அக்கரைப் பச்சை

0
258

அக்கரையில் தெரியும்
அத்தனையும்
இக்கரையில் இருந்து
கண்ணுற்றால் பச்சைதான்.

அக்கறையோடு அருகில்
ஆராய்ந்தால் இங்கும்
அது பச்சைதான்
இச்சைகளே உந்துசக்தி.

அக்கரை நோக்க
பிச்சையெடுத்தேனும்
பிழைக்கலாம் அக்கரை
சென்றால் என்பதும்
தூரத்து பச்சைதான்.

மணமாகாத இளைஞனுக்கு
மணவாழ்க்கை பச்சை
மணமானவனுக்கோ
தனிவாழக்கை பச்சை

ஏழைக்கோ
பணக்காரவாழ்வு பச்சை
பணம் படைத்தவனுக்கோ
ஏழையின் நிம்மதி பச்சை

பெண்பிள்ளைகள்பெற்றவர்கோ
ஆண்பிள்ளைகள் பச்சை
ஆண்பிள்ளைகள் பெற்றவர்கோ
பெண் பிள்ளைகள் பச்சை
பிள்ளைகளே பெறாதவர்க்கு
பிள்ளைகளே பச்சை.

கடைகளில் புடவை
வாங்குகையில்
அடுத்தவர் எடுப்பதே பச்சை
தன் மனைவி அருகேஇருக்க
கடந்துசெல்லும் பெண்ணும் பச்சை..

இருப்பதைக்கொண்டு
வளமாய் வாழ்ந்தால்
எல்லோர்வாழக்கையும் பச்சை
இச்சை தீராதலைந்தால்
வாழ்க்கை என்றும் சர்ச்சை.

காரைக்கால் ராதா ஸ்ரீ

உங்கள் விடியல்