அப்பாவின் பாட்டு

0
315

தேன்தமிழின் மலரும் நினைவுகள்

இருபதாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். இவர் தனது பக்திப் பாடல்களால் தமிழிசைக்கு ஒரு புதிய எழுச்சியினை தோற்றுவித்தவர்……!

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில், வேற்று மொழி கீர்த்தனைகளுக்கு, பாடலின் பொருள் விளங்காமல், வெறும் இராகத்திற்காகவும், இசைக்காகவும் தலையாட்டி வந்த தமிழ் மக்களுக்கு, எளிய மொழியில், இனிய தமிழில், தமிழிசையை அறிமுகம் செய்து வைத்தவர்……!

இவர்…. தமிழிசைக்கும், இறையுணர்விற்கும் இடையே பாலமாய் இருந்தவர்.

உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பெறும் இவர் விருந்தோம்பலில் நிகரற்றவர்…..!

ஏறக்குறைய நான்காயிரம் பக்தி இசைப் பாடல்களுக்கு மேல் இயற்றி சாதனை படைத்தவர்…..!

இவர் இருபதுக்கும் மேலான சிறந்த வடமொழி தோத்திரப்பாக்களை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். அவற்றுள் பம்பாய் சகோதரிகள் பாடிய T.Series தயாரிப்பில் வெளிவந்த ஸ்ரீ வெங்கேடச சுப்ரபாதம், வெளியிடப்பட்ட அன்றே ஒரு லட்சம் ஒலி நாடாக்கள் விற்றதனால் தங்கத்தகடு‘ (Golden Disk) விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் திரை இசைப்பாடல்கள், மொழிமாற்றப்பாடல்கள், கவிதைகள், சிறப்புச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பக்திப்பாடல்கள், தனி பாடல்கள் இயற்றுதல் போன்ற பல சிறப்புத் திறன்களைக் கொண்ட பன்முக ஆளுமை படைத்தவர்.

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் மகள் திருமதி தேன்தமிழ்  அவர்களோடு ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு. சின்னஞ்சிறு பெண் போலே விநாயகனே வினை தீர்பவனே திருப்பதி மலை வாழும் வெங்கடேசா பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே விநாயகனே ! வினை தீர்ப்பவனே ! திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

உள்ளிட்ட தேன் சொட்டும் பாடல்கள் நினைவில் சுழல அற்புதமான 
காணொளி மற்றும் பாடல் நிகழ்ச்சி விரைவில்
உங்கள் நேசகானத்தில் ...

எண்ணமும்,இயக்கமும் : காரைக்கால் கே.பிரபாகரன்

நேசகானம்
உலகத் தமிழர்களின் கலை மேடை
www.nesaganam.com
Android Apps : nesaganam
Youtube : nesaganam channel
FB : நேசம் மீடியா ஒர்க்ஸ்
Twitter : nesaganam
Whatsapp : ‎‎‎9488992571
[vc_video link=”https://youtu.be/Czd13m1QBWI” el_width=”50″ el_aspect=”43″ title=”அப்பாவின் பாட்டு”]