியவர் :கே .ஜே .ஜேசுதாஸ் – இசை : ஜி தேவராஜன்
சினிமாவில் இடம் பெற்ற பாடலாக அந்த நிலையைக் கடந்து செவ்வியல் இசையின் தரத்தில் பேசப்படும் பாடல்.பாடலின் இசையமைப்பு விதமும் பாடிய விதமும் மத்யமாவதியின் இனிமையையும் மகோன்னதத்தையும் காண்பிக்கும்
பாடல்.23 மரகதவல்லிக்கு மணக்கோலம் – படம் : அ
ன்புள்ள அப்பா 1987 – பாடியவர் :கே .ஜே .ஜேசுதாஸ் – இசை : ஷங்கர் கணேஷ்
அடக்கி வைத்த உணர்ச்சிகள் உயிரியக்கம்மிக்க இசையில் பொங்கிப் பிரவகிக்கும் அற்புதமான பாடல்.ஷங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்த அற்புதமான பாடல்களில் ஒன்று.” மகள் என்ற உறவு கொடுக்கும் வரை ” என்ற வரிகளில் தந்தையின் நெகிழ்வு நம்மையும் கலங்க வைத்துவிடுகிறது.வாத்திய அமைப்பில் நேர்த்தியும் இனிமையும் , ஜேசுதாசின் கம்பீரமும் ,மென்மையுமிக்க குரலில் மின்னும் பாடல்.

24 ஆறடி ராட்சசனோ என்னை – படம் :ஐந்தாம் படை 2009 – பாடியவர்கள் : குமார் சானு + ஸ்ரேயா கோசல் – இசை : டி.இமான்
வங்கப் பாடகரும் ,ஹிந்தியில்பல நல்ல பாடல்களை தனது மதுரக்குரலால் பாடி புகழ் பெற்றவருமான குமார் சானு பாடிய இனிமையான பாடல் இது. அவரது மயக்கும் குரலை ஹிந்திப்பாடலில் கேட்டு ராசாத்த நாம் தமிழில் அவரது குரல் ஏன் ஒலிப்பதில்லை என்ற எண்ணம் என்னுள் வந்ததுதுண்டு.அவர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுவென நினைக்கிறேன்.
இளையராஜாவுக்கு பின் வந்த இசையமைப்பாளர்களில் இனிமையான பாடல்களைத் தர முயலும் இசையமைப்பாளர்களில் டி.இமானும் ஒருவர்.மத்யமாவதி ராகத்தில் அமைந்த இந்தப்பாடலை மிக இனிமையாக இசையமைத்திருக்கின்றார்.

25 தைய்யா தைய்யா தக தைய்யா – படம் :உயிரே 2009 – பாடியவர்கள் : சுக்வீந்தர் சிங் + மால்குடி சுபா + குழுவினர் – இசை : ஏ .ஆர் .ரகுமான்
இளைஞர்களை துள்ள வைத்த பாடல்.இராகத்தில் விளைகின்ற முழு இன்பமும் இந்தப்பாடலில் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வசியம் டியூனில் இருக்கிறது.மத்யமாவதியில் அமைத்த ரகுமானின் கற்பனை தாளத்திற்கு மட்டும் முக்கியம் கொடுத்து விடுகிறது.

26 தோம் கஎஉவில் இருந்தோம் – படம் :ஸ்டார் 2001 – பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன் + குழுவினர் – இசை : ஏ .ஆர் .ரகுமான்
பாடலின் ஆவேசத்திலும் மத்யமாவதி ஆங்காங்கே இனியையும் காட்டி செல்லும் பாடல்.

ராகங்களில் பலவிதமான ரசங்களைக் கறந்தெடுக்கும் ஆற்றல் , சிருஷ்டி ஆற்றல் போன்றவை இசையமைப்பு ரகசியங்களின் ஆதாரமாகக் கருதப்படுவதுடன் கதையின் , கதாபாத்திரங்களின் இயல்புகளுக்கிசைந்த பாடல்களில் கற்பனை ஊற்று வளத்தையும் உள்ளடக்கத்தில் வைத்திருக்கும்.

இசையமைப்பில் தங்கள் வீரியத்தைக் காண்பித்து புதுத்தடங்கள் வகுக்க முனைந்த இசைமேதைகள் பலர் தமிழ் சினிமாவில் தோன்றியிருக்கின்றார்கள்.கற்பனைகளின் லாவண்யங்கள் என்று கருதப்பட்ட வகையில் ராகங்களின் இசைச் சுவையை பன்முகப்பட்ட உணர்வுகளில் வடித்தெடுத்து திரையிசை என்ற எல்லைக்குள்ளேயே இசைவீச்சுக்களைக் காட்டிய சாதனையாளர்கள் தான் எத்தனை . எத்தனை !

ராகங்களின் நுண்ரசனையில் தாம் ஊறித்திளைத்து , தமது படைப்பாற்றில் அந்தரங்கத்தில் திரண்ட இசை ஊறல்களை , ஜீவதுளிகளை இசைவார்ப்புகளாக விதவிதமான ரசங்களில் வடித்தெடுத்த பின்னரும் ,அவற்றை மீறிய புதிய கற்பனைகள் தோன்றிவிட முடியுமா என்ற எண்ணம் இசை ரசிகர்கள் மத்தியில் உண்டானது வியப்பில்லை.

இளையராஜா

தனது முன்னவர்களின் இசையில் லயித்து ,அவர்களின் நுண்ணிசைச் சூட்சுமங்களை நயந்து நயந்து ,பின் அவர்களின் கற்பனைக்கப்பாலும் ராகங்களை நுணுகி , நுணுகி ஒலிப்பின்னல்களை இழைத்து, இழைத்து என்னென்ன விதமாக ராகங்களை கையாள முடியுமோ அத்தனை விதங்களில் எல்லாம் ரசவாதங்கள் புரிந்து தனது இசையாட்சியால் சாதனைச் சிகரங்களைத் தொட்டவர் இசைஞானி இளையராஜா !

ராகங்களில் செம்மையும் , துலக்கமும் , நவீனமும் காட்டிய இசைஞானி இளையராஜா மத்யமாவதி ராகத்தில் அமைத்த பாடல்கள் :

01 தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு – படம் :அச்சாணி 1976 – பாடியவர்கள்: எஸ்.பி .பாலசுரமணியம் + பி.சுசீலா – இசை :இளையராஜா
பாடலின் முன்னிசையிலேயே மத்யமாவதியின் மென்மையை ஜலதரங்கம் , புல்லாங்குழல் போன்ற இயற்கை வாத்தியங்களால் கோடிட்டுக் காட்டி நம்மைச் சாந்தப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பாடல். தாலாட்டு மரபுக்கேற்ப பெற்றோரின் மனநிலையும் ,எதிர்கால ஆசையையும் காட்டி செல்லும் இந்தப் பாடலில் குழந்தை அன்பில் நம்மையும் கட்டி மகிழ்ச்சி பயணம் செய்ய வைக்கிறார் இசைஞானி.

02 மஞ்சக் குழிச்சு – படம் :16 வயதினிலே 1976 – பாடியவர்கள்: எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
திரையிசையில் நாட்டுப்புற இசையின் கூறுகள் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தாலும் நிஜமான கிராமிய இசையின் இனிய கோலங்களை நமது வாசற்படிக்கு கொண்டுவந்து சேர்த்தவர் இசைஞானி.

மத்யமாவதியில் பதுங்கியிருக்கும் குதூகலத்தை வெளிக்கொணரும் பாங்கும் , பாடலில் பயன்பட்டுள்ள தாளங்களும் , வாத்தியங்களில் குறிப்பாக வட இந்திய செவ்வியல் இசைக்கருவியான செனாய் வாத்தியத்தால் கிராமிய இசையில் மண்டிக் கிடக்கும் இனிமைகளை கிளர்த்தி உள்ளுணர்வின் இயங்கு சக்தியாக மாற்றிக்காடிய மேதமையும் வெளிப்படும் பாடல்.
எனது பால்ய வயதில் எங்கள் ஊர்க் கன்னிகள் தேன்சிட்டுப் பறவைகள் போல் மஞ்சள் நீரூற்றி மிகிழ்ந்ததையும் பாடல்க்காட்சி நினைவுறுத்தும்.

03 சோலைக் குயிலே காலைக்கதிரே – படம் :பொன்னு ஊருக்குப் புதுசு 1978 – பாடியவர்கள்: எஸ்.பி .சைலஜா – இசை :இளையராஜா
வண்ணப்படங்களுக்கே வண்ணம் பூசும் அபாரக்கற்பனை நிறைந்த பாடல்.காட்சியைப் பார்க்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்து தனது இசையாலே மனத்திரையில் எழில் ஓவியங்களை தீடிக்காட்டி தன்னை இசை வல்லாளன் என இளையராஜா நிரூபித்த பாடல்களில் ஒன்று.

வறண்டு போன தமிழ் சினிமா இசைக்கு புதிய இசைப்பின்னல்களால் ஒளிக்கிரணங்களை அள்ளி வீசி , இசை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த பாடல்.

காலையின் மென்மையில் ஆலாபனை நிகழ்த்தும் பனியும் , வயல்வெளிகளை சுற்றிப்பறந்து அழகுக்கோலம் காட்டும் பறவைகளும் , செழித்துக் குலுங்கும் வாழை இலைகளில் வழுக்கி ஓடி ஜாலம் செய்யும் நீர்த்துளிகளும் , அழகிய வண்ண மலர்களின் சிரித்த அழகும் , பச்சை நிறத்து லாவண்யங்களையும் ,புலர்ந்தும் புலராத கிராமிய காலை நேரத்து இன்பங்களை எல்லாம் நம் மனத்திரையில் அள்ளி இறைக்கும் பாடல்.

ஒரு கலைஞன் இத்தகைய இன்பங்களை எல்லாம் தனது படைப்பில் கொண்டு விசித்திர கற்பனைகளை காட்டி நம்மை அதில் திளைக்க வைக்க எத்தகைய உயர்ந்த மன எழுச்சி வேண்டும் அல்லது அந்த ராகங்களில் என்னவிதமான அக எழுச்சி பெற்றிருக்க வேண்டும் என்று வியக்க வைக்கும் மகா கலைஞன் இளையராஜா.

04 என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் – படம் :அழகே உன்னை ஆராதிக்கிறே 1978 – பாடியவர்கள்: வாணி ஜெயராம் – இசை :இளையராஜா
எத்தனை ,எத்தனை பூரிப்பு ,ஆர்ப்பரிப்பு என்று வியக்கும் இந்தப்பாடலில் வாஞ்சையோடிழைந்து மனதை வருடும் சோகத்தையும் மத்யமாவதியின் நுண்ணுணர்வை கிளர்த்தும் ஆச்சர்யத்தையும் இழைத்து உணர்வை மேலிட வைக்கும் பாடல்.
மத்யமாவதியின் இன்ப அதிர்வை பாடலின் பல்லவியிலேயே [0:19 – 0:23 செக்கனில் ] புல்லாங்குழலும் ,கிட்டாரும் இணைந்து ஒன்றை ஒன்று சீண்டும் இசைத்துணுக்கிலேயே காட்டி போதை ஊட்டி விடுகிறார் இசைஞானியார்.பின் தொடரும் பாடலில் நெஞ்சில் உணர்வெழுச்சி தந்து விரிந்தாடி வரும் இன்பத்தில் தித்திக்க வைக்கின்றார்.

05 செவ்வந்தி பூக்களில் செய்த வீடு – படம் :மெல்ல பேசுங்கள் 1982 – பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி + உமா ரமணன் – இசை :இளையராஜா
” கூவின பூங்குயில் கூவின கோழி “திரு ப்பள்ளி எழுச்சி ஆரம்ப வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலில் எத்தனை இன்பம்!!

மிலையும் எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!
மேலெல்லாம் விழி அள்ளும் ஒளியின் ப்ரவாகம்!
நலம் செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!
என்று பாரதிதாசன் பாடியது போல நமது இசைமுகத்தை நமது ராகங்களிலேயே மூழ்கித் திளைத்து , தனது வித்தை இன்பத்தால் தூக்கத்தில் ஆழ்ந்த இசையுலகை துயில் எழுப்பிய பாடல்.

06 நிலாக்குயுது நேரம் நல்ல நேரம் – படம்: சகல கலா வல்லவன் 1982 – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

ராகங்களில் புதைந்த இன்பங்களை, ஒரு புதுதினுசாக மனித உயிரின் ஊற்றாக ஆழ்மனத்தில் திகழும் காதல் அல்லது காம உணர்வுக்கு [ சிருங்கார ரசம் ] போடப்பட்ட இனிய பாடல்.மனித இனத்தின் உயிர்வாழ்வை ஆட்டிவைக்கும் ஆதார சுருதியாக விளங்கும் நுண்ணுணர்வுக்கு மத்யமாவதி என்கிற உயிருக்கு உவகையும் ,களிப்பும் ,போதையும் குழைந்து தரும் அற்புதமான ராகத்தில் அமைந்த இனிய மெல்லிசைப்பாடல்.

07 கவிதைகுயிலே – படம்: தென்றலே என்னைத் தோடு 1986 – பாடியவர்கள் :எஸ் .பி .பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
ஒரு ராகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு எத்தனை கற்பனைகள் காட்ட முடியும் என வியப்பு தரும் பாங்கில் தாளத்தில் துள்ள வைக்கும் பாடல் 08 காத்து காத்து ஊத காத்தும் வீசுதே – படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் 1986 – பாடியவர்கள் :மனோ + லலிதா ஷாகிரி – இசை: இளையராஜா

08 காத்து காத்து ஊத காத்தும் வீசுதே – படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் 1986 – பாடியவர்கள் :மனோ + லலிதா ஷாகிரி – இசை: இளையராஜா
” நிலாக்குயுது நேரம் நல்ல நேரம் ” பாடலின் சாயல் நிறைந்த இந்த பாடலையும் அதே போன்ற காட்சியமைப்புக்கு இயல்பான பாடலாக அமைத்த இசைஞானியின் அழகிய கற்பனை வியக்க வைக்கும்.
ஒலியின் இன்பத்தில் விளையும் நூதனங்களை எல்லாம் விரித்து விரித்து செல்லும் இசை மயாஜாலக்காரன் என்பதை உணர்த்தும் பாடல்.

09 தென் பொதிகை தென்றல் காற்றே – படம்: காவல் கீதம் 1992 – பாடியவர் :சித்ரா – இசை: இளையராஜா
வாழ்வின் இனிய தருணங்களையும் , வாழ்வின் மீதான பிடிப்புக்களையும் தனது இசைச் சித்தரிப்புக்களில் ஈர்ப்புமிக்க ராகங்களில் அமைத்து பேரெழுச்சி தரும் இது போன்ற இசையற்புதங்களை பேரியக்கமாக நிகழ்த்திக்க்காட்டியவர் இசைஞானி.அவரது வற்றாத இசைப்பெருங்காதல் எவ்விதமானது என்ற எண்ணம் இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னுள் எழும் . கனிவும் , பாசமும் வெளிப்படும் இந்தத் தாலாட்டுப் பாடலை நெகிழ்ச்சியுடன் பாடி சிறப்பித்திருக்கிறார் சித்ரா.

10 தாழம் பூவே வாசம் வீசு – படம்: கைகொடுக்கும் கை 1986 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
சில பாடல்களைக் கேட்கும் போது மனது மலரும் பூ போல இதழ் அவிழ்ந்து நிற்கும் அழகிய நிலைக்கு கொண்டு சென்று விடும்! செவ்வியல் இசை ராகங்களின் அழகின் உன்னதத்தை மெல்லிசைவார்ப்புக்களில் அதன் அதீத ருசிகளை உணர்வுகளின் உன்னத படிமங்களாக விரித்து ,ராகங்களை இன்னதென்று அறியாத ரசிகர்களின் மனதில் ராகங்களின் சுகந்தங்களைக் கொண்டு வந்து சேர்த்த திரை இசையமைப்பாளர்களில் உச்சம் தொட்ட இசைமேதை இசைஞானி இளையராஜா.
பாசத்தில் திளைக்கும் காதலர்களின் உள்ளத்திளைப்பு இந்தப்பாடல்.

11 துள்ளித் துள்ளி நீ பாடம்மா – படம்: சிப்பிக்குள் முத்து 1986 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
இந்தப் பாடலை முதன் முதலில் கேட்ட போது ஏதோ தெலுங்கு வாசம் வீசுவதாக உணர்த்திய பாடல்.சீதையம்மா ,,சீதையம்மா என்ற சொல்லாடல் தான் அதன் காரணமாய் அமைந்தது.என்னுடைய கணிப்பு தவறவில்லை.தெலுங்குப்படத்தின் மறுபதிப்பு இந்தப் படம்.
பார்த்தீரா இவர் சரசம் , கண்ணுடன் கலந்திடும் சுப தினமே , போன்ற மத்யமாவதி ராகப்பாடல்களை கண்டசாலா பாடி கேட்கும் போதெல்லாம் தெலுங்கு வாசம் வீசும்.அந்தப்பாடல்கள் எல்லாம் தெலுகு இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது மேலே குறிப்பிட்ட மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் தெலுங்கு இசையமைப்பாளர்களின் ரசனையையும் , புலமை விளையாட்டையும் கேட்டு வியக்கிறேன்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இசைஞானி தெலுங்கு வாடை வீச இசையமைத்தது தான்.தண்ணீரை பழமாக மாற்றும் இயற்கையின் மந்திரஜாலம் போல படைப்பாற்றலில் ஜாலங்கள் செய்யும் இசைஞானியின் நூதன விளையாட்டு.

12 பொன்வானப் பூங்காவில் தேரோடுது – படம்: வாலிபமே வா வா 1982 – பாடியவர்கள் :கே + ஜே . ஜேசுதாஸ் எஸ்.பி.சைலஜா – இசை: இளையராஜா
ராகங்களை ரசிக்க மெல்லிசையின் இன்பத்தில் திளைப்பது பயன் தரும் என்பதை உணர்த்தும் பாடல் இது.மேலைத்தேய இசையொழுங்கமைப்பை [ Arrangement ] வித்தியாசமாகக் காட்ட முனைந்த பாடல்.Counterpoint என்ற மேலை இசையின் அடிப்படையில் வாத்தியங்களின் வித விதமான அணிச் சேர்க்கைகளால் அழகு பெரும் பாடல்.

13 தங்க நிலவுக்குள் நிலவொன்று – படம்: ரிக்சா மாமா 1991 – பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
மெல்லிசையின் உச்சம் தொடும் மத்யமாவதி ராகத்தின் இனிய பாடல் இது.மெல்லிசையில், வாத்திய அமைப்பில் இது போல ஒரு பாடல் தமிழ் திரை இசையில் , இல்லை இந்திய திரையிசையில் வந்ததில்லை என்று அடித்துக் கூறக் கூடிய பாடல்.
இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நாடி நரம்புகளில் இரத்த ஓட்டம் விரைந்தோடி உடலெல்லாம் மயிர்க்கூச்செறிந்து விடும்.
வாத்திய அமைப்பைக்கொண்டு இந்த விதமான இன்ப உணர்ச்சி பேரலையை இசைஞானிக்கு முன்போ இல்லை பின்போ யாரும் செய்யவில்லை எனலாம்.இது போன்ற வாத்திய அமைப்பின் சௌந்தர்யங்களை ஆழத்திலும் அகலத்திலும் தந்த இசைஞானி இளையராஜா பற்றி ஹிந்தி திரை இசையின் பீஷ்மர் என வர்ணிக்கப்படும் இசைமேதை நௌசாத் அலி பின்வருமாறு கூறினார்.
” THIS MAN [ ILAIYARAJA ] HAS ACHIEVED IS 100 TIMES MORE THAN WHAT ANY OF US HAVE ACHIEVED.” – nausad ali

14 வெள்ளி நிலவே நீலக் கடலைப் பாடிடச் சொன்னது யார் படம் : சின்ன வாத்தியார் 1995 – பாடியவர்: கே.ஜே .ஜேசுதாஸ் – இசை : இளையராஜா
மத்யமாவதியின் சுகமான தீண்டலில் நம்மை மிதக்க வைத்து , வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வுகளைக் கிளர்த்தி ஊனை உருக வைக்கின்ற பாடல்.நெஞ்சை விம்ம வைக்கும் பாடல்.
பாடலின் பல்லவி முடிந்து 01:10 நிமிடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆர்மோனியத்தின் இசையும் ,அதப் பின் தொடரும் வயலின் அணி வகுப்பும் [ 01:40 வரை ] துயரத்தின் எல்லைக்கும் ,கருணையை நீக்கமறவும் தந்து ராக பேராற்றில் நம்மை கரைய வைக்கிறது.
பாடலின் சரணத்திற்கு முன் வரும் வேறு விதமானபின்னணி இசையால் எவ்வளவு உணர்வைக் காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டி மத்யமாவதியின் ஆற்றலையும் தனது ராகத் திளைப்பையும் நமக்குக் கற்றுத் தருகிறார் இசைஞானி.
இசை என்பது வெறும் ஒலிகள் மட்டுமில்லை , உணர்வுகளின் ஓலம் என்று காட்டியவர் இசைஞானி இளையராஜா.
பாடலை பாடியவரும் நமது ஆன்மாவைத் தழிவிச்செல்லும் வகையில் பாடியிருக்கிறார்.

15 நீதானே எந்தன் பொன் வசந்தம் – படம்: நினைவெல்லாம் நித்யா 1982 – பாடியவர் : எஸ்.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
“இசையில் சித்து விளையாட்டு ” இது தான் என்பதை இந்தப் பாடலின் வாத்திய இசையில் கேட்டு நாம் திளைக்க இசைஞானி தந்த தேனிசை விருந்து.

16 வனமெல்லாம் செண்பகப்பூ – படம்: நாடோடிப் பாட்டுக்காரன் 1994 – பாடியவர் : எஸ்.பி .பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
பாடலின் பல்லவி முடிவில் [ 01:06 நிமிசத்திலிருந்து 01:36 வரை ] செனாய் வாத்தியத்தின் எழுச்சி இசையும் தொடரும் புல்லாங் குழல் இசையும் நெஞ்சை அள்ளும் நாட்டுப்புற இசைத் தாளமும் இசைஞானியின் இசைத் திளைப்பு !!
இவை மட்டுமா இசைஞானியின் கற்பனை இன்னும் விரிந்து செல்லும் பேராச்சரியம் மேலும் மேலும் வியக்க வைக்கும்!!

17 பொன் மேனி உருகுதே – படம்: மூன்றாம் பிறை 1991 – பாடியவர் : எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
18 கன்னி இளம் பூவுடல் – படம்: ஆயிரம் நிலவே வா 1982 – பாடியவர் : எஸ் .ஜானகி – இசை: இளையராஜா

19 அழகான மஞ்சப்புறா – படம்: எல்லாமே என் ராசா தான் 1995 – பாடியவர் : மனோ +எஸ் .ஜானகி – இசை: இளையராஜா
தமிழ் திரை இசை போல வேற்று மொழிகளிலும் மத்தியமாவதி ராகத்தின் அற்புதத்தை சினிமா இசைமேதைகள் அள்ளித் தந்து நம்மை மகிழ்வித்திருக்கின்றனர்.

ஹிந்தியில் வெளி வந்த [ Film Sawan Ko Aane Do – music Rajkamal ] ” Teri Tasveer Ko Seene Se Laga ” என்ற ஜேசுதாஸ் பாடல் இதயங்களைப் பிணிக்கும் வல்லமை கொண்டதாகும்.
1960 களின் மிகப்புகழ் வாய்ந்த Mother India [1960] திரைப்படத்தில் சில பாடல்களை மத்யமாவதி ராகத்திலேயே இசையமைத்து பெருமை சேர்த்திருப்பார் இசைமேதை நௌசாத்.
அந்தப்படத்தில் இடம் பெற்ற ” Dukh Bhare Din Beete Re ” என்ற புகழ் பெற்ற பாடலின் எதிரொலியை மெல்லிசைமன்னர்களின் பாசமலர் படப் பாடலான ” எங்களுக்கும் காலம் வரும் ..” என்ற பாடலில் கேட்கலாம்.

தமிழ் பக்திப்பாடல்களில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ” மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி ” என்ற பாடல் மத்யமாவதியின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும், மத்யமாவதிக்கு மிகநெருக்கமான ராகம் பிருந்தாவனசாரங்கா ராகம்.
தொடரும் ….

முன்னைய பதிவுகள்:

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 22 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 19 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 18 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

கண்ணாடி ஓவியம் உங்கள் பார்வைக்கு…

Nesaganam art of audio:

glass-bgok-2-j

நேசகானத்தின் ஜீனியர் ஏஞ்சல்
சஞ்சனாஸ்ரீ வரைந்த பரிசுபெற்ற
கண்ணாடி ஓவியம் உங்கள் பார்வைக்கு…
அழகு முருகனை
மேலும் அழகாக்கியது
நம் கண்மணியின் விரல்கள்!

 

ஈரோடு -இலவச மருத்துவ முகாம்

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை
ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் TRUST
இணைந்து நடத்தும்
இலவச மருத்துவக் கண்காட்சி பலதுறை இலவச மருத்துவ முகாம்

camp12

நாள் : 30 செப்டம்பர் , 1 மற்றும் 2 அக்டோபர் 2016
வெள்ளி,சனி,ஞாயிறு

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பலன்பெற
அனைவரையும் அன்பொடு அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்.

மல்லிகை அரங்கம் – ஈரோடு,
நாள் : 30 செப்டம்பர் , 1 மற்றும் 2 அக்டோபர் 2016
வெள்ளி,சனி,ஞாயிறு

நேரம் : காலை 9.30 மணிமுதல் இரவு 8 மணி வரை.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பலன்பெற
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்.

செவிக்கு தெவிட்டாத இன்பம்

செவிக்கு தெவிட்டாத இன்பம்coollogo_com-57931935

kkl

தேனிசைக்குரலுக்கு சொந்தமாய், கவிதைப்பூத்துக்குலுங்கும் பேச்சாற்றளும், குயில் பேச்சுக்கு சொந்தக்காரியாய், நேசகானம் இணைய வானொலியில் இசையின் மடியில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் தொகுப்பளினியாய் திகழும் அன்பு ஜெர்மனி கவிதைக்குயில் பா. ராகினி பாஸ்கரன் அவர்களின் நிகழ்ச்சிகள் கேட்க மிக இனிமையாக செவிக்கு தெவிட்டாத இன்பத்தையளிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் இவரின் நேர்காணல் நிகழ்வுகள் மிக அருமையானதாக உள்ளது. பல விடயங்களை தெளிவுசெய்கின்றன. அருமையான தொகுப்பினில் நேர்த்தியான கேள்விகளும் இனிமையான் குரல் வளத்தால் செம்மை செய்கிறார் என்பதே உண்மை.

இவரின் நிகழ்வுகளில் மேலும் பல வெற்றிகளும், சிறந்த தொகுப்பாளினியாகவும் சிறந்து விளங்க என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

kvin-murugu

– கவிஞர். கு. நா. கவின்முருகு

ஜோக்கர்…. வேடிக்கை மனிதர்களுக்கு ஒரு செருப்படி!

ஜோக்கர்…. வேடிக்கை மனிதர்களுக்கு ஒரு செருப்படி!

– எஸ் ஷங்கர்

நடிகர்கள்: குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், மு ராமசாமி, பவா செல்லத்துரை, காயத்ரி கிருஷ்ணா

இசை: சீன் ரோல்டன்

ஒளிப்பதிவு: செழியன்

எழுத்து – இயக்கம்: ராஜு முருகன்

யாரையும் நம்ப முடியாத இன்றைய உலகில், எவ்வளவு பெரிய அநியாயம் அல்லது கொடுமையையும் வேடிக்கையாய் கடந்து போகும்.. அல்லது குதற்கக் கேள்வி எழுப்பி நீர்த்துப் போகச் செய்யும் இன்றைய வக்கிரம் பிடித்த சூழலில் இப்படி ஒரு சினிமா சாத்தியமா? அதை சென்சார் அனுமதிக்குமா?

இரண்டுமே நடந்திருக்கிறது… விளைவு ஜோக்கர்!

‘இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னா… பேள்றதும் கஷ்டமாப் போச்சே’ என படத்தில் ஒரு பாத்திரம் பேசும் வசனம்தான் படத்தின் மையக் கரு.

Joker Review

டாய்லட் கட்டுவதில் கூட எந்த அளவு கொள்ளையடிக்கிறார்கள் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் என்பதை இத்தனை பட்டவர்த்தனமாக இதுவரை யாரும் காட்சிப்படுத்தியதில்லை.

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் எங்கள் ஊரைச் சுற்றிய 12 கிராமங்களில் நடந்த தொகுப்பு வீடு கட்டுதல், அம்மா வீடு கட்டுதல் மற்றும் இலவச கழிப்பிடம் கட்டுவதில் நடந்த கேவலங்களைக் கண் முன்னே நிறுத்தின.

Joker Review

இதேமாதிரிதான் கலர் கலர் கதவுகளைப் பின்னணியில் வைத்து புகைப்படம் எடுத்து அனுப்பி, ஒரு கக்கூஸ் தொட்டியை மட்டும் கையில் கொடுத்து அனுப்பினார்கள் அதிகாரிகள்.

வீடுகட்ட அரசு ஒரு லட்சம் ஒதுக்கினால், அதில் 50 ஆயிரம் கூட கைக்கு வராத நிலைதான் இன்றும் கிராமங்களில்.

இடிந்து விழுந்த கழிப்பிடத்துக்குள் சிக்கி முக்கால் உயிரை விட்ட கர்ப்பிணிப் பெண்ணை, ஜனாதிபதி பேசிவிட்டுப் போகும் வரை பெஞ்சில் கிடைத்திவிட்டு, கத்தும் அவள் கணவனை வீட்டுக்குள் அடைக்கும் கொடூரம்தான் இந்த நாட்டில் அவ்வப்போது கொண்டு வரப்படும் திட்டங்களின் லட்சணங்கள்.

ஹெலிகாப்டரைப் பார்த்துக் கும்பிடும் கேவலத்தையும், அரை மணி நேர உண்ணாவிரத அற்பத்தனைத்தையும் தொட தனி தைரியம் வேண்டும்.

இந்தப் படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் இந்த சமூகத்தின், அதன் அலட்சிய மனிதர்கள் மீதான சுளீர்.

Joker Review

“அப்பல்லோவுக்கு எடுத்துட்டுப் போகணும்னா எதுக்கு கவர்மென்ட்? ஓட்டை எல்லாம் அப்பல்லோவுக்கு குத்தலாமா?”

‘நாம ஓட்டு போட்டுதானே அவன் ஆட்சிக்கு வர்றான். அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு. அவன் அநியாயம் பண்ணா அவனை டிஸ்மிஸ் பண்ண உரிமையில்லையா?’

‘நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’

‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை… சகாயம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்…’

‘இந்த ஜனங்க இப்படிதான். தீயவங்க பின்னாடி போகும். கெட்டவங்களை ஜெயிக்க வைக்கும். அபத்தங்களைக் கொண்டாடும். அதுக்காக நாமளும் அப்படியே பதவிக்கும் பவுசுக்கும் அடிமையாக முடியுமா… இதுக்கு பதிலா பீ தின்னலாம்…. பெத்த அம்மாவையும் கட்ன பொண்டாட்டியையும் விலைக்கு விக்கலாம்..!’

சுவாதி கொலை சம்பவம் படமானது

சுவாதி கொலை சம்பவம் படமானது

 

201609011008043523_Swathi-murder-incident-filming_SECVPFவிதார்த், பூஜா தேவாரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், குற்றமே தண்டனை, நாசர், ரவிமரியா, மாரிமுத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை மணிகண்டன் டைரக்டு செய்துள்ளார்.

இவர் காக்கா முட்டை படத்தை இயக்கி பிரபலமானவர். குற்றமே தண்டனை படம் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் சுவாதி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

ஒரு தலைக்காதலால் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அந்த கொலையை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே கதை. இந்த படம் குறித்து டைரக்டர் மணிகண்டன் கூறியதாவது:-

“சுவாதி கொலை சம்பவத்துக்குள் விடை தெரியாத பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. குற்றமே தண்டனை படத்திலும் அதுபோன்ற ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையை பார்த்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற உளவியல் ரீதியான விஷயங்களை இதில் காட்சிப்படுத்தியுள்ளேன். ஐந்து கதாபாத்திரங்களை சுற்றி கதை நகரும். எனது படங்களில் சில உண்மை சம்பவங்கள் கலந்து இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கிறது.

விதார்த், ‘கிரடிட் கார்டு’ பயன்படுத்துவோரிடம் பணம் வசூலிக்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். எனது படங்களை அதிக செலவில் எடுப்பது இல்லை. எனவே தயாரிப்பாளர்களுக்கு அவை நஷ்டத்தை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கதாபாத்திரங்களுக்கு பொருந்தாத பாடல்களை படங்களில் திணிப்பதும் எனக்கு பிடிக்காது.

குற்றமே தண்டனை படத்தை பாடல்கள் இல்லாமலேயே எடுத்து இருக்கிறேன். இந்த திகில் படத்துக்கு இளையராஜா சிறப்பாக இசையமைத்து இருக்கிறார். ஹரிஹர நாகநாதன், முத்து, காளஸ்வரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விதார்த் கூறும்போது, “ மைனாவுக்கு பிறகு எனக்கு சிறந்த படமாக குற்றமே தண்டனை அமைந்துள்ளது. இந்த படம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்று இருக்கிறது. ஒரு கொலையை நேரில் பார்க்கும் இளைஞனுக்குள் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றங்களே கதை. ரசிகர்களுக்கு இது புதுமையான படமாக இருக்கும்” என்றார்.

இதயத்துக்கு இதமான 10 மாற்றங்கள்!

இதயத்துக்கு இதமான 10 மாற்றங்கள்!

 • *பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்துவிட்டு, நட்ஸ், காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்.
  *மீன் உணவு மிகவும் நல்லது. பொரிக்கப்பட்ட மீன்களைத் தவிர்த்துவிட்டு, வாரம் இருமுறை குழம்பு மீன் அல்லது தவாவில் சுட்டெடுத்த மீன் சாப்பிடலாம்.
 • *சமையலுக்கு நல்லெண்ணெய் நல்லது. செக்கில் ஆட்டிய எண்ணெய் சிறந்தது.
  *டைனிங் டேபிளில் உப்பை வைக்காதீர்கள். சமைக்கும்போது சேர்த்த உப்பே (Sea salt) போதும்.
  *கேக், சாக்லேட் என செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
  *ஒரு வாரத்துக்கு இரண்டரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்திருக்க வேண்டும். எத்தனை நாட்கள் நேரம் ஒதுக்கி நடக்கறீர்கள் என்பது உங்களது விருப்பம்.
  *நாள்தோறும் 15 நிமிடங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும். சீரிய சிந்தனைகளும் கூடாது.
  *புகை, மதுப் பழக்கத்துக்கு எந்த மாற்றையும் தேடாமல் ‘ஸ்டிரிக்ட்லி நோ’ சொல்ல வேண்டும்.
  *மூச்சை மெதுவாக இழுத்துவிடுவது, ஆழ்ந்த மூச்சாக இழுப்பது போன்றவற்றை நாள்தோறும் ஐந்து நிமிடங்களுக்காவது பயிற்சி செய்யுங்கள்.
  *சோடா, குளிர்பானங்கள், கோலா பானங்கள், செயற்கை பழச்சாறுகளைத் தவிர்ப்பது அவசியம்.

குழந்தை வளர்ப்பு பாசம் நிறைந்த கலை

குழந்தை வளர்ப்பு பாசம் நிறைந்த கலை

0508121751451zoe__2f

குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் கிடைத்திருக்கும் வர பிரசாதம் என்று நினைத்தாலும் ,அக்குழந்தையை எவ்வாறு நல்ல முறையில் வளர்ப்பது என்ற பயம் எல்லா தாய்மார்களுக்கும் இருக்கிறது .ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இதோ உங்களுக்காக

பிறப்பு முதல் ஒரு வயது வரை

பிறந்த குழந்தைக்கு தினமும் இரண்டு மணிக்கு ஒரு முறை பாலூட்ட வேண்டும் .குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.பசியால் அழுகிறதா அல்லது வாயு (காஸ்) -ஆல் அழுகிறதா என்று பார்க்க வேண்டும்.ஒவ்வொரு முறை பால் கொடுத்தபிறகு குழந்தையை தோளில் போட்டு மெதுவாக தட்டி கொடுக்கவேண்டும்

குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.

பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்’ பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்’ மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இல்லையெனில் குழந்தையை குளுப்பாடும் பாத் டப் -ல் குளுப்படலாம் .

குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.

சில குழந்தை வாயில் விரல் வைக்கும் பழக்கம் இருக்கும் .அது எதற்காக என்று தெரிந்து கொள்ளவேண்டும் .சில குழந்தை பசிக்காக அழும் ,சிலர் வாயில் விரல் வைத்து தன் பசியை தெரிவிப்பார்கள் .என்னவே பசி அறிந்து தகுந்த நேரத்தில் உணவு கொடுதொமேன்றால் விரல் வைப்பதை குறைக்கலாம்.

இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.

ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்’ கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்குதேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.

2 முதல் 3 வயது வரை:

இரண்டு வயது முதல் நான்கு வயது வரை மிகவும் துருதுரு என்று இருக்கும் பருவம் .இரண்டு வயதில் சில வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும் குழந்தையுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் .அப்பொழுது தான் நிறைய பேச கற்றுகொல்வார்கள்.  அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான் குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல் பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்’டிடம் ஆலோசனை பெறவேண்டும் .

குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை நிறுத்துவதற்காக அடிப் பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில் குழந்தைகள் கிடைப்பதை எல் லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த அடிப்படையில்தான் விரலை யும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும் சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி விடும்.

இரண்டு வயது குழந்தைகள் 9மணி நேரமாவது உறங்கும். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே தூங்கி னாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

குழந்தைகள் மூன்று, நான்கு நாட்க ளுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளி யேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம் கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத் தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந் தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.குழந்தைக்கு நிறைய தண்ணீர் தினமும் கொடுக்கவேண்டும்.மலச்சிக்கல் போக காலையில் உலர் திரக்சை ஊறவைத்த தண்ணீரையும் அந்த பழத்தையும் சேர்த்து கொடுத்தால் மலசிக்கல் போய்விடும் .

குழந்தைகள் பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து கொடுக்கும்போது அவைகளு டைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பி விட வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும்போது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில் அது இருக்கவேண்டும்.ஒவ்வொரு முறை விளையாட கொடுக்கும் பொது நன்றாக சுத்தம் செய்து கொடுக்கவும் .  பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல் போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்

4 முதல் 10 வயது வரை:

இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள். இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா சுவர்களிலும் வரைவது வரவேற்கத் தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச் சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும் பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து விடுங்கள்

பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள் அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ,அவைகளுக்கு ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன் படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை, ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.

5, 6 வயது சிறுவர் :

சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப் பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல் ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.
பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும் இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான் செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள் மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும் நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச் செய்யும்.

இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை செலுத்தச் செய் யுங்கள்.

சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ, குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்’ என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

மறைந்து போகும் தொழில் நுட்பங்கள்

smartwatchநம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன. எந்த மக்களாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் வாய்ப்புகளை இப்போதே காட்டி வருகின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் காட்சியை இணைக்கப்பட்ட டிவியில் காட்டும் ஒருவர், பெரிய தொழில் நுட்பம் தெரிந்தவராக்க கருதப்பட்டார். தொடர்ந்து வி.சி.ஆர். வந்தது.

நாம் பார்க்காத சேனல், வி.சி.ஆரில் பதிந்து கிடைத்தது பெரிய அதிசயமாக்க் கருதப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், வினைல் இசைத் தட்டுக்கள் 15 ஆண்டுகளில், மொத்தமாக, வழக்கொழிந்து போகும் என யாராவது எண்ணி இருப்பார்களா? அதன் பின்னர், வந்த சிடிக்களும் காணாமல் போகும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா? ”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற கோட்பாட்டினை, இவை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.இனி அடுத்து வழக்கொழிந்து போக இருப்பது, ஸ்மார்ட் போன் திரைகளே என சிலர் அடித்துச் சொல்கின்றனர். அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் தொடர்ந்து வரத் தொடங்கி உள்ளன.
ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் க்ளாஸ் ஆகியவை டச் ஸ்கிரீன் திரைகள் கொண்ட ஸ்மார்ட் போனின் இடத்தைப் பிடிக்க இருக்கின்றன. இந்த 2014 ஆம் ஆண்டில், 1.9 கோடி என்ற எண்ணிக்கையை இந்த அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் எட்ட இருக்கின்றன. 2018ல் இவற்றின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருக்கும்.
ஆனால், அவை இன்றைக்குக் கிடைக்கும் அணியும் சாதனங்களாக இருக்காது. இவை மேலும் மேம்படுத்தப்பட்டு கூடுதல் வசதிகளுடனும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாகவும் இருக்கும். உங்கள் சட்டையில் முதல் பட்டன், உங்களின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் ட்ரைவிற்கான முகவாயிலாக இயக்கப்படும். கூகுள் கிளாஸ் தொடர்ந்து மேம்பாடு அடைந்து, எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும்.
அடுத்த நிலையாக, மனித உடலில் பதித்து இயக்கக் கூடிய RFID சிப்கள் வடிவமைக்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி, நம் வீட்டின் கதவுகளையும், கார் கதவுகளையும் திறக்கலாம். கண் பார்வையிலேயே இவை இயக்கப்படும். இன்னும் 20 ஆண்டுகளில், எந்த செயல் மனிதன் செய்யக் கூடியது, எந்த செயல் கம்ப்யூட்டர் செய்யக் கூடியது என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகிவிடும்.
இன்றைய சாதனங்களின் பயன்பாட்டில், பேட்டரிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆனால், அவை கையாள்வதற்குப அதிக எடை கொண்டனவாகவும், பெரியனவாகவும், சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவையாகவும் உள்ளன. எனவே, பேட்டரிகளுக்கு மாற்றாக, சூப்பர் கெபாசிட்டர்கள் அல்லது எரிபொருள் கொண்ட செல்கள் (Fuel cells) பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.
மவுஸ் மற்றும் கீ போர்ட்கள் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். குரல், கையசைவு, முக அசைவு, கண் அசைவு மற்றும் சில புதிய வகை கட்டளைகள் பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு மாற்றிப் பெறப்படும். தொடு உணர் திரை கட்டளைகள் தொடரலாம். ஆனால், அவை ஆய்விற்கு கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே பயன்படுத்தப்படும் சாதனமாக இருக்கும்.
நம் இல்லங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் அழுத்தி இயக்கப்படும் பட்டன்கள் மறைந்து கொண்டு வருகின்றன. ரிமோட் கட்டுப்பாடு சாதனங்கள் பலவகைகளில் வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இப்போதே, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களே, அறைகளில் உள்ள மியூசிக் சாதனங்கள் மற்றும் பிறவற்றைக் கட்டுப்படுத்தும் சாதனங்களாக உருவெடுத்து வருகின்றன. மேலும் தொலைவில் இருந்து இயக்கும் இயக்கங்களும் இப்போதே கிடைக்கின்றன. தொலைந்து போகும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை முடக்கி வைக்கும் தொழில் நுட்பத்தினை இப்போது சர்வ சாதாரணமாக மக்கள் கையாள்கின்றனர். எதிர்காலத்தில், வாஷிங் மெஷின்களை, ஒரு தொழில் நுட்ப டெக்னீஷியன், அவர் அலுவலகத்தில் இருந்தவாறே சரி செய்திட முடியும்.
நாம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் கட்டுப்பாடு ஒரு நிறுவனத்தில் மையமாக இருக்கும். தனி மனிதர்களை நம்புவதைக் காட்டிலும் இந்த சாதனங்களையே நிர்வாகிகள் நம்புவார்கள். அல்லது நம்பிக்கை வைத்திட மறுப்பார்கள். குறிப்பிட்ட சாதனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இருக்கும் இடம், நெட்வொர்க் அடிப்படையில், அதனை நிர்வாகிகள் நம்பத் தொடங்குவார்கள். அல்லது நம்பிக்கை இழப்பார்கள்.
அப்படியானால், இத்தனை விஷயங்களில் எது அதிக நாள் பயன்பாட்டில் இருக்கும்? இந்த கேள்விக்குப் பலரும் மின் அஞ்சல் தொழில் நுட்பத்தினையே சுட்டிக் காட்டுகின்றனர். இன்றைய சாப்ட்வேர் உலகில் வெகு நாள் வாழக் கூடிய கரப்பான் பூச்சியாக, மின் அஞ்சல் புரோகிராம்கள் இருக்கும். இந்த திட்ட அடிப்படை மாறாது. அஞ்சல்களை அணுகும் சாதனங்கள் வேண்டுமானால் மாறலாம். அணிந்து கொண்டு இயக்கும் சாதனங்களே, அஞ்சல் பார்த்துப் பதிலளிக்கும் சாதனங்களாக அமையலாம். மின் அஞ்சல் கட்டமைப்பு மட்டும் மாறாது. நம்மை விட்டுப் போகாது.

நன்றி: கம்ப்யூட்டர்மலர்

தாரம் பாரம் இல்லை

ng1

சிவா கவிதைகள்

தாரம் அவள் எனக்கு
என்றும் அவள் பாரம் இல்லை.
மாமி வீட்டு மானம் காக்க
வந்த குல சாமி அவள்.

என்னை தாயாக ஏசுவாள்
சேயாக பேசுவாள் என்னை
அவள் தாய் தந்தையிடம்
என்னை விட்டு குடுக்காதவள்
எனக்காக அவள்
தாய் தந்தையையே விட்டு குடுத்தவள்.

என் கண் பார்த்து கரம் நீட்டும்
திசை நோக்கி அம்பென பாய்வாள்
அவள் கண் கலங்கி என்னை
பார்க்கும் அவள் பார்வை அன்பெனும் கூர்வாள்

நாத்தனாரின் நலன் விரும்புவாள்
கொழுந்தனின் குணம் மாற்றுவாள்
மாமியின் மனம் போற்றுவாள்
மாமனாரின் தனம் கூட்டுவாள்
காலை துயில் எழுந்து
இரவு துயில் கொள்ளும் நேரம் வரை
அவள் படும் பாடு, கேட்டாள்
அடுபங்கரை எறும்புகள் கூட
அழுது புலம்புகின்றன.

வாழ வந்தவள் எனக்கு
வாழ்க்கை வாழ கற்று தந்தவள் ,
என் குழந்தையின் நோய் தீர்க்கும்
மருந்து அவள்.

எல்லாரும் நலம் வாழ
விரதம் இருப்பாள் எங்கள் வயிறு
வாழ நல்ல விருந்து வைப்பாள்.

குடுத்தத்தை வைத்து
இருப்பதை பொருத்து
செலவை குறைப்பாள்
என் வரவை நிறைப்பாள்
தந்தை வீட்டில் என்
தன்மானம் போற்ற பல விந்தை புரிவாள்..

என்மாமனின் மனம் போற்ற
பல வித்தை புரிவாள்.

விட்டு போன சொந்தங்களையும்
தொட்டு போக வைப்பாள்
ஓடி போன பந்தங்களையும்
நாடி வர வைப்பாள்.

கோடி கொட்டி கொடுத்தாலும்
வாங்க முடியாத இந்த உறவை
பொருள் தேடி விட்டு சென்றாலும்.,
உயிர் போக விட்டு சென்றாலும்
உடனே வருவாள் எமனிடம்..
என்னை மீட்டு எடுக்க..

தாரம் அவள் எனக்கு தாயவள்
என்றும் எனக்கு இல்லை பாரம் அவள்…

-சிவா .

2.சோழன் வழி வம்சம் இவன்
சூரியனோட அம்சம் இவன்,
விஜயாலயனின் வீரம் இவன்
சுந்தரனின் பேரன் இவன்…

சோழநாட்டின் வீரன் இவன்
சூராதி சூரன் இவன்…

வேல் எடுத்து நீ எறிஞ்சா, வேங்கை அது விழுந்திடுமா,
விழி பார்க்கும் பார்வையிலே, வேல் முறிஞ்சி போய்டுமே…

கால் பதித்த இடத்தினிலே களிறும் பிளிறுமடா
இவன் கால் தடம் பதித்த இடத்தினிலே கலிங்கமும் அடங்குமடா…

வாள் எடுத்து இவன் நின்றால், இமயமும் வணங்குமடா,
வேல் எடுத்து இவன் எறிஞ்சா வேங்கிநாடும் சாயுமடா,
ஒத்துக்கிட்டு நீ நடந்தா, ஒற்றுமையா போவோமடா ,
புத்திகெட்டு நீ நடந்தா புறமுதுகிட்டு போவாயாடா…

கண் இமை காட்டியதிலே கடாரமும் விழுந்ததடா,
விரல் சொடுக்கு போட்டதிலே ஈழமும் இணங்கியதடா,
போர் தொடுத்து இவன் நின்றால்,
பார் நடுங்கி போகுமடா…

சுத்தி நின்று நீ முறைத்தால் , சுத்தமான வீரன் இவன்
எட்டி நின்று நீ சிரித்தால், வெட்டி விடும் சூரன் இவன்
சத்தியத்தை நீ மதித்தால், சத்தியமா சொல்லுறேன் நான்,
உத்தமன்தான் இந்த சோழ மன்னன்,
குற்றமென்று நீ உணர்ந்தால்,
குலம் காக்கும் கொற்றவன்தான் இந்த சோழ மன்னன்…

கடல் கடந்த நாடெல்லாம், இவன் கால் தொட்டு போகுமடா,
கரை இல்லை இவனுக்கு, கடல் மட்டும் சொந்தமடா
படை எடுத்த பாண்டியனும் தடம் மாறி போனானடா,
சீறிவந்த சேரனும் சிரம் இழந்து விழந்தானடா…

சோறுடைத்த சோழம் நாங்க , போர் தொடுக்க வந்தோம்ங்க,
மண் பார்த்து பழக்கம் இல்ல , பொன் பார்த்து மயங்கியது இல்ல,
தினவெடுத்த தோள்கள் இரண்டு, திமிர் பிடித்த வீரம் உண்டு,
கவிதையான காதலும் உண்டு , காதலுக்கு இலக்கணம் உண்டு,
கயவரை வேர் அறுக்கும் கன்னியும் உண்டு…

இவனுக்கு அழகான அத்தையும் உண்டு, அறிவான மாமனும் உண்டு,
பெயர் சொல்லும் பிள்ளையும் உண்டு , பகைவர் வேர் அறுக்க சோழ படையும் உண்டு,
இவன் அப்பனோட அதிசயம் ஒன்று,
அதைபார்த்து அகிலமும் அசருது இன்று…

அப்பன் பேச்சை மீறினது இல்லை, அம்மா இல்லா கவலையும் இல்லை,
தங்கையின் அன்புக்கு எல்லை இல்லை,
அத்தைக்கு மிஞ்சிய அன்பும் இல்லை ,
மாமன் இருக்க அவனுக்கு என்றும்
போருக்கு செல்ல தடையே இல்லை…

எதிரில் நிற்க எதிரிகள் இல்லை ,
இனியும் அவன் வெல்ல உலகில் எல்லைகள் ஏதுமில்லை…

சோழநாட்டின் சூரன் இவன்
இராஜேந்திர சோழன் இவன்…

……….சிவா

3.வல்லவர் வழி வம்சம்தான்
மாவலியின் மறு அம்சம்தான்

வல்லத்து வீரன்தான்
வணங்கதா சூரன்தான்

ஆதித்யன் தோழன்தான்
அசராத பீமன்தான்..

வழி மாறி வரலைங்க
சோழம் குல காக்க வந்தேங்க..

ஆடி திருநாளில்
ஆசையாய் வந்தேங்க
கடல் போன்ற எரி ஒன்று
கதிகலங்கி போய் நின்றேனுங்க..

பெண்கள் கூட்டம் என்று
தயங்கி தயங்கி வந்தேங்க
தடம் பதித்து நின்னெனுங்க..

கடம்பூர் வந்தேங்க, கந்தமாறா என்றென்ங்க
கதிகலங்கி போனாங்க…

இவள் தான் என் தங்கை என்று அறிமுகம் செய்தான்ங்க..

இமை மூட மறந்தேன்

அசையாமல் நின்றெங்க
அடுத்தநொடி சொன்னான்ங்க
இது
தழும்பேரிய சிங்கம் என்று…

மெதுவாய் சொன்னான்ங்க
மேலே சென்று படு என்று.,
புதுசாய் வந்தாங்க
முன்குடுமி நம்பி ஒன்று.

நடுநீசி நேரத்துல
நயவஞ்சக கூட்டம் ஒன்று
நடுவில் பார்த்தால் நானி போனேன் ..நண்பா நீயுமா என்று..

கொள்ளிடம் தாண்டும்வரை
கொதிச்சி போய் நின்றேனுங்க..

குடந்தை நகரிலே
அழகிய பதுமை ஒன்று
அசைந்தே நடந்தம்மா
அடிமை ஆனேன்ம்மா…

பல்லக்கு சொந்தக்காரி
ஆண்டாள் கொண்டைக்காரி
தந்தாள் கணையாழியை
மந்திர கோட்டைக்குள்ளே
தந்திரம் செய்து வா என்று…

கோட்டை வாசல் தாண்ட
கோழை இவன் இல்லை என்று பிடித்தான் இரும்புப்பிடி ஒன்று
அசைந்தேன் ஒரு அடி இல்லை…

அரசனை காண வேண்டி ஆணவம் செய்தே நின்றேன்ங்க.

ஓலையை உருவி கொண்டு
ஓடிப்போ என்றே சொன்னாங்க…

அபயம் அபயம் என்று
அமைதியாய் சொன்னேன்ங்க
அரசன் அருகில் சென்று
இரகசியம் சொன்னேங்க..

இரும்பு கோட்டை அது
எப்படியோ வந்தேன்ங்க
உத்தமா என்று உயிரை தந்தேன்ங்க
கந்தா என்று கடமையை செய்தேன்ங்க…

மச்சினனை காண
மறு ஓலை தந்தாள் தையல்
கடலை தாண்டி கால் வைத்து சென்றேன்ங்க..

அவசரம் என்று அமைதியாய் சொன்னென்ங்க..
அடுத்தநோடி ஆனை
ஏறி வந்தோம்ங்க..

சோழ நாட்டிலே கோலம் போட்டுவிட்டு கொடுமை முடிஞ்சி போக..

கருக்கிபோன உடல் அங்கே
உருகி போன உயிர் இங்கே
உயிரை காக்கபோய்
உதை பட்டு நின்றெங்க…

கோட்டைகுள்ளே குலம் காஞ்சி போச்சுங்க
என் பலம் சாஞ்சி போச்சுங்க…

வந்தால் மகராசி
வாள் தந்தாள் கைராசி
வல்லத்து வீரரே
வளையாத சூரரே என்றாள்ங்க…

மச்சினன் தயவு இருக்கு
மங்காத உறவு இருக்கு
தங்க இடம் இருக்கு
தாங்க உயிர் இருக்கு
சோழம் பலம் இருக்கு
சொந்தம் இது உனக்கு
சொக்குப்போடி போட்டாள்ங்க
சொக்கிப்போய் நின்றேன்ங்க..

சோழ குலம் காத்தேன்ங்க…

இராசேந்திர மாமா என்றதும்
இரசிச்சி போய் நின்றேன்ங்க…

இராசராசன் மச்சான் என்றதும்
மறந்து போய் நின்றெங்க.,
மிச்ச கதை எல்லாம்
மெதுவா சொல்றேங்க….

வல்லத்து வீரன் நான்
வல்லவரையன் வந்தியத்தேவன்தான்…..

அன்புடன். சிவா…..

4.அந்தநாள் ஞாபகம்
~~~~~~~~~~~~~~~
உச்சி வெயில் நேரத்துல
ஒத்தையில போறவளே
உன் பாதம் வேக கண்டு
என் உயிர் நோகுதடி,

ஒத்தையில நான் இருந்தேன்
ஒட்டிகொள்ள நீயும் வந்த
என் மனசுக்குள்ள புது வரவுதான்

தட்டுகெட்டு நான் திரிஞ்சேன்
தாரமா நீயும் வந்த.

ஓலை குடிசை  இப்போ ஒசந்து  போச்சடி
என் மனசும் இப்போ நிறைஞ்சி போச்சடி
என் சோகம் இப்போ
குறைஞ்சி போச்சடி.

என் மனசு நோக கண்டு
பாவி மவ சாக கண்டேன்
படுக்க இடம் இல்ல, பசிக்கு சோறு இல்ல
ஒண்ட வந்த ராசாத்தி
ஒசந்து நின்னா மனசுக்குள்ள
ரோச பட்டு நான் முறைச்சா
பாசம் வச்சி மாத்திடுவா.

ஆசை வச்ச மச்சானை
ஆயுள் வரை காத்திடுவா
நேசம் வச்ச நெஞ்சோடுதான்
நினைவாய் வாழ்ந்திடுவா.

உறவே போன போது
சொந்தம் இருக்கேனு சொன்னவதா
தங்கமே வேணாமே
அங்கமே நீயும் இருந்தா

ஊரே ஒதுக்கும் போது
மச்சான் நான் இருக்கேன் உன்னோடு சொன்னவதான்
வயித்து புள்ளகாரி உன்னை வச்சி
வழி தெரியாம தவிச்சிருந்தேன்

மச்சான் நான் இருக்கேன்
பெத்துடுப்பேன் முத்து ஒன்னு , சொத்து இல்லைன்னாலும் சொந்தம் உன்னோடு என்றாலே, மாசம் பத்து போனதுமே
பெத்தெடுத்தா முத்து ஒன்னு.

உத்தமி உணக்கெதுவும்
செய்யலடி,
என் உசுரே உனக்கு சொந்தமடி
புது உறவே உனக்கு
பந்தமடி..

5.பட்டி காட்டில் நான் படிக்க
படிப்பு ஏதுமில்லை,
பட்டணம் போய் படிக்க வசதி இல்ல
வட்டிக்கு நான் வாங்கி கொடுக்க
வாசல் படி தாண்ட விட்டான்
வானுயர்ந்த கட்டிடத்தில்
பொட்டி வாங்கும்
கல்வி தந்தை.

வட்டிக்கு நான் வாங்கி கொடுத்த
பணம் வராண்டாவில்
சலவை கல்லாய்
வழுக்கி வழுக்கி போகுதையா,
வாங்கியதெல்லாம் போதவில்லை
வங்கி கணக்கு
வட்டி போட முட்டி அடிச்சேன்
முதல் தேர்வுக்கு.

ஆசை வச்சேன் நான் படிக்க
காசை வச்சா  கல்லூரி
உள்ளே வா என்றான்,
கள்ளமில்லா வெள்ளை மனிதன்.
குடிக்க கூழ் இல்லை
குட்டி போட்ட வட்டியெல்லாம்
கூரை மீது ஏறிக்கொண்டு
கொல்லிவைக்க நான் அழுதேன்.

வெட்டியானுக்கு தெரியுமா
வேதனையில்
ஏன் மனசு வெந்த கதை
வட்டிக்கு வழி இல்ல
வாங்கிய கடன் கட்டவில்ல
வருஷம் முழுதும்
வயகாட்டில் நான் உழைச்சா
வயறு நிரம்பி இருக்கும்.

வருசம் போயிடிச்சி
வட்டியும்  எறிடிச்சி
கல்லூரி காவலாளி
கை நீட்டி தடுத்துட்டான்
மறுத்தேர்வு நான் எழுத
மணியும் போயிடுச்சு
மண்டியிட்டு நான் கேட்ட
மனசு மாறவில்லை.

படிக்க மனம் இல்லை
பணம் வாங்க வழி இல்ல
முதலுக்கு மோசமா
முழுதும் போச்சம்மா
வட்டிக்கு நான் வாங்கி குடுத்த வரவெல்லாம்
முதலை வாய்க்குள்ள
முழுசா போய்டிச்சே…

சிவா..

6.ஆண்மையின் ஆதிக்கத்தை
அனு அனுவாய் ரசித்துவிட்ட
பெண்மையின் பேரின்பம்
சுவைத்துவிட பிறப்பெடுத்த
பெரிய இடத்து பேரழகன் நான்.

கண்டுவிட்டேன் காமம் எனும் காட்சி பொருளை நான் அறியா நாகரிகம்
நாட்டில் இல்லை, அகிலம் முழுவதும்
அலைந்து விட்டேன்.
ஆண்மை பரிசோதனை செய்து விட்டேன்.

மோகம் எனும் மாயையில்
மூழ்கிவிட்ட உத்தமன் நான்.
பட்டணம் சென்று பயின்று வந்தேன்,
கட்டணம் செலுத்தும் காம உறவை
புத்தனும் , காந்தியும் புத்தக்கமிட்டதை
புத்தியில் இருந்து புதைத்து விட்டேன்.

கட்டிளம் காளை என
கல்யாணம் செய்து வைக்க
சத்தியம் செய்து சூட்டிவிட்ட
மாங்கல்யம் மஞ்சள் மாலை மனம் மாறும் முன்னே, மற்றவள் மடி தேடி சென்றேன்.

உத்தமி உன்னை தவிக்க விட்டேன்
பத்தினி உன்னை பதற வைத்தேன்
கட்டிய தாலி காயும் முன்னே
கட்டிலின்  சுகம் தேடி சென்றேன்
கட்டிய உன்னை காவு தந்தேன்.

வேசியின் வேண்டுதல், ஏற்றுக்கொண்டு
வேண்டிய அனைத்தும் செய்து வந்தேன்
தாசியின் தயவு போதுமென்று
தாரத்தை நானும் தவிக்க விட்டேன்.

கட்டிய கோட்டை கை விட்டு போக
சேர்த்த செல்வமெல்லாம் செலவழிந்து போக
செய்த பாவமெல்லாம்
சேர்ந்து வந்து என்னை கொல்ல
சீரழிந்து போனேன்,
தோல் உரிந்து போனேன்.

கட்டின உறவு கை கழுவி போக
ஒட்டுன உறவும் உதறிவிட்டு போக
ஒதுங்க ஒரு அடி இடம் இல்லை
பட்டினியும் என்னை பதம் பார்க்க
தட்டு ஏந்தி தரையில் நான் கிடந்தேன்.

ஆடிய ஆட்டமெல்லாம்
அடி மனசில் அமைதியாக
சபலம் தோன்ற நஞ்சின்
காலடி தேடி போனேன்.

கண்ணீர் துடைக்க கரம் இல்லை
என் கையும் இன்று எனதில்லை
இரத்தம் வழியும் உடலெல்லம்
ரகசிய இன்பம் கண்டுவிட்டேன்
சத்தமின்றி சமாதியாய்
சவகுழி திங்கும் உடலானேன்.

..சிவா.

மன அழுத்தம் – கட்டுப்படுத்துவது எப்படி?

stressசரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில்அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல் தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத்தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம்,உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக்காட்சிகள் முதலானவை மனஅழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகின்றன.

இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.இந் நோயியில் இருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை தடை செய்ய கீழுள்ள ஆலோசனைகளை பின் பற்றுங்கள், அவை உங்களுக்கு உதவக்கூடும்.

.உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உணர்வுகளைப் பற்றியும் நடந்தவைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக யாருடனாவது பேசுங்கள், உங்கள்குடும்ப அங்கத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ இது பற்றிக்கூறுவதற்கு விரும்பாவிட்டால் இதற்காக தகுந்த ஆலோசனைகள் வழங்கக்காத்திருக்கும் மனநிலை ஆலோசகரை அணுகலாம்.அப்போதுதான் உங்களுக்கு விடிவு கிடைக்கும்.நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான விடயங்களை மீண்டும்செய்து பாருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த சக்தியூட்டும் செயற்பாடு உங்கள் பொது சுகாதாரத்தைப்பேணுவதோடு மன உழைச்சலைக்குறைக்கவும் உதவுகிறது.

உலகில் வாழும் அனைவருமே தங்கள் வாழ்நாளின் ஒரு முறையாவது தற்கொலை செய்யலாமா என்ற நிலைமைக்கு வருகின்றனர் என்று மனோதத்துவம் சொல்கிறது. இன்றைய வேகமான உலகத்திற்கு ஈடுகொடுத்து நாம்காரியங்களை செய்யும்போது மெல்ல மெல்ல நம்மை அமுக்கி மூழ்கடிக்கவரும் அரக்கனே மன அழுத்தம். இதை உடனே அடையாளம்கண்டுகொண்டு தீர்வு காண்பதன் மூலம்பெரும் இழப்புகளை தவிர்க்க முடியும்.

முதல்படி: சிறு பிரச்னைகளுக்கு கூடபெரிய அளவில் கவலைப்படுவதே மனஅழுத்தத்துக்கான முதல்படி. மனஅழுத்தத்தால் உடல், வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மை,முயற்சி, சக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

நல்லவர்களையும் முட்டாளாக்கும்: மனஅழுத்தம், நல்லஅறிவு படைத்தவர்களையும்,பழக்கவழக்கம், நடை, உடை,பாவனைகளில் முட்டாள்களாகக்காட்டுகிறது.ஒருவருக்கு உடலளவிலும், மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள், நண்பர்களிடமிருந்து பிரியும்நிலை உண்டாகிறது.

உணர்வற்ற மனிதனாக்கும்: மனித உணர்வில்,பாதிப்பை உண்டு பண்ணுகிறது.தேவையில்லாத இடங்களில், தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்தவைக்கிறது.சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக்காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில் மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.

எவ்வாறு கட்டுப்படுத்துவது: அவசரஉலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. என்னபிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழகவேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல், அதை சரி செய்யவேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில் ,அதையே நினைத்து கவலை கொள்ளக்கூடாது.

உடனே சரி செய்யுங்கள்: பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போது, எண்ணத்தை மாற்றமுற்படுங்கள். நண்பர் களுடன்மனம்விட்டு பேசுங்கள். இதனால்அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம்ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்தமருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள் ,சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.

அலைபேசியின் ஆபத்துக்கள்

cellphoneஇது அலைபேசியின் (செல்போன்)யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த கைபேசி. இந்த அலைபேசியினால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. சிறந்த, விரைவான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய தொலைத் தொடர்பு சாதனம் இது. வணிகர்கள், பயணிகள், மருத்துவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கும் அவசரத் தொடர்பு ஆதரவாளனாக அலைபேசி விளங்குகிறது.

இருப்பினும், அலைபேசியின் ஆபத்துகள் பற்றியும், தீமைகள் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அறிவியலாளரும், சமூக ஆர்வலர்களும். அலைபேசியினால் கிடைக்;கும் நன்மைகளைவிட, ஏற்படும் ஆபத்துகளே அதிகம் என்று இவர்கள் எச்சரிக்கின்றனர்.

1.உயிருக்கே ஆபத்து
அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம்தான். ஆனால், அது உண்மைதான். ஷீலா ப்ரைஸ் என்னும் அமெரிக்கப் பெண்மணி தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தொடர்ந்து அலைபேசியைப் பயன்படுத்தியதால் மூளைப் புற்றுநோய்க்குப் பலியானார். டாக்டர் நாக்மன் பிராட்பர் என்னும் மருத்துவர் இந்த உண்மையை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் எண்பித்து முதல் எச்சரிக்கை மணியை அடித்தார்.

2.உருவாகும் நோய்கள் 
அலைபேசியைப் பயன்படுத்தும் அனைவரும் சாவை உடனே சந்தித்து விடுவதில்லை. ஆனால், நிச்சயமாக நோய்களால் தாக்கப்படுவர் என்பதை பல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, அலைபேசி வெளியேற்றும் மின்காந்த அலைகள் (நுடநஉவசழ ஆயபநெவiஉ குசநஙரநnஉநைள) லுக்கேமியா என்னும் இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய்கள், வலிப்பு நோய் மற்றும் மூளைப் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், அலைபேசியை அதிகம் பயன்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்றும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3.சுற்றுச் சூழலுக்கு ஆபத்து
இன்று அலைபேசிக் கோபுரங்கள் ஏராளம் நிறுவப்பட்டுள்ளன. இவை மூலம் பரவும் மின்காந்த அலைகள் சுற்றுச் சூழலுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பறவை இனங்கள், சிறு பூச்சிகள், வண்டுகள் போன்றவை இந்த மின் காந்த அலைகளால் தாக்கப்படுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

4.வீணாகும் நேரம்
அறிவியல் தளத்திலிருந்து, சமூகத் தளத்திற்கு வந்தால், இன்னும் பல தீமைகளைச் சந்திக்கிறோம். இவற்றுக்கு ஆய்வுகளோ, அறிக்கைகளோ தேவையில்லை. நம் அன்றாட அனுபவங்களே இவற்றை உறுதிப்படுத்துகின்றன. அலைபேசியின் வரவுக்குப் பிறகு ஏராளமான நேரம் விரயமாக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை அலைபேசியில் உரையாடியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் வீணாக்குகிறார்கள். அவசியமான பணிகளுக்கு அலைபேசி பயன்படுத்தப்படுவதைவிட, பொழுதுபோக்கிற்கும், உறவுத் தொடர்புகளுக்குமே இன்று அதிக நேரம் அலைபேசியில் செலவாகிறது.

5.பண விரயம்
அலைபேசியில் அதிகம் பேசப் பேச பணம் அலையாகக் கரைகிறது. முன்பெல்லாம், தொலைபேசி மட்டுமே இருந்த இல்லங்களில் கூடுதலாக அலைபேசிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அலைபேசியின் செலவு அவசியமற்ற செலவு என்பதை பெரும்பாலானவர்கள் உணராத அளவுக்கு அலைபேசிப் பைத்தியம் மக்களை ஆட்கொண்டிருக்கிறது என்பது வேதனையான உண்மை.

6.பாழாகும் படிப்பு
இந்தியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான இதர நாடுகளிலும் மாணவர்கள் அலைபேசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மாணவர்கள் தங்களின் நேரத்தையும், கவனத்தையும் அலைபேசி மூலம் இழந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, அலைபேசிப் பயன்பாடு மூளையின் நரம்புகளைப் பாதித்து, கவனம் செலுத்தும் ஆற்றலைக் குறைக்கிறது, நினைவாற்றலைப் பாதிக்கிறது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, மாணவர்கள் நிச்சயமாக அலைபேசியைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

7.அடிமைப் பழக்கம்
மது, போதைப் பொருள் போலவே அலைபேசிப் பயன்பாடும் ஓர் அடிமைப் பழக்கமாக மாறிவருகிறது.; இளைஞர்கள் அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர் என்றும், அலைபேசியைப் பயன்படுத்தாமல் இருந்தால் பித்துப் பிடித்தவர் போலாகிவிடுகின்றனர் என்றும் சீனாவில் ஆய்வு செய்து கண்டிருக்கின்றனர். நமது நாட்டிலும் அலைபேசி அடிமைகள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லலாம்.

8.பண்பாட்டுச் சீர்கேடு:
பேருந்து நிலையம், மருத்துவமனை போன்ற பொது இடங்களில்கூட அருகே இருக்கும் சக மனிதர்களைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அலைபேசியில் வெட்டிப்பேச்சுப் பேசும் நாகரீகமின்மை எங்கும் பரவி வருகிறது. வழிபாட்டுத் தலங்கள், கருத்தரங்குள் போன்ற இடங்களிலும்கூட அலைபேசியை அணைத்து விடுங்கள் என்று அறிவிப்புச் செய்யும் அவல நிலையில் இருக்கிறது நம் பண்பாடு.

9.விபத்து
அலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுவதனால் விபத்துகள் நிகழ்கின்றன என்பதை உணர்ந்து விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இந்த இழிவான பழக்கம் குறைந்தபாடில்லை என்பதை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

10.ஒழுக்கவியல் தீமைகள்
உயிர் காக்க, அவசரத் தேவைகளுக்கு, பயண நேரத்தில் என அலைபேசியின் நல்ல பயன்பாடுகள் பல இருந்தாலும்கூட, அதே அலைபேசி பல தீய செயல்பாடுகளுக்கும் பயன்படுகிறது என்பது அச்சத்தைத் தருகிறது. கொலை, கொள்ளை, விபச்சாரம், பெண்களை இழிவுசெய்தல் போன்ற சமூகத் தீமைகளுக்கும் அலைபேசியைப் பயன்படுத்தி, தொழில் நுட்பம் என்பது இருபறமும் கூர் வாய்ந்த கத்தி என்பதை எண்பிக்கின்றனர் சமூக விரோதிகள்.

இன்னும் பலவற்றை அடுக்கலாம். எடுத்துக்காட்டாக, அலைபேசியைப் பயன்படுத்துவதால் இறைவன்மீது கொள்ளும் நம்பிக்கைகூட குறைந்து போகிறது என்று ஆன்மீகவாதிகள் குறைசொல்கின்றனர்.

சில பரிந்துரைகள்:

1.அறவே நிறுத்தலாம். அலைபேசியே இல்லாமலும் நிறைவான வாழ்வு வாழ முடியும் என்று எண்பிக்கின்றனர் கொள்கைப் பிடிப்புள்ள சிலர். மனம் இருந்தால், நிச்சயம் நிறைவேற்றலாம்.

2.நேரக் குறைப்பு: கண்டிப்பாக ஒருநாளில் எவ்வளவு நிமிடங்கள் அலைபேசியில் பேசுகிறோம் என்பதைக் கணக்கிட்டு அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

3.வாரம் ஒருநாள் விடுமுறை: வாரத்தில் ஒருநாளைத் தேர்வு செய்து, அந்த நாள் முழுதும் அலைபேசிக்கு ஓய்வு கொடுப்பது நல்ல ஒரு செயல்.

-தந்தை குமார்ராஜா –

திருச்சி லோகநாதன் சில குறிப்புகள்

200

திருச்சி லோகநாதன்

மலைக்கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாக தோன்றியவர் காலத்தை வென்ற பல திரை பாடல்களைப் பாடிய திருச்சி லோகநாதன் அவர்கள்.இவர் பெயரில் உள்ள  T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியை குறிப்பதாகும்.

trichy-loganathanசங்கீதக் கல்வி அளித்தவர்: நடராஜன்
சிறுவயதில் ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத்தொடங்கும் பாடல்,மக்கள்திலகம் எம்.ஜி,ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.
இரண்டாவது பாடல்:கலைஞர் கதை,வசனத்தில் உருவான அபிமன்யூ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இனி வசந்தமாம் வாழ்விலே’ என்ற பாடல்.

திருச்சி லோகநாதன் பாடிய காலத்தை வென்ற கானங்கள்:

24thiruchchi1-loganathan2

கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்),
ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்),
அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி),
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,வெள்ளிப் பனிமலையின் (கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல்கள்),
உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரிகுமாரி)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே(பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபாகாவலி)
பொன்னான வாழ்வு(டவுன்பஸ்)

மனைவி:சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி
மகன்கள்:மகராஜன்,
தீபன் சக்கரவர்த்தி (‘பூங்கதவே தாழ் திறவாய்’ என நிழல்கள் படத்தில் கீதமிசைத்தவர் இவர்தான்),தியாகராஜன்.

குறிப்பிட தகுந்த இரண்டு சம்பவங்கள்:

1.நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொழுவில் மதுரை சோமு பாடிய பாடலை ரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலை பெட்டியை பரிசளித்தார்.

TMS2.சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குதூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார்,தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச்சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்,அவரை பாடச்சொல்லுங்க என்று கூறிவிட்டார்.திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குதூக்கி படத்தில் பாடினார்,
அவர்தாங்க T.M.செளந்தரராஜன்.

திருச்சி லோகநாதன் மறைவு:17 நவம்பர் 1989.

தகவல் திரட்ட உதவியவை:காரைக்கால் வானொலி நிலைய இசை நூலகம்,

வானொலி நண்பர்கள்,ராணி வாரஇதழ்.

எழுத்தாக்கம்:

காரைக்கால் கே.பிரபாகரன்.
செல் & வாட்சப்: 9488992571
மின்னஞ்சல் nesammedia@gmail.com

1 2 3 40