உலகத்தமிழர்களின் கலைமேடை 24/7
SMART APPLICATION
download download (2) aap

படைப்புகள்

f64.gre en.b

நேசகானத்தோடு இணைந்து மலேசியா சசித்சசி அவர்கள் நடத்திய கவிதைப் போட்டிக்கு வந்துள்ள கவிதைகள்…

 

 

 

இதுவரை இருந்தேன் நான் நானக..

இருந்தேன்

தனிமையில் சிறையில் சிலகாலமாய்

வாழ்ந்தேன்

என்னை நான் தேடிக்கொள்ளும் போது

எங்கோ இருந்து என்னை அழைத்தாய்

யார் நீ….?

உன் பெயர் என்ன ?

உனது ஊர் எது ?

என்று நினைத்து கேள்வி தொடுப்பதற்குள்

என் அனுமதி இன்றி என் இதயத்தை திருடி

உனது இதயத்தில் பூட்டிக்கொண்டாய்.

அந்த நிமிடப்பொழுதில்

எனக்கும் தெரியாமல்.

மெல்ல மெல்ல நடக்க தொடங்கினேன்

உனது குரலை கேட்டு சிந்தனைகளை பறக்கவிட்டு!

எனக்குள் போறாட்டதை எழுப்பி!

என்னை நான் திரும்பி பார்த்தநொடிப்பொழுதில்!

புடவைக்கடைக்குள் நின்றுதிக்குமுக்காடினேன்”

அந்த நிமடத்தில்””””என்னை உனக்கே அர்பணித்தேன்

மனதால்

உன்னிடம் சொல்லாமல்

காதல் பரீச்சையில் தோற்றுவிடுவேனா:.

என்றபயத்தில் காதலை சொல்ல தயங்கினேன்.

யார் நீ.. என்று தெரியாமல் தவித்தேன்!

வொதும்பி துடித்தேன்!

விழிகள் தேடத்தொடங்கியது

உதடுகள் பேசத்தயங்கியது

காதல் பரீச்சையை உன்னிடம் விட்டேன்

ஏழாம் அறிவாக.

நீயும் தயங்கினாய்…நானும் தயங்கினேன்-

இருவரும் முடிவின்றி தயங்கும்போது…

நானே உன்னிடம் கூறமுற்பட்டேன்

முடியவில்லை!

உன்னை பிரியும் சில மணிநேரத்தை

கண்டு கண்டு வொதும்பி

அழத்தொடங்கும் நிமிடத்தில் என் காதலை சொன்னேன்.

சொன்ன நிமிடத்தில் இருந்தே

என் உடல் உயிர்அத்தனையும் உனது பொறுப்பு

என சொல்லி விடைபெற்றேன்

சிறகொடிந்த பறவைபோல்

திசைமாறி பயணித்தேன்

பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்

புழுவாக துடித்தேன்.

பார்வையிடும் விழிகள் நான்கும்

கண்ணீரில் மதிக்கும் நேரம்

கரைந்தோடும் கண்ணீiரை

வாணத்தில் இருந்து மழையாக பொழிந்தேன் நீ..இருந்தகடற்கரையில்;

தேடுகின்றேன் உன்னை மட்டும்

நேசிக்கின்றேன் உன்னைமட்டும்

சுவாசிக்கின்றேன் உன்னை மட்டும்

முதல்வசந்தம்

முதல் முத்தம்

முதல் வார்த்தை

முதல் கவிதைஎல்லாமே நீ எனக்கு

காலத்தை கடந்து செல்லாதே

நேரத்தை மறந்து செல்லாதே

நாற்களை விழத்தி செல்லாதே

இதுவரை நீ இருந்த திசை மறந்து

இனி வரும் திசையை கண்டு மகிழ்வு அடைந்துகொள்

உன்னை என்னி வழும் என்னை

மறந்துவிடாதே

உன்கையில் என்னை எடுக்கும் வரை

மறந்து தூங்கிவிடாதே

நேசத்தை தெழிவு படுத்த

காதலளர் தினம் தேவையில்லை

நம் இருவர் மனமும் தெளிவாக இருந்தால்

போதும் நமக்கு தினம் தினம் காதலர் தினம் தான்.

 

ராகினி பாஸ்கரன்

ஜெர்மனி

 

 

———————————————————————————————————————————————

“காதலும் காலமும் “

ஒரு நாள்  மலராய்

மறுநாள்  உதிர்வாய்

காதலும் இப்போ

உதிர்ந்தே போகிறது..

 

மாசி மாதம் கூட

நாட்கள் குறைவாகின

காதலுக்கு ஆயுள்

குறைவென்பதாலா?

 

நிலையான காதல்

உயிரான காதல்

அழிவுற்று போனதே

இன்றல்லவோ..!

 

மரத்துக் மரம் தாவும்

மனங்களும் இங்கே

மதிப்பீடு  செய்கிறதே

பணத்தை  அல்லா?

 

இருக்கும்  உண்மை

காதலும்

மதங்களின் பேரில்

மாண்டு போகிறதே

 

மீண்டும்  வருமா

மனதை மட்டும்

மதிப்பீடு  செய்யும்  

உண்மை  அன்பு,,.?”

 

&…ஜெசுதா  யோ,..&

 

 

 

 

“காதலும் காலமும் “

 

ஒரு நாள்  மலராய்

மறுநாள்  உதிர்வாய்

காதலும் இப்போ

உதிர்ந்தே போகிறது..

 

மாசி மாதம் கூட

நாட்கள் குறைவாகின

காதலுக்கு ஆயுள்

குறைவென்பதாலா?

 

நிலையான காதல்

உயிரான காதல்

அழிவுற்று போனதே

இன்றல்லவோ..!

 

மரத்துக் மரம் தாவும்

மனங்களும் இங்கே

மதிப்பீடு  செய்கிறதே

பணத்தை  அல்லா?

 

இருக்கும்  உண்மை

காதலும்

மதங்களின் பேரில்

மாண்டு போகிறதே

 

மீண்டும்  வருமா

மனதை மட்டும்

மதிப்பீடு  செய்யும்  

உண்மை  அன்பு,,.?”

 

&…ஜெசுதா  யோ,..

 

———————————————————————————————————————–

 

 

காதல் அது ஒரு கனாகாலம்..

 

காவியக்காதல் அது

ஓவியம் தீட்டுவதுபோல் உள்ள ஒப்பில்லா

ஒப்பனைகாலம் அது..

 

கல்லூரிகாதல் அது

பருவ வயதில்

உருவம் அறியா

உவமைகாலம் அது..

 

கலிகால காதல் அது

கண்களால் துவங்கி

கவர்ச்சி மோகத்தில்

திரியும்

காலங்கடந்த காதல் அது..

 

காலங்கள் மாறினாலும்

காதலும் மாறத்தான் செய்கிறது…!

 

காதல் இது ஒரு கடல்…!

நீந்தி கடந்தவர்கள் பேசப்படுகிறார்கள்…!!

மூழ்கி கவிழ்ந்தவர்கள் வீசப்படுகிறார்கள்…!!!

 

 கவி கிறுக்கல்..

உங்கள் செம செமா..

 

செம.செமா

மலேசியா

(வேதாரண்யம்)

————————————————————————————————————————-

 

 

: காதல் காதல் காதல்

என்பது என்ன

 

இரண்டு உள்ளங்களின்

சங்கமம்

காதலர்கள் காதலித்தால் தான் காதலா

         காதல் என்பது

                    என்ன….

காதல் என்னும் மூன்றெழுத்துக்கு

 

அன்பு என்னும் மூன்றெழுத்து அடிபடைசாசனம்

 

அதை இந்த மானுடம்

கொச்சைபடுத்துகிறது

 

கணவன் மனைவியிடம்

உள்ளகாதல்…..

 

பெற்றேருக்கும் பிள்ளைகளுக்கும்

இடையேயுள்ளகாதல்…

 

சகோதர சகோதரிக்கும்

இடையஉள்ளகாதல்……..

உறவுமுறைகளுக்கு உறவுகளுக்கும் இடையேயுள்ளகாதல்….

 

நட்புக்கும் நட்புக்கும் இடையில்உள்ள காதல்……….

 

பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையேஉள்ளகாதல்….

 

இந்தஎல்லா காதலுக்கும் அடிப்படை

அன்பு…அன்பு…அன்பு…

மறுக்கமுடியுமா…………

         இப்படிபட்ட

       அன்பான காதலை

 

தற்போது வருடத்திற்கு ஒருமுறை மாதத்தில் ஓர் குறிப்பிட்டநாளில் காதலர்தினம் கொண்டாடினால் போதுமா மற்ற நாளில்

மேற்ச்சொன்னவர்ளை

நாம் காதலிப்பதுதில்லையா

 

காதல் என்பது கொச்சையானதுதல்ல

 

காதலர்கள் ஒருவரைஓருவர் காதலிப்பது மட்டும் காதல் அல்ல

 

தாய் தந்தை அண்ணன்

தங்கை மாமன் மச்சான்

என்னும் உறவுமுறை இருநண்பர்களுக்கு இடையேயுள்ள சினேகம் இப்படி பட்டவர்கள் ஒருவரில்

ஒருவர் அன்பு செலுத்துவதும் காதல்

தான்

 

     காதலர் தினதன்று

 

உங்கள் குடும்பத்தில்

உள்ள உறவுகளை

அன்போடு காதல்

செய்க

 

நேற்று பூத்து    

     இன்று மலர்ந்து

             நாளைகறுகும்

காதல் செய்யாதீர்

 

காமம் இச்சை பணஆசை

பொருள் ஆசை

வேறு எதிர் பார்ப்புகளுக்கு அப்பார்பட்ட காதல் இருப்பின் தலை வணங்குகிறேன் அக்காதல் வாழ்க

 

கடவுள் கொடுத்தஉயிர்

அதை எடுத்துக்கொள்ள

அவருக்கு மட்டும் உரிமை உண்டு

காதலுக்கு இல்லை

 

அன்புடன் காதல் செய்வீர்

 

                லாவண்யா……

 

 

காதல் பரம்பரை சொத்து

பரம்பரை வியாதியுமல்ல

 

நான் காதலாக இருந்து பயனில்லை

நாம் காதலாய் இருக்க வேண்டும்

 

தவிக்க வைப்பதும் காதலல்ல

தவிர்க்க வேண்டியதும் காதலல்ல  

 

கழுத்தில் தாலியேரட்டும்

காமத்துக்கு ஆசைப்படு

 

காதலி பிரிந்தால் சோகம்

காதல் பிரிந்தால் மரணம்

 

ஊடல் வேண்டும் காதலில்

கூடலில் முடிய வேண்டும் காதலில்

 

காதலை உயிராக பார்

காதலியை மூச்சாக  வை

 

உயிர் இல்லாத உடலும்

காதல் இல்லாத உயிரும் ஒன்றே

 

அறிவோடு காதல் செய்  

அறிவில்லாத காதல் தோல்வி

 

இரக்க காதலுக்கு வேண்டும்

இறக்க காதலிக்க வேண்டாம்

 

அறுபதிலும் காதல் வேண்டும்

தொன்னூரிலும் துணை வேண்டும்

 

உன்னை தேற்ற துணை தேடு

துணையை தேற்ற நீ பாடுபடு

 

காதல் செய்

சாதி ஒழி  !!!

சவுதி சுரேஷ்

சென்னை

 

—————————————————————————————————————————

 

 

காதலோடு காலங்கள்

~~~~~~~~~~~~~~~~~~

 

காதலுக்கும் காலத்துக்கும் மூன்றெழுத்து

 

இவையிரண்டுக்கும் அழிவில்லை என்பதே இங்கு என் எழுத்து

 

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாய் இவற்றுள்தான் எத்தனை உருமாற்றங்கள்…

 

காவியக்காதல் அது கண்களோடும் நாணங்களோடும்.

 

கடற்கரைக்காதல் அது அலைகளோடும் சுண்டலோடும்.

 

கல்லூரிக்காதல் அது பாடங்களோடும் பார்வைகளோடும்.

 

பேருந்துக்காதல் அது படிக்கட்டுகளோடும் பயணங்களோடும்.

 

கிராமியக்காதல் அது வயல்களோடும் வரப்புகளோடும்.

 

நகரத்துக்காதல் அது ரயில்களோடும் கடைவீதியோடும்.

 

ஏழ்மைக்காதல் அது கனவுகளோடும் கற்பனையோடும்.

 

பணக்காரக்காதல் அது பரிசுகளோடும் மணிபர்ஸுகளோடும்.

 

இளமைக்காதல் அது துடிப்போடும் துள்ளலோடும்.

 

முதுமைக்காதல் அது பூரணத்தோடும் புனிதத்தோடும்.

 

நேற்றைய காதல் அது மின்னஞ்சலோடும் எஸ்எம்எஸ்ஸோடும்.

 

இன்றைய காதல் அது வாட்ஸப்போடும் ஸ்கைப்போடும்.

 

ஓடும் ஓடும் ஓடும் காலமது ஓடும்.

 

காதலது ஓடுவதில்லை உருமாறிய போதும் அது தேடும் தேடும் தேடும் தக்க துணையை அது தேடும்.

 

நில்லாது சுற்றும் பூமிப்பந்தின் உந்து சக்தி காதல்.

 

கண்ணியக்காதலர்களின் கடைசி மூச்சு உள்ளவரை உண்மைக்காதல் அது கலையாது உயிர்வாழும்.

 

காரைக்கால் நா.சக்திமான்

நைஜீரியா

——————————————————————————————————————————————-

 

காதல் கவிதை

🌷🌷🌷🌷🌷

ஏஞ்சலினா சின்ட்ரெலலா ரோஸ்

🌷🌷🌷🌷🌷🌷

எத்தனை இயற்கை அதிசயங்கள்

உன் அன்பான வார்த்தைகளில் மட்டுமே தெரிந்து கொண்டேன்

எத்தனை விபத்துக்கள்

பூகம்பம் செய்யாத மாற்றத்தை உனது

இதழோர புன்னகையில் தான்

உணர்ந்து கொண்டேன்

இறந்து போவது உடல்கள் மட்டுமல்ல

உணர்வுகளும் தான்

என்பதை நீயின்றி தவித்த தருணங்கள் தான்

எனக்கு கற்றுத்தந்தது

உன் மடியில் தலை சாய்நது உறங்கி போன நிமிடங்களில்

எல்லாம் மீண்டுமாக புதுப்பிக்க முயற்சித்து தோற்றுபோகிறேன்

இறந்து போவேனோ

 என்பதற்காக சுவாசிக்கவிலலை

ஒரு வேலை

உன நினைவுகளை  

மறந்து போவேனோ

என்பதற்காக மட்டுமே சுவாசிக்கறேன்

அலையாக நீ வருவாயா

என்றால் கடல் கரையில்

என்றுமாக காத்திருப்பேன்

என்றும் உன் நினைவுகளோடு

காதலுடன்

உயிர்க்காதலுடன்

 

ஏஞ்சலினா சின்ட்ரெல்லா ரோஸ்

விருதுநகர்

———————————————————————————————————————————————

காதலுடன் காலங்கள்

 

காலம் செய்த கோலம் தானே காதல்?

ஆரம்பத்தில் ஆதாம் ஏவாளை காதலில் ஆழ்த்தியது காலத்தின் சதி தானே ?

 

அன்றிலிருந்து இன்றுவரை காலமெல்லாம் காதல் வாழ்க என்றே

கவிதை சொல்லி கனாக் காண்கிறோம்  

உண்மையில் காலமெல்லாம் காதல் வாழ்கிறதா ?

என் காதல் நீ தானே – என வர்ணித்தது போக

 

என் முதல் காதல் நீ ,

மூன்றாம் காதல் நீ ,

முப்பதாவது காதல் நீ  கணக்கிட்டுக் கொள்ளும் காலமாய் மாறிப்போனது.

 

காதலுடன் தான் காலங்கள் கடந்து செல்கிறது

காதலை வகை வகையாய் பிரித்துப் பார்க்கும் காலம் இதுவாகிப் போனது

நல்ல காதல் , கள்ளக் காதல் என்றே

 

காதலுக்கும் காமத்திற்கும் ஒரே அர்த்தமாக்கிக் கொண்டனர் பலர் .

 

அன்றோ  அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் .

இன்றோ காலத்தின் கோலமாய் அவளை அண்ணலும் நோக்கினான் அண்ணலின் அண்ணனும் நோக்கினான் என்றாகிப் போனதே!

 

காத்திருப்பு தான் காதலில் சுகம் என்பதை தவறாக புரிந்துக் கொண்டார்கள் போலும்  

காத்திருப்பில் மட்டுமே கரைந்துப் போகிறது காதல் இன்று

 

காதலிப்பது பலமுறை

கரம்பிடிப்பது ஒருமுறை

என்றாகியதே !

 

வலைதளங்களில் வகை வகையாய் வலம் வரும் காதல்கள் முகவரியின்றி முடிந்துக் கொண்டிருக்கறது .

 

காதலர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோ

காதல் செத்துக்

கொண்டிருக்கிறது .

 

முன்னுக்கு பின் முரணாய் எங்கோ ஓர் மூலையில் இன்றும் ஓரிரண்டு காதல் உயிரோடு இருப்பதால் தானே !                          

காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் இன்றும் .

 

நெல்லை சுபகலா

 

நெல்லை L.சுபகலா

அம்பாசமுத்திரம்

———————————————————————————————————————————————

 

 

காதலுடன் காலங்கள்…

காதல் செய்வீர்! மனிதர்களே காதல் செய்வீர்!

 கரையோடு கடல் காதல் கொண்டதாலே

அலையைத் தூதாய் கரைக்கு அனுப்புகிறது…

பூக்களை வண்டுகள் காதலிப்பதாலே

இதழுக்குத் தேனை இடம் மாற்றுகிறது…

காற்றுடன் கருமேகம் காதல் கொள்வதாலே

மழையாய் மண்ணை முத்தமிடுகிறது…

இயற்கையே இப்படிக் காதலை வளர்க்க, மனிதர்களே…

நீங்களும் கூட காதல் செய்வீர்…

நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்ததுண்டா?

இயற்கையைப் பார்த்து வியந்ததுண்டா? சி

ன்னச் சின்ன சந்தோஷங்களில் சிலிர்த்ததுண்டா?

சிரிப்பிற்கும் அழுகைக்கும் முழுதாய் முகவரி அறிந்ததுண்டா?

அத்தனை சுகமும் மொத்தமாய் அறிய மனிதர்களே காதல் செய்வீர்…

சுட்டுவிரல் பட்டதற்கே மொத்த உடல் சிலிர்க்குமே…

சின்னச் சிணுங்களுக்கே மனம் சில்லிட்டுப் போகுமே…

பார்வைப் பரிமாற்றங்கள் பாடம் பல நடத்துமே…

மலர்களைப் பார்த்தும் பறிக்காமல் விரல்கள் வருடி மகிழுமே…

அதற்காகவேனும் காதல் செய்வீர்…

மொட்டு அவிழும் தருணம்,

புன்னகைத் தொடங்கும் நொடி,

காலை நேரத்து சிவப்புச் சூரியன்,

மாலைப் பொழுதின் மந்த வெயில்,

 புல்லின் தலையில் ஒற்றைப் பனித்துளி,

சிறகு சிலிர்ப்பும் சின்னக் குருவி, சிரித்து மகிழும் வண்ணப் பூக்கள்,

இத்தனையும் பிடிக்கும்,

மொத்தமும் இனிக்கும் ஆதலினால் காதல் செய்வீர்….

காதல் ஒரு வினோத தேசம்…

களவு செய்தலே தேசிய தொழில்,

கண்ணீர் துளியோ தேசியச் சின்னம்,

பார்வைகளே இங்கு பழகிய பாஷை,

பொய் பேசாதிருத்தல் தேசியக்குற்றம்,

மௌனங்களோ இங்கு தாய்மொழி,

முத்தங்களோ இங்கு தேசியகீதம்…

போகலாம் எல்லோரும் புதிதாய் தேசம் ,

ஆதலால் மனிதரே காதல் செய்வீர்….

 காலம் கடந்தும் காதல் வெல்லும் காலனைக் கூட ஏளனம் செய்யும்…

காதல் என்ற ஒற்றை வார்த்தை காலத்தை வெல்லும் மாயவார்த்தை…

ஆதலால் காதல் செய்வீர்.,..

 

மதுக்கூர் இராமச்சந்திரன்.

 

 

—————————————————————————————————————     

                                “காதலுடன் காலங்கள்”

 

                                  இதுவரை யாரையும்

                                  நேசித்திராத நான் – உன்னைக்

                                  கண்டதும்……………..

                                  காதல் கொண்டேன் – உன்

                                  கொள்ளையழகைக் கண்டல்ல – உன்

                                  வெள்ளை மனதைகண்டு ………

 

                                  காலங்கள் கடந்து செல்ல

                                  நேரங்கள் நீண்டு செல்ல – நம்

                                  காதலும் வளர்ந்தது

                                  யாரும் அறியாமலே……….

 

                                  எனக்கு நீ – உனக்கு

                                  நான் என்ற – புது

                                  உலகில் புதிய பறவைகளாய்

                                  சிறகடித்தோம் – அழகிய

                                  காதல் வானிலே ………….

 

                                  உன் முகம் நோக்கி – நான்

                                  கூறிய கவிகளும் – என்

                                  கண் பார்த்து நீ சொன்ன

                                  கவிகளும் ஐயகோ – அவைகள்

                                  நினைவு வரும்பொழுது – என்

                                  இதயம் ஸ்தம்பித்து – என்

                                  விழிகள் அழுகிறது ………

 

                                  எனக்கும் உனக்கும் – அந்தக்

                                  கடவுளுக்கும் மட்டுமே

                                  தெரிந்த நம் காதல் – அது

                                  அழகிய உணர்வு – அது

                                  அற்புதமான காலம்………

 

                                  என் மீது நீ கொண்ட

                                  நேசமதைப் பார்த்த

                                  கடவுளுக்கும் பொறாமை – அதனாலே

                                  பறித்துக் கொண்டான்

                                  உன்னை என்னிடமிருந்து…………..

 

                                  பிரிந்தது உன் உடல்தானே

                                  ஆன்மா அல்லவே – அதனாலே

                                  வாழ்கிறேன் உன் நினைவுகளோடு……….

 

                                  அன்று உன் விரல் பிடித்து

                                  சுற்றிய பொழுதுகள் – உன்னோடு

                                  காதல் கதை பேசி

                                  மகிழ்ந்த தருணங்கள் – நினைத்துப்

                                  பார்த்து துடிக்கிறேன் – இந்தப்

                                  பொழுதுகளில் …………..

 

                                  காதலின் காலங்கள்

                                  கடந்தாலும் கலைந்து போகா

                                  உன் நினைவுகளை

                                  சுமந்தவளாக நான் மட்டும்

                                  வாழ்கிறேன் தவிப்போடு

                                  இவ்வுலகில் ………………

 

 

                                  -சாந்தினி தினேஷ்

———————————————————————————————————————————————

 

 

தலைப்பு  :- காதலுடன்  காலங்கள் 

கவிதை  வகை  :- மரபு 

பாவகை :- இதழகல் இன்னிசை  வெண்பா  ( இதழகல் — உதடு  ஒட்டாத  )

 

கவிதையாக்கம் :- 

திருமதி .சரஸ்வதி  பாஸ்கரன் 

 திருச்சி  , தமிழ்நாடு  , இந்தியா .

 

 இதழகல் இன்னிசை வெண்பாக்கள்

ஆட்சியினால் கண்டலர்ந்தே அன்றிலேன நான்கண்டக் 

காட்சியினால் கற்கண்டாய் கண்ணேநீ நின்றாயே 

சாட்சியினால் நீயென்னைச் சான்றாகக் காட்டிநின்றாய் . 

நீட்சியினால் நெஞ்சத்தில் நீ . 

 

நீயழகின் தேனிசையே நீண்டகால நேரிழையே 

தீயழகில் தீர்க்கின்றாய்த் தீயாகக் காதலிலே 

ஆயிரந்தான் காட்சியினா லாயிரங்கள் செய்கின்றாய்த் 

தாயாகி தாலாட்டி தான் . 

 

தானேதான் கார்காலத் தண்ணழிலே காதலிலே 

நானேதான் நீதானே நர்த்தனங்கள் நாட்டினிலே 

கார்காலக் கண்ணேநான் காண்கின்றேன் சீரெழிலை 

நேர்கால நேசத்தால் நேர் .

 

திருமதி. சரஸ்வதி பாஸ்கரன்

திருச்சி.

 

 

என் விழிகளில் விழுந்தாயடி ! பல விந்தைகள் செய்தாயடி !

மூங்கிலினால் இசைக்கும் 

ராகம் ; முழுவதுமே நம் காதல் கீதம் . 

காற்றில் பற்றி எரியுதடி – கள்ளி 

உனக்கு அது புரியலையா ??? (என் விழிகளில் …)

உன் கனவிலே கண்ணுறங்க 

கலையாத உன் நெனப்பு – அதில் 

கரையுதடி காலை நேரம் . 

என் எண்ணம் நெசமாகி போகுமாடி -?? ( என் விழிகளில் ..)

அங்கம் தொடாது 

அங்கங்கே தெரியும் உன் 

நெளிவழக பார்ப்பதற்கு 

ஆச மிகத் தூண்டுதடி-தங்கம் . ( என் விழிகளில் …)

பங்கம் வந்து விடுமோ 

என்று பார்த்து பார்த்து 

காதல் செய்தேன் . இதில் பங்கு போட 

எவருக்கும் உரிமையில்லை . ( என் விழிகளில் ..)

என் இமைக்குள் இருக்கும் 

இத்தனையும் இதமாக பேசுதடி . 

இசைக்குள் இருக்கும் 

சுகத்தையும் இசைக்குறேனடி மெதுவாக . (என் விழிகளில் ..)

 

என்னோட காதல் மொழி பேச வந்தாயோ ??? ஏனிந்த தயக்கமடி கண்ணே ???

வெண்ணிலா வீதியில 

உலா வருது – தங்கம் . 

மேகங்கள் ஒன்றாகத் 

தங்குமடித் தமிழ் – சங்கம் 

வானத்துல விண்மீன்கள் 

ஜொலிக்குது பார் ; ஓர் – அங்கம் . 

வானவில்லும் அழகாக 

தெரியுதடி வான் – எங்கும் ( என்னோட …)

உள்ளங்கள் ஒன்றாகச் 

சேருதடி என்- கண்ணே ! 

உலகத்தின் அதிசியமோ 

நீதானடி என்- பெண்ணே ! 

மென்மையாய் வருடி மேகமோ 

பொழியுது – காதல் மழை . 

கள்ளங்கபட மில்லாம அத 

ரசிக்குதடி – வான் மழை . ( என்னோட ..)

உன் சிரிப்பொலிக்கு ஈடில்லை 

இந்த ஜில்லாவுல – செல்லம் . 

சிதறுதடி மத்தாப்பு 

சிலையாகி போகுதடி – வெல்லம். 

இதழோடப் புன்னகை பேசுதடி 

என்னோட – காதல் மொழி . 

உன் கண்ணழகின் ஈர்ப்புக்கு 

ஏதுமில்லை – எந்தன் மொழி . (என்னோட ..)

 

காதல் — இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா

உன்கண்கள் பேசுகின்ற ஊர்தனிலே நானிருப்பேன் 

பன்மொழிகள் காட்டுகின்றாய் பாங்குடனே உன்னழகில் 

கன்னியுந்தன் காதலினால் காண்கின்ற காட்சியினால் 

என்மொழிகள் மறந்திடுதே ; என்செய்வேன் சொல்லிடுவாய் . 

முன்னுரையைச் சொல்லியுமே முத்தான புன்னகையால் 

நன்னெறிகள் ஊட்டுகின்றாய் நாளுமுனை பாடுகின்றேன் 

உன்னதமாய் இவ்வுலகில் உள்ளவளே ! நீவாழ்க !

 

திருமதி. சரஸ்வதி பாஸ்கரன்

திருச்சி.

——————————————————————————————————————————-

 

 

காதலர் தினம் என்று ஊரே கொண்டாட

எனக்கோ காதல் நிமிடம் என்று கொண்டாட தோன்றுகிறது…

உன்னை சந்தித்த….

உன்னோடு வாழும்  இந்த நிமிடங்களை….

காரைக்குடி ஸ்ரீபாலாஜி.

——————————————————————————————————————————-

 

 

 

இதுவரை பிறந்தவனில் – காதல்

கொள்ளாதவன் எவனுண்டு …

அவன்வந்து சொல்லட்டும் – மனிதன்

காதலித்தால் தவறென்று …

 

காயம்தந்து கழற்றிவிட்ட

காதலிக்கும் நன்றி …

காயம்கொண்டு கவிதைஈன்ற

காலத்திற்கும் நன்றி …

 

 

காலீஸ்வரன் மதுரை.

 

——————————————————————————————————————————-

 

சிரிப்பு வருகின்றது…

போட்டி போட்டு காதலித்தவன்,

காதல் கவிதை போட்டியில்…

காதல் காலங்கள் என்று சொல்வதைவிட

கனா காலங்கல் என்றே சொல்ல வேண்டும் அதை,

ஆம் நான் கண்ட கனா பலிக்கவில்லை…

என் முதல் காதலியின் பெயர் பிரியா…

பிரியத்தை மட்டுமே எதிர்பார்த்தேன்…

பிரியாத வரம் கேட்டேன்…

அதனால்தான் என்னவோ

பிரிந்துவிட்டோம்…

அவள் எனக்கு அப்போது குழந்தை,

அவள் கையில் இப்போது குழந்தை…

என் மதமும், அவள் மதமும் எங்களுக்கு சம்மதம் தரவில்லை…

அவள் திருமணத்திற்கு என்னை அழைத்தால், உலகில் யாருக்கும் கிடைக்காத அரிய காட்சி எனக்கு கிடைத்தது, கதலியின் திருமணக்காட்சி…

அவள் கனவனிடம் இவன் என் நன்பன் என்று அறிமுகம் செய்யும் போது அவள் முகத்தில் பொய்… சிரித்து கொண்டே வெளியே வந்து வைத்தேன் மொய்…

காலங்கள் மாறின

காயங்கள் தேறின…

இன்று நான் ஒரு திசை அவள் ஒரு திசை ஆனாலும் எங்களை காதலர்களாக்கிய அந்த 8ம் நம்பர் பேருந்து மட்டும் “பாம்” “பாம்” என்று இசை பாடி நடமாடும் தாஜ்மாஹாலாய் வளம் வருகின்றது

காதர்களை சுமந்தபடி…

 

செய்யது உசேன் சவுதி.

——————————————————————————————————————————-

 

நேசகானம் வலைதள வானொலி நடத்திய

“காதலுடன் காலங்கள்…”

கவிதைப்போட்டியில் பங்கேற்றவர்கள் விபரம்:

 

1.பா.ராகினி பாஸ்கரன் ஜெர்மனி

2.ஜெயசுதா யோ லண்டன்

3.ந.பிரியா, வேலூர்

4.மலேசியா செம.செமா,வேதாரண்யம்

5.லாவண்யா,ஈரோடு

6.சவுதி சுரேஷ்,சென்னை

7.நைஜிரியா நா.சக்திமான்,காரைக்கால்

8.ஏஞ்சலினா சின்ட்ரெல்லா ரோஸ், விருதுநகர்

9.நெல்லை L.சுபகலா,அம்பாசமுத்திரம்

10.இராமச்சந்திரன்,மதுக்கூர்

11.சாந்தினி தினேஷ்

12.சரஸ்வதி பாஸ்கரன்,திருச்சி

13.ஸ்ரீபாலாஜி,காரைக்குடி

14.காலீஸ்வரன்,மதுரை.

15.செய்யது உசேன்,சவுதி

 

——————————————————————————————————————————————–

 

 

 

 

 

 

 

 

புதுக்கவிதை என்றாலும் மிகுந்த சிக்கலான பணியிது. ஆறு கவிதைகள் போட்டியிலும் (சவாலாக உள்ளன)  மற்றவை தரம் பிரிக்கும் விதத்திலும் உள்ளன.

நன்று.

 

நேசகானம் வலைதள வானொலி நடத்திய

“காதலுடன் காலங்கள்…”

கவிதைப்போட்டியில்  தேர்வான வரிசை எண்கள் விபரம்:

 

 

நன்றி!  வணக்கம்!!

பாவலர் அய்யாவுக்கு வணக்கம்.

நூற்றுக்கு எத்தனை மதிப்பெண் என்று குறிப்பிட்டால் அறிவிக்க வசதியாக இருக்கும்.

 

 

பாவலர் அய்யாவின் தேர்வுப்படி

 

  1. ஏஞ்சலினா
  2. பிரியா (குரல் கவிதை)
  3. சரஸ்வதி பாஸ்கரன்

 

 

 

 

“காதலுடன் காலங்கள்…”

கவிதைப்போட்டியில்  தேர்வான வரிசை எண்கள் விபரம்:

 

1.பா.ராகினி பாஸ்கரன் ஜெர்மனி – (6) (81/100)

 

2.ஜெயசுதா யோ லண்டன்(8) (78/100)

 

3.ந.பிரியா, வேலூர்  ( 2) (92/100)

 

4.மலேசியா செம.செமா,வேதாரண்யம்     (10) (74/100)

 

5.லாவண்யா,ஈரோடு (7) (80/100)

 

6.சவுதி சுரேஷ்,சென்னை(5) (84/100)

 

7.நைஜிரியா நா.சக்திமான்,காரைக்கால்(9) (75/100)

 

8.ஏஞ்சலினா சின்ட்ரெல்லா ரோஸ் விருதுநகர்(1) (95/100)

 

9.நெல்லை L.சுபகலா,அம்பாசமுத்திரம்  (4) (86/100)

 

10.இராமச்சந்திரன்,மதுக்கூர் (14)  (66/100)

 

11.சாந்தினி தினேஷ்(11) (71/100)

 

12.சரஸ்வதி  பாஸ்கரன்,திருச்சி(3) (87/100)

 

13.ஸ்ரீபாலாஜி,காரைக்குடி  (15) (60/100)

 

14.காலீஸ்வரன்,(12) (70/100)

 

15.செய்யது உசேன்,சவுதி (13) (67/100)

 

நண்பரே. அடைப்புக் குறிக்குள் உள்ள எண்கள் தான் தரவரிசை எண்கள்.

மதிப்பெண்களையும் கொடுத்துள்ளேன்.

அவை

கருத்து :40 மதிப்பெண்

சொல்லாட்சி : 30

கவிதைநடை : 30

 

எனக் கொண்டு வகுத்தேன்.

இவை என் தேர்வுதான். இறுதி முடிவு உங்களிடம்.

 

இதில் இருப்பவர்களை முன்பின் எனக்குத் தெரியாது. நடுவுநிலையோடுதான் ஆய்ந்தேன்.

 

தேர்வு செய்யப் பணித்தமைக்கு மிக்க நன்றி!  அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

நன்றி!  வணக்கம்!!

என் முகவரி :

திரு.ம.வரதராஜன்

4/102, சுந்தரமூர்த்தி தெரு, சத்தியமூர்த்தி குடியிருப்பு, மேற்கு சாபர்கான்பேட்டை, சென்னை : 600083.

தமிழ்நாடு, இந்தியா.

9840457176, 9791528122

 

தங்களுக்கும், நண்பர் சசித் சசி அவர்களுக்கும், நேசகானம் வானொலிக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகுக. தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

 

மலேசியா சசித்சசி: நல்லாதரவோடும்…

நடுநிலை நோக்கோடும்…

கால நேரத்தை கணக்கிற்கொள்ளாமல்…

நமது வலைதள வானொலியின் நிகழ்ச்சியில் பங்களித்தமைக்கு….

மனமார்ந்த நன்றிகளை

கூறிக்கொள்கிறேன்….

திரு.ம.வரதராஜன் அவர்களே….

…..என்றும் ஊடக உறவில்

_சசித்சசி மலேசியா

 

——————————————————————————————————————————————–

கலந்து சிறப்பித்த

அனைத்துள்ளங்களுக்கும்…..

நன்றிகளை நவில்கிறது…

அனைத்துள்ளங்களுக்கும்…..

பரிசுகள் உண்டு.

 

 

நேசகானம்

——————————————————————————————————————————-

 

 

 

நேசமுடன்

கே. பிரபாகரன்

நேசகானம்

மின்னஞ்சல் :admin@nesaganam.com,

prabak78@gmail.com

 

செல் : 9488992571

வாட்ஸ்அப் : 9488992571