2015 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக், யூ டியூப், போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக உலகத்தமிழ் நெஞ்சங்களை நேசத்தால் ஒருங்கிணைத்தது நேசகானம். நேசகானம் எனும் ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக நேசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பலஆக்கப்பணிகளை செய்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வாட்ஸ்அப் குழுக்களில் கொண்டு அவர்களால் அவர்களை கொண்டு நேசகானம் பல்வேறு நிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்து நேசகானம் வாட்ஸ்அப் ரேடியோ என்ற பெயர் பெற்றது.